Bond மூலம் $500 மில்லியன் பெறவுள்ளது இலங்கை

BankOfCeylon

Bond விநியோகம் மூலம் $500 மில்லியனை இலங்கை பெறவுள்ளதாக இன்று இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. அத்துடன் இரண்டு அரச கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளும் (hotel) தனியார் வசம் விடப்படவுள்ளது. இலங்கை கடனில் மூழ்கி உள்ளமையே இந்த நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் என்று கருதப்படுகிறது.
.
இந்த வருடம் இலங்கை சுமார் $12.85 பில்லியன் கடனை அடைக்கவேண்டும் என்றும், அதில் $2.9 பில்லியன் அந்நிய நாட்டு கடன் என்றும் கூறப்படுகிறது. இந்த கடன்களின் வரி (interest) மட்டும் $5.36 மில்லியன் ஆகும்.
.
Sri Lanka Development Bond என்ற இந்த bond இலங்கை இந்த வருடம் விநியோகிக்கவுள்ள $3 பில்லினில் bondடின் ஒரு பாகமாகும்.
.
அதேவேளை இலங்கை அரசுடைமையாக இருக்கும் Grand Hyatt Colombo என்ற hotelலுக்கும் $293 மில்லியன் முதலீடு கொண்ட முதலீட்டாளர் தேடப்படுகிறார். புதிய முதலீட்டாளர் 100% உரிமையையும் பெறுவர்.
.

அத்துடன் கொழும்பில் இயங்கும் Hilton International hotelலுக்கும் முதலீட்டாளர் தேடப்படுகிறார். அரசு hotelலில் அரசு கொண்டுள்ள 51% உரிமை புதிய முதலீட்டாருக்கு கைமாறும்.
.