பிரதமர் லிஸ் டிரஸ் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்வந்திருந்தார். ஆனால் அவர் இன்று தான் போட்டியில் இருந்து ஓதுங்குவதாக கூறியுள்ளார்.
இவர் தனக்கு போட்டியிட தேவையான 100 பாராளுமன்ற அங்கத்தவரின் ஆதரவு உண்டு என்று கூறியிருந்தாலும், இதுவரை 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பகிரங்கமாக தமது ஆதரவை Johnson னுக்கு வழங்கி இருந்தனர்.
Johnson பின்வாங்கிய உடன் தற்போது முன்னணியில் உள்ள Rishi Sunak முன்னாள் பிரதமர் Jognson னை புகழ்ந்து கருத்து தெரிவித்து உள்ளார்.
Johnson பின்வாங்கிய நிலையில் Rishi Sunak பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
Penny Mordaunt என்பவர் தற்போதும் போட்டியில் இருந்தாலும் அவருக்கு இதுவரை 24 உறுப்பினர் மட்டுமே பகிரங்கமாக ஆதரவு வழங்கி உள்ளனர்.
Penny Mordaunt போட்டியில் இருந்து விலகினால், அல்லது தேவையான 100 உறுப்பினர்களின் ஆதரவை பெற தவறினால் Rishi Sunak போட்டியின்றி பிரதமர் பதவியை அடைவார்.