சனிக்கிழமை சவுதி எண்ணெய் தயாரிப்பு நிலையங்கள் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கியதால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி சுமார் 50% ஆல் தடைப்பட்டது. அதன் காரணமாக இன்று திங்கள் ஐரோப்பிய எண்ணெய் சந்தையில் Brent எண்ணெய் சுட்டி ஆரம்பத்தில் 19% ஆல் அதிகரித்து, பரல் ஒன்று $71.95 ஆக அதிகரித்தது. பின்னர் விலை சற்று குறைத்தாலும், உலக அளவில் எண்ணெய் விலை சிலகாலம் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
அதேவேளை அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) எண்ணெய் சுட்டி 15% ஆல் அதிகரித்து, பரல் ஒன்று $63.34 ஆக உள்ளது.
.
சவுதி பாதிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்பு நிலையங்களை திருத்தி, எண்ணெய் உற்பத்தியை மீண்டும் முழு அளவுக்கு கொண்டுவரும் வரை உலக சந்தையில் எண்ணெய் விலை சற்று உயர்வாகவே இருக்கும்.
.
எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள எண்ணெய்யை சந்தைக்கு விடுமாறு கூறியுள்ளார்.
.
இந்த தாக்குதலை Houthi குழு அல்ல, ஈரானே செய்துள்ளது என்கிறது ரம்ப் அணி.
.