Butch Wilmore, Suni Williams ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் Boeing நிறுவனம் தயாரித்த Starliner என்ற விண்கலத்தில் ஜூன் மாதம் 5ம் திகதி ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வுகூடம் சென்று இருந்தனர்.
Starliner விண்கலம் பயணிகளுடன் விண்ணுக்கு பயணித்தது இதுவே முதல் தடவை.
சுமார் 2 கிழமைகளில் பூமிக்கு திரும்ப இருந்த இவர்கள் 2 மாதங்கள் ஆகியும் பூமிக்கு திரும்பவில்லை. காரணம் இவர்களை காவி சென்ற Starliner விண்ணில் பழுதடைந்து உள்ளது.
Boeing விஞ்ஞானிகளும், நாசா விஞ்ஞானிகளும் பழுதடைந்த Starliner கலத்தை திருத்தி அமைக்க முனைகின்றார். இந்த காலத்தின் Helium வாயு கசிகிறது. அதற்கான காரணத்தை Boeing இதுவரை திடமாக அறியவில்லை.
Starliner திருத்த வேலை பொய்த்தால் மேற்படி இருவரும் SpaceX நிறுவனத்தின் விண்கலத்தில் பூமிக்கு திரும்பக்கூடும். அவ்வாறாயின் இந்த இருவரும் அடுத்த ஆண்டே பூமிக்கு திரும்புவர்.