மூன்றாம் உலக நாடுகள் போல அமெரிக்காவிலும் சட்டம் ஒழுங்கு முற்றாக அரசியலாகி வருகிறது. அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் Democratic, Republican ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க சட்டங்களை தமது நலன்களுக்கு பயன்படுத்த முன்வந்துள்ளனர். திங்கள்கிழமை ஆட்சிக்கு வந்த Republican கட்சி சனாதிபதி ரம்ப் பதவி ஏற்ற தினமே 2021ம் ஆண்டு January 6ம் திகதி காங்கிரஸ் உள்ள US Capital லில் வன்முறை செய்ததால் கைதான 1,500 பேருக்கு பூரண மன்னிப்பு (full pardon) […]
பைடென் அமெரிக்காவில் தடை செய்த சீனாவின் TikTok சேவையை இன்று முதல் சனாதிபதியாகும் ரம்ப் மீண்டும் Executive order மூலம் சேவைக்கு வர அனுமதி அளித்துள்ளார். சுமார் 14 மணித்தியாலங்கள் அமெரிக்காவில் தடைப்பட்ட TikTok மீண்டும் சேவைக்கு வந்திருந்தாலும் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது. பைடேன் அடித்த பாம்பை ரம்ப் மீண்டும் தன் கையால் அடிக்க முனைவர். இவர் தனது முதலாம் ஆட்சியிலும் TikTok சேவையை அமெரிக்காவில் தடை செய்ய முனைந்தவர். ByteDance என்ற […]
காசாவில் ஞாயிறு முதல் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி உள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி முதல் நாள் 3 இஸ்ரேலிய கைதிகள் ஹமாஸால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் 90 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது. கைதிகள் விடுதலை தொடரும். இந்த கைதிகள் பரிமாற்றம் ஹமாஸ் முற்றாக அழிந்துவிடவில்லை என்று காட்டுகிறது. இஸ்ரேல் காசா மக்களையும், அவர்களின் வீடுகளையும் அழித்த அளவுக்கு ஹமாஸை அழிக்கவில்லை. ஹமாஸால் விடுதலை செய்யப்பட்ட 3 இஸ்ரேலியர்களையும் செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேல் படையிடம் கையளித்துள்ளது. […]
தான் சனாதிபதி ஆகியவுடன் சீனாவுக்கு பயணிக்க விரும்புவதாக ரம்ப் தனது அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். அத்துடன் அவர் இந்தியாவுக்கும் செல்லக்கூடும். இந்திய பிரதமர் மோதியுடன் ரம்ப் தனது முதல் ஆட்சியில் நெருக்கமான உறவை கொண்டிருந்தாலும், சீன சனாதிபதியுடன் ரம்ப் தொடர்ச்சியாக முரண்பட்டு இருந்தார். ரம்ப் நாளை திங்கள் இடம்பெறவுள்ள தனது பதவியேற்பு நிகழ்வுக்கு சீன ஜனாதிபதியை அழைத்து இருந்தாலும், சீன சனாதிபதி சீ தனக்கு பதிலாக Han Zheng என்ற உதவி சனாதிபதியையே அனுப்புகிறார். ரம்பும் சீயும் கடந்த […]
இலங்கை சனாதிபதி அனுரவின் சீன பயணத்தின்போது இலங்கையில் சீனா $3.7 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் இணக்கத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா இயக்கும் துறைமுகத்துக்கு அண்மையிலேயே இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமையும். இந்த ஆலை தினமும் 200,000 பரல் எணெய்யை சுத்திகரிக்கும். 2019 ஆண்டு இந்த சுத்திகரிப்பு நிலைய திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், 2023ம் ஆண்டு அந்த உரிமை பறிக்கப்பட்டு இருந்தது. முறிந்துபோன இந்த Hambantota Oil Refinery […]
TikTok என்ற social media இணையத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக அமெரிக்க social media கள் மிரண்டு TikTok ஐ அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு மூலம் தடை செய்ய முனைகின்றன. அமெரிக்க பாவனையாளரின் தரவுகள் சீனாவின் கைக்கு கிடைக்கும் என்ற பயமே காரணம் என்று கூறினாலும், உண்மை அதுவல்ல. அமெரிக்க அரசின் இச்செயலால் விசனம் கொண்ட அமெரிக்க TikTok பாவனையாளர் தற்போது XiaoHongShu (Little Red Book) என்ற இணையத்துக்கு தாவுகின்றனர். இதை அமெரிக்கர் RedNote என்றே […]
Elan Musk என்பவரின் SpaceX நிறுவனம் இன்று ஏவிய Starship ஏவி சுமார் 20 நிமிடங்களின் பின் வானத்தில்வெடித்து சிதறியுள்ளது. அமெரிக்காவின் Texas மாநிலத்தில் ஏவப்பட்ட இந்த ஏவல் இதன் 7ஆவது பரிசோதனையாகும். Starship கலத்தை ஏவிய Super Heavy Booster என்ற ஏவுகருவி பத்திரமாக Chopsticks கருவிகள் மூலம் பத்திரமாக பிடிக்கப்பட்டன. ஆனால் இந்த booster ஏவிய Starship என்ற கலமே வெடித்து விழுந்துள்ளது. வானத்தில் சிதறும் இந்த Starship பாகங்களில் இருந்து தப்பிக்க Caribbean […]
ஞாயிறு 19ம் திகதி முதல் காசாவில் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு அடுத்த தினம், 20ம் திகதி, பைடென் வீடு செல்ல ரம்ப் சனாதிபதியாக பதவி ஏற்பார். பைடென் தரப்பும், ரம்ப் தரப்பும் யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட தனித்தனியே தாங்கள் மட்டுமே காரணம் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ரம்ப் அணி இந்த யுத்த நிறுத்த பேச்சுக்களில் பங்கு கொண்டிருந்ததை பைடென் புதன்கிழமை ஏற்றுக்கொண்டிருந்தார். பைடெனின் கடைசி தினத்தில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும், இதன் […]
அடாத மழையில் நனைந்து, கிழிந்தாலும் விடாது ஏறிய வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2025 பட்டங்கள் கீழே: பட்ட போட்டி பட்டங்களின் தரம் உயர 3 வழிகள்: 1) வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் பங்கு கொள்ளும் பட்டங்களில் ஏறக்குறைய அனைத்தும் ‘பெட்டி’ பட்டங்களே. பெட்டி பட்டங்களுக்கு மேலே பொம்மைகளை வைப்பது அல்லது பெட்டி பட்டத்தை சுற்றி உயிரின உடல் அமைப்பது பெரும் மகிமை ஆகாது. பெட்டி பட்டம் எவராலும் கட்டி ஏற்றப்படக்கூடியது. பெட்டி பட்டத்தின் aerodynamics மிக சாதாரணமானது. ஆனால் 60, 70 அல்லது அதிலும் கூடிய […]
காசாவில் மீண்டும் யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த முயற்சிகள் கைகூடினால் முதல் கட்ட யுத்த நிறுத்தம் விரைவில் நடைமுறை செய்யப்படும். இக்காலத்தில் ஹமாஸ் 33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும். முதல் கட்ட யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் அன்றைய தினத்தில் இருந்து 16ம் தினம் இரண்டாம் கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகும். ஆனால் இந்த இரண்டாம் கட்ட பேச்சு காலத்தில் ஆட்சியில் இருக்கவுள்ள ரம்ப் என்ன செய்வார் என்பது எவருக்கும் தெரியாது. சில விசயங்கள் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளன. […]