1992 ஆம் ஆண்டு Babri மசூதி உடைக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் உதவி பிரதமர் L. K. அத்வானி, MM Joshi, Uma Bharti உட்பட அனைத்து பா. ஜ. கட்சி தலைவர்களும், தொண்டர்களும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மொத்தம் 49 பேர் மீது திட்டமிட்டு உடைப்பை செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 28 வருடங்கள் நீடித்த இந்த நீதிமன்ற வழக்கு இறுதியில் முற்று பெற்றது. குற்றம் சாட்டப்பட்டோருள் 17 பேர் ஏற்கனவே மரணமாகி உள்ளனர். தற்போது 92 வயதுடைய அத்வானி உட்பட உயிருடன் உள்ள 32 பேரும் குற்றசாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக போதிய அளவு ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்குக்கு 850 சாட்சிகளும், 7,000 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன.
மேற்படி 16 ஆம் நூற்றாண்டு மசூதி உடைக்கப்பட்ட பின்னர் தோன்றிய கலவரங்களுக்கு சுமார் 2,000 பேர் பலியாகி இருந்தனர்.
முன்னாள் நீதிபதி MS Liberhan தலைமையில் 17 வருடங்கள் இடம்பெற்ற விசாரணை குழு மேற்படி உடைப்பு திட்டமிட்ட செயல் என்றே முன்னர் கூறி இருந்தது. இந்தியாவின் விசாரணைகளை செய்த CBI யும் உடைப்பு திட்டமிட்ட செயல் என்றே கூறி இருந்தது.
மசூதி இருந்த இடத்தில் மோதி அரசு இராமர் கோவில் ஒன்றை அமைத்து வருகிறது. புதிய மசூதி ஒன்றுக்கு வேறு இடம் ஒன்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.