Birthright citizenship சட்டத்தை ரம்பால் அழிக்க முடியுமா?

Birthright citizenship சட்டத்தை ரம்பால் அழிக்க முடியுமா?

அமெரிக்காவில் உள்ள birthright citizenship சட்டத்தை அழிக்க முனைகிறார் சனாதிபதி ரம்ப். அதை அவரால் இலகுவில் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த உரிமை அமெரிக்காவின் Constitution னில் உள்ளது.

1865ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த 13ம் Amendment அமெரிக்காவில் கருப்பர் போன்ற அடிமைகளை (slavery) கொண்டிருப்பதை தடை செய்தது (abolished). 1868ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த 14ம் Amendment அமெரிக்காவில் பிறந்த அடிமைகளின் பிள்ளைகளுக்கு குயியுரிமை வழங்கியது.

ஆனால் இந்த birthright citizenship சட்டம் தற்போது பல வெளிநாட்டவரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. தென் அமெரிக்க பொருளாதார அகதிகள் களவாக அமெரிக்கா சென்று அங்கு குழந்தைகளை பெறுவார். அந்த குழந்தைகள் birthright citizenship சட்டப்படி அமெரிக்கர் ஆவர். பெற்றாரை அமெரிக்காவில் நாகூராம் இட உதவும் இந்த குழந்தைகளை anchor babies என்று அழைப்பர். இந்த குழந்தைகள் மூலம் சட்டவிரோதமாக நுழைந்து வாழும் பெற்றார் அமெரிக்க குடியுரிமை பெற முனைவர்.

செல்வந்த வெளிநாட்டவர் சிலர் அமெரிக்காவில் படிக்க விசா பெற்று சென்று அக்காலத்தில் அமெரிக்காவில் பிள்ளையை பெறுவார். பிள்ளை பிறந்தவுடன் படிப்பை கைவிட்டு தாயும், பிள்ளையும் தமது நாடுகளுக்கு சென்றுவிடுவார். இவர்களுக்கு பிள்ளையின் birthright citizenship பிற்காலத்தில் பயன்படக்கூடிய ஒரு இரண்டாம் பாதுகாப்பு மட்டுமே.

2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 250,000 குழந்தைகள் களவாக அமெரிக்காவில் வாழும் தாய்மாருக்கு பிறந்ததாக Pew Research கணித்துள்ளது.

அமெரிக்க Constitution சட்டத்தில் மாற்றம் கொண்டுவர காங்கிரசின் House, Senate ஆகிய இரண்டு சபைகளும் 2/3 ஆதரவை வழங்கவேண்டும். ஆனால் ரம்ப் அந்த அளவு ஆதரவை கொண்டிருக்கவில்லை.

அத்துடன் ரம்பின் இந்த முயற்சிக்கு எதிராக 18 மாநிலங்களும், San Francisco நகரமும், தலைநகர் DC யும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்குகள் பல ஆண்டுகள் நீடிக்கலாம்.