அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) திணைக்களத்தின் பிரதான தொழில்களில் ஒன்று அமெரிக்காவில் சேவைக்கு வரும் புதிய விமானங்களை சரிபார்த்து சான்றிதழ் செய்வதே. FAA சான்றிதழ் பெற்ற விமானங்கள் மட்டுமே அமெரிக்காவின் வானில் பறக்கலாம்.
.
தம்மால் பெரும் தொகை செலவழித்து தம் நாட்டுள் பறக்கும் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாத நாடுகளும் அமெரிக்காவின் சான்றிதழை நம்பியே அந்த விமானங்களை கொள்வனவு செய்யும்.
.
பண பலம் கொண்ட Boeing தயாரித்த விமானங்களின் தராதரத்தை சுயமாக பரீட்சித்து உறுதி செய்யவேண்டிய FAA ஊழியர்கள் தமது கடமையை செய்யாது Boeing நிறுவனத்துடன் நெருங்கிய உறவை வளர்த்துவிட்டார்கள் என்று குற்றம் கூறப்படுகிறது. அதனாலேயே Boeing 737 MAX 8 விமானங்கள் குறைபாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதிலளித்த FAA அதிகாரி Daniel Elwell தமது தொழிலை தரமாக செய்ய 10,000 ஊழியர்களும், $1.8 பில்லியன் பணமும் தேவை என்றுள்ளார்.
.
தற்போது FAA அமைப்பிடம் சுமார் 1,300 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 745 பேர் விமானங்களை பரீட்சிக்கும் விமானிகள், பொறியியலாளர், திருத்துவோர். அத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை $239 மில்லியன் மட்டுமே.
.