Alaska Airlines விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 Max 9 வகை விமானம் ஒன்று 16,000 அடி உயரத்தில் பறக்கையில் யன்னல் பகுதியில் பெரியதொரு பாகத்தை இழந்துள்ளது. அந்த விமானம் உடனே தரையிறங்கியதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
Alaska Airlines flight 1282 அமெரிக்காவின் Oregon மாநிலத்து Portland நகரில் இருந்து கலிபோர்னியா செல்ல இருந்தது. ஆனால் அந்த விமானம் 16,000 அடி உயரத்தை அடைந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் 177 பயணிகளும், பணியாளர்களும் இருந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
Alaska Airlines உடனே தன்னிடம் உள்ள 65 இவ்வகை விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் Boeing 737 Max 8 வகை விமானங்கள் இரண்டு வீழ்ந்து அனைவரும் பலியாகியபடியால் இவ்வகை விமானங்கள் நீண்ட காலம் சேவையில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன.
உலகில் தற்போது சுமார் 1,300 Boeing 737 Max வகை விமானங்கள் சேவையில் உள்ளன.