அமெரிக்காவின் நவம்பர் மாத சனாதிபதி தேர்தலில் ஒபாமா காலத்து உதவி சனாதிபதி பைடென் (Joe Biden) வெல்லும் சாத்தியம் அதிகமாகி வருகிறது. தற்போதைய சனாதிபதி ரம்ப் படிப்படியாக தனது ஆதரவை இழந்து வருகிறார். குறிப்பாக கரோனா விசயத்தில் ரம்பின் நடவடிக்கைகள் அவரின் வீழ்ச்சிக்கு முதலாவது காரணமாகிறது.
அமெரிக்க சனாதிபதி தேர்தலில் வாக்குகளை தேசிய அளவில் கணித்து வெற்றியாளரை தெரிவு செய்வதில்லை. பதிலா electoral college (vote) என்ற முறையே பயன்படுத்தப்படும். அதனாலாயே தேசிய அளவில் 48.2% வாக்குகள் பெற்ற Clinton தோல்வி அடைய 46.1% வாக்குகள் பெற்ற ரம்ப் 2016 ஆம் ஆண்டு சனாதிபதியாகினார். 2016 ஆம் ஆண்டு ரம்புக்கு கிடைத்த electoral வாக்குகள் 304, Clinton பெற்றது 227.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையான electoral votes உண்டு. Alaska, Delaware, Montana, North Dakota, South Dakota, Vermont, Wyoming போன்ற சனத்தொகை குறைந்த மாநிலங்கள் 3 electoral வாக்குகளை கொண்டுள்ளன. இதுவே மிக குறைந்த electoral வாக்குகள் ஆகும். சனத்தொகை மிகையான மாநிலமான California மொத்தம் 55 electoral வாக்குகளை கொண்டுள்ளது. அடுத்து Texas 38 வாக்குகளை கொண்டுள்ளது. New York, Florida 29 வாக்குகளை கொண்டுள்ளன.
ஒரு மாநிலத்தில் வெல்லும் போட்டியாளர் அந்த மாநிலத்தின் அனைத்து electoral வாக்குகளையும் பெறுவார். ஒரு சில மாநிலங்கள் மட்டும் வாக்குகளை பங்கிட்டு வழங்கும். உதாரணமாக கலிபோர்னியாவில் ஒருவர் 50.1% வாக்குகளை பெற்று, மற்றவர் 49.9% வாக்குகளை பெற்றால், 50.1% வாக்குகளை பெற்றவருக்கு அந்த மாநிலத்து 55 electoral வாக்குகளும் கிடைக்கும்.
தற்போது அமெரிக்கா முழுவதும் மொத்தம் 538 electoral வாக்குகள் உண்டு. அதில் குறைந்தது 270 வாக்குகளை பெறுபவர் சனாதிபதி ஆவார். வெல்பவர் ஜனவரி 20 ஆம் திகதி பதவியை ஏற்பார்.
பொதுவாக சில மாநிலங்கள் எப்போதுமே Democratic கட்சியை ஆதரிக்கும். வேறு சில எப்போதுமே Republican கட்சியை ஆதரிக்கும். அதனால் மீதமுள்ள ஒருசில மாநிலங்களே வெற்றியாளரை தீர்மானிக்கும். பின்வரும் மாநிலங்களே (swing states) மூன்றாம் வகைக்குள் அடங்கும்.
State | Electoral Votes | 2016 Votes | Now (Oct 6, 2020) |
Texas | 38 | Trump +9.1% | Trump +3.2% |
Florida | 29 | Trump +1.2% | Biden +3.5% |
Pennsylvania | 20 | Trump +0.7% | Biden +6.5% |
Ohio | 18 | Trump + 8.2% | Biden +1.0% |
Michigan | 16 | Trump +0.2% | Biden +5.8% |
Georgia | 16 | Trump +5.2% | Biden +0.3% |
North Carolina | 15 | Trump +3.7% | Biden +1.2% |
Virginia | 13 | Clinton +5.4% | Biden +11.0% |
Wisconsin | 10 | Trump +0.8% | Biden +5.6% |
Arizona | 11 | Trump +3.6% | Biden +3.4% |
Nevada | 6 | Clinton +2.4% | Biden +5.3% |
Iowa | 6 | Trump +9.5% | Biden +0.5% |
New Hampshire | 4 | Clinton +5.4% | Biden +8.4% |
Texas தவிர்ந்த முக்கியமான swing மாநிலங்களில் பைடென் முன்னணியில் உள்ளதால் பைடென் வெல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேர்தலுக்கு மேலும் 4 கிழமைகள் மட்டுமே உள்ளன.