Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

Brexit பின் பிரித்தானியா, பிரான்ஸ் Jersey தீவில் முரண்பாடு

கடந்த சில தினங்களாக, Brexit பிரிவுக்கு பின், பிரித்தானியாவும், பிரான்சும் மீன்பிடி உரிமைகளில் முரண்பட ஆரம்பித்து உள்ளன. பிரான்சுக்கு அண்மையில், சுமார் 22 km தூரத்தில் அமைத்துள்ள Jersey என்ற பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமையே இந்த முரண்பாட்டுக்கு காரணம்.

அண்மையில் Jersey தீவு அதை சுற்றி உள்ள கடலில் மீன் பிடிக்கும் உரிமைக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது. அதனால் பாதிக்கப்பட்ட பிரென்சு மீனவர் இன்று தமது படகுகளுடன் அங்கு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பதிலுக்கு பிரித்தானியா தனது HMS Severn, HMS Tamar ஆகிய காவல் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி உள்ளது. நிலைமையை கண்காணிக்கவே அவற்றை அனுப்பியதாக பிரித்தானியா கூறி உள்ளது.

சுமார் 108,000 மக்களை கொண்ட, பிரித்தானியாவுக்கு உரிய Jersey தீவு கணிசமான அளவில் சுதந்திரமானது (British crown dependencies). பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்த காலத்திலும் இந்த தீவு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கவில்லை.

இந்த தீவு தனது புதிய கட்டுப்பாடுகளை நீக்காவிடின் பிரான்ஸ் மின் தான் வழங்கும் மின்னை துண்டிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த தீவுக்கான மின்னின் 95% பிரான்சில் இருந்தே கடலடி இணைப்பு மூலம் பெறப்படுகிறது.