அமெரிக்காவின் பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing இன்று சனிக்கிழமை தனது புதிய 777 X வகை பயணிகள் விமானத்தை வெற்றிகரமாக வெள்ளோட்டம் செய்துள்ளது. இந்த விமானம் பொதுவாக நீண்டதூர பயணங்களுக்கு பயன்படும். இன்றைய பறப்பு உட்பட பல சோதனைகளின் பின்னரே அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) 777 X விற்பனைக்கு உரிமை வழங்கும்.
.
சுமார் $440 மில்லியன் பெறுமதி கொண்ட இவ்வகை விமானம் ஒன்று சுமார் 426 பயணிகளை காவக்கூடியது. இது தற்போது சேவையில் உள்ள Boeing 777 விமான வகையிலானது. Boeing 777 X இறக்கை பகுதி அகலம் சுமார் 72 மீட்டர் (235 அடி).
.
சில யுத்த விமானங்களைப்போல் 777 X வகை விமான இறக்கைகளின் அந்தங்கள் மேல்நோக்கி மடிக்கப்படக்கூடியன. பயணிகள் விமானங்களில் இந்த செயல்பாடு அமைவது இதுவே முதல் தடவை.
.
ஏற்கனவே சுமார் 300 இந்த 777 X வகை விமானங்களை கொள்வனவு செய்ய Emirates, Cathay Pacific, Singapore Airlines, Qatar Airways ஆகியன இணங்கி உள்ளன.
.
Boeing நிறுவனத்தின் இரண்டு புதிய 737 MAX வகை விமானங்கள் மேலேறி சில நிமிடங்களுள் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் அனைத்து 737 MAX விமானங்களும் சேவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. அதன் தயாரிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
.