British Steel செயற்பாட்டை கையேற்கிறது பிரித்தானிய அரசு

British Steel செயற்பாட்டை கையேற்கிறது பிரித்தானிய அரசு

லண்டன் நகருக்கு வடக்கே Scunthorpe என்ற இடத்தில் உள்ள British Steel என்ற இரும்பு தயாரிக்கும் ஆலையின் தினசரி செயற்பாட்டை தனது கைக்கு கொண்டுவந்துள்ளது பிரித்தானிய அரசாங்கம். சனிக்கிழமை பாராளுமன்றத்தை விசேட அழைப்பில் அழைத்தே இந்த தீர்மானம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

இந்த உருக்கு ஆலை சீனாவின் Jingye Group என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் ரம்ப் அண்மையில் பிரித்தானிய இரும்பு உட்பட அனைத்து இரும்பு இறக்குமதிகளுக்கும் மேலதிக 25% வரி விதித்ததால் தினமும் $910,000 இழப்பை சந்திப்பதால் இந்த தொழிசாலையை மூட அறிவித்தது.

அதனால் சுமார் 2,700 தமது தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் பிரித்தானியா சொந்தமாக இரும்பு தயாரிக்கும் வல்லமையையும் இழக்க நேரிட்டது.

பிரித்தானிய அரசு இந்த உருக்கு ஆலையின் தினசரி செயற்பாட்டை கையேற்றாலும், இந்த ஆலையின் உரிமை தொடர்ந்து Jingye நிறுவனத்திடம் இருக்கும். இந்த ஆலையை கொள்வனவு செய்ய வேறு எந்த நிறுவனமும் இதுவரை முன்வரவில்லை.

இது பிரித்தானிய அரச சொத்து ஆக்கப்பட்டால் பொதுமக்களின் வரிப்பணம் விரையம் செய்யப்படும் என்ற பயமும் உண்டு.