அமெரிக்காவின் Colorado மாநிலத்து டென்வர் நகரின் Denver International விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பற்றியதால் பயணிகள் பாதுகாப்பு தேடி விமானத்தின் இறக்கைக்கு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பி உள்ளனர். Colorado மாநிலத்தின் Colorado Springs என்ற நகரத்தில் இருந்து Dallas Fort Worth விமான நிலையம் நோக்கி சென்ற விமானத்து இயந்திரம் ஒன்றில் உதறல் சத்தம் தோன்றியதால் விமானம் உடனே டென்வர் விமான நிலையத்துக்கு திசை திருப்பி தரை இறக்கப்பட்டது. தரை […]
ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதிய இறக்குமதி வரிகளை அறவிடவுள்ளார். இந்த வரியால் குறிப்பாக இந்திய மருந்து உற்பத்தி பெரும் பாதிப்பு அடைய உள்ளன. கடந்த கிழமை இந்திய வர்த்தக அமைச்சர் Piyush Goyal வெள்ளை மாளிகை விரைந்து ஒரு இணக்கத்துக்கு வர முனைந்தாலும் அது பயன் அளிக்கவில்லை. அமெரிக்கர் பயன்படுத்தும் மருந்துகளில் சுமார் 50% இந்தியா தயாரிக்கும் generic மருந்துகளே. பிரபல அமெரிக்க […]
கனடாவின் Ontario மாநில முதல்வர் (Premier) Doug Ford தனது மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு 25% மேலதிக ஏற்றுமதி வரி அறவிட அறிவித்ததால் பயம் கொண்ட ரம்ப் கனடாவின் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அறிவித்த 50% மேலதிக இறக்குமதி வரியை இடைநிறுத்தி உள்ளார். அதனால் Ford தனது மின்சார வரியையும் இடைநிறுத்தி உள்ளார். ஆனாலும் ரம்பின் இரும்பு, அலுமினியம் மீதான 25% வரி நடைமுறையில் இருக்கும். அதாவது செவ்வாய் ரம்ப் அறிவித்த 50% புதிய […]
உலகில் முதல் மாசான 20 நகரங்களில் 19 ஆசியாவில் உள்ளன என்று கூறுகிறது சுவிஸ்சலாந்தை தளமாக கொண்ட IQAir என்ற ஆய்வு நிறுவனம். அதில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் அதிகம் மாசான நகரங்களாக Byrnihat, Faridabad, Loni, Delhi, Gurugram, Nodia ஆகியன உள்ளன. அதேவேளை பாகிஸ்தானில் 4 மாசான நகரங்களும், சீனாவிலும் கசகஸ்தானிலும் ஒவ்வொரு மாசான நகரங்கள் உள்ளன. Chad என்ற நாட்டின் தலைநகர் ஆசியாவுக்கு அப்பால் உள்ள அதிகம் மாசான நகரமாக […]
சனாதிபதி ரம்ப் செய்யும் அரசியல், பொருளாதார தாண்டவம் காரணமாக அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை (recession) ஏற்படலாம் என்ற பயம் வலுவடைந்து வருகிறது. இந்த பயம் காரணமாக அமெரிக்காவின் பங்குச்சந்தை நேற்று திங்களும் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. ரம்பும் மறைமுகமாக பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்கள் அவர் பொது இடங்களில் தோன்றாது மறைந்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா-கனடா-மெக்சிக்கோ ஆகிய 3 நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள NAFTA என்ற வர்த்தக […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சியில் ரம்புக்கு அடுத்து இரண்டாவது பலம் கொண்ட நபராக உள்ளவர் இலான் மஸ்க் (Elon Musk). ஆனால் அவரின் மின்னில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனமான Tesla பங்குச்சந்தையில் சுமார் $700 பில்லியனை கடந்த 3 மாதங்களில் இழந்துள்ளது. இது சுமார் 45% இழப்பு. ரம்ப் சனாதிபதி தேர்தலில் வென்றபின், டிசம்பர் 17ம் திகதி இலானின் Tesla நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $1.5 டிரில்லியன் ($1,500 பில்லியன்) பெறுமதியை கொண்டிருந்தது. தற்போது Tesla […]
மார்க் கார்னி (Mark Carney) கனடாவின் இடைக்கால பிரதமர் ஆகியுள்ளார். கனடிய பிரதமர் ரூடோ உட்கட்சி அழுத்தங்கள் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிய பின் அவரின் லிபரல் கட்சி 9ம் திகதி ஞாயிறு மார்க் கார்னியை இடைக்கால பிரதமராக தெரிவு செய்துள்ளது. கார்னிக்கு கட்சி உறுப்பினர்களின் 85.9% வாக்குகளும், ரூடோ விரட்டப்பட பிரதான காரணியாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் Chrystia Freeland க்கு 8.0% வாக்குகளும், Karina Gould க்கு 3.2% வாக்குகளும், Frank […]
சிரியாவில் புதிய அரச படைகளுக்கும் முன்னாள் சனாதிபதி அசாத் ஆதரவு ஆயுத குழுக்களுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெறும் மோதல்களுக்கு இதுவரை சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 745 பேர் பொதுமக்கள் என்றும், 125 பேர் அரச படையினர் என்றும், 148 பேர் அசாத் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. பலியான Alawite இன பொதுமக்களில் பலர் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் Latakia மாநிலத்தில் இடம்பெறுகின்றன. இந்த கடலோர மாநிலத்தில் […]
யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துக்கும் இடையில் இந்தியாவின் IndiGo விமான நிறுவனம் சேவை வழங்குகிறது. உண்மையில் இந்த சேவை சென்னை விமான நிலையம் ஊடே செல்லும். பலாலிக்கும் திருச்சிராப்பள்ளிக்கு இடையிலான சேவைக்கு இருவழி கட்டணம் சுமார் $275 ஆக உள்ளது. இந்த கட்டணம் 7 kg carry-on பொதியயையும், 15 kg cabin பொதியயையும் உள்ளடக்குகிறது. சென்னை இணைப்பு காரணமாக ஒவ்வொரு வழி பயணத்துக்கும் சுமார் 7.5 மணித்தியாலங்கள் தேவைப்படும். இது […]
கனடாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு சீனா மேலதிக இறக்குமதி வரியை (tariffs) சனிக்கிழமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனா தயாரிக்கும் மின்னில் இயங்கும் கார், மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கு கனடா இறக்குமதி வரி நடைமுறை செய்தமைக்கு பதிலடியே சீனாவின் இன்றைய புதிய வரி. கனடாவின் rapeseed எண்ணெய் (canola vegetable எண்ணெய் வகை), oil cake, கடலை போன்றவற்றுக்கு சீனா 100% இறக்குமதி வரியும், கடலுணவு, பன்றி இறைச்சி […]