1961ம் ஆண்டுக்கு பின் முதல் தடவையாக கடந்த ஆண்டு சீனாவின் சனத்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் National Bureau of Statistics வெளியிட்ட அறிக்கையின்படி 2022ம் ஆண்டில் சீனாவின் சனத்தொகை 850,000 ஆல் குறைந்து 1.41175 பில்லியன் ஆக மட்டுமே இருந்துள்ளது. 2021ம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 7.52 பிறப்புகள் இருந்திருந்தாலும், 2022ம் ஆண்டில் அது 6.77 பிறப்புகளாக குறைந்து உள்ளது. 1962ம் ஆண்டு அளவில் இங்கு பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40 க்கும் […]
75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்திற்கு முதலாவது இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்துடன் ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட உள்ளது. முத்திரை உருவப்படத்துக்கு நேருவின் தெரிவுக்கான காரணத்தை இலங்கை வெளியிடவில்லை. இலங்கை 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது. ஆனால் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது. கொழும்பு சுதந்திர தின விழா பெப்ரவரி […]
இந்த மாதம் 19ம் திகதி அமெரிக்கா மீண்டும் debt limit எல்லையை அடையும் என்றும் அதன்பின் ஊதியங்கள், சேவைகள் போன்ற செலவுகளுக்கு அமெரிக்க மத்திய அரசிடம் பணம் இல்லா நிலை ஏற்படும் என்றும் Treasury Secretary Janet Yellen இன்று வெள்ளி கூறியுள்ளார். செலவுகளுக்கு போதிய பணம் இல்லாத நிலையில் அமெரிக்கா எவ்வளவு கடன் பெறலாம் என்பதை debt limit என்ற சட்டம் வரையறை செய்கிறது. அந்த தொகைக்கு மேல் அரசு கடன் பெற முடியாது. பதிலுக்கு […]
ஐந்து தினங்களுக்கு முன்னர் சீனாவுக்கும், ஹாங் காங்க்கும் இடையிலான எல்லை மீண்டும் திறந்து விடப்பட்டது. COVID காரணமாக கடந்த 3 சுமார் ஆண்டுகளாக இந்த எல்லை மூடப்பட்டு இருந்தது. எல்லை திறந்த பின் சீனர் பெருமளவில் ஹாங் காங் படையெடுக்கின்றனர். இதற்கு காரணம் mRNA பயன்பாடு மூலம் தயாரிக்கப்பட்ட COVID மருந்தை பெறவே. முதல் தொகுதி சீனர் இன்று வியாழன் ஹாங் காங் வந்துள்ளனர். இவர்கள் சுமார் $241 செலுத்தியே Pfizer-BioNTech மருந்தை ஹாங் காங்கில் பெறுகின்றனர். […]
Special military operation என்று கூறி யுக்கிரேனுள் நுழைந்த ரஷ்ய படைகள் குறைந்த அளவு வெற்றியையாவது அடையாத நிலையில் தற்போது ஜெனரல் Valery Gerasimov யுத்தத்தை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளார். இவர் ரஷ்ய படைகளை வழிநடத்தும் 3ஆவது தலைமை அதிகாரி. இதுவரை இந்த யுத்தத்தை தலைமை தாங்கிய Sergey Surovikin தற்போது பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளார். சுமார் 3 மாதங்கள் மட்டும் யுத்தத்தை வழிநடத்திய இவர் ஒரு கொடூரமான தளபதி என்று கூறப்பட்டாலும் அவரால் யுத்த வெற்றிகளை […]
இந்தியாவின் அதானி நிறுவனத்தின் (Adani Group) இஸ்ரேல் துறைமுக கொள்வனவு முற்று பெற்றுள்ளது. அதானி நிறுவனம் வட இஸ்ரேலில் உள்ள Haifa துறைமுகத்தின் ஒரு பகுதியை $1.15 பில்லியனுக்கு கொள்வனவு செய்துள்ளது. ஏறக்குறைய 99% பொருட்கள் கப்பல் மூலமே இஸ்ரேலுக்கு வருவதால், இஸ்ரேலில் இருந்து செல்வதால் அங்கு துறைமுகம் மிக பிரதானமானது. சீனாவின் Shanghai International Port Group (SIPG) ஏற்கனவே Haifa குடாவில் இன்னோர் துறைமுகத்தை இயக்கி வருகிறது. சீனாவின் $1.7 பில்லியன் பெறுமதியான துறைமுகம் […]
இந்தோனேசியாவின் Tanimbar பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:47 மணியளவில் 7.7 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நடுக்கத்தின் மையம் 97 km நிலத்துக்கு கீழே இருந்துள்ளது என்று European Mediterranean சேஷமோலோங்கிவள் Centre (EMSC) கூறியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்க அளவுகள்: < 2.5 Recorded, not felt Millions per year 2.5 – 5.4 Felt, minor damages 500,000 per year 5.5 – 6.0 Damage near the […]
தம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கருத்து கூறுமாறு பலஸ்தீனர் ஐ. நாவின் International Court of Justice (ICJ) க்கு சென்றதால் கோபம் கொண்ட இஸ்ரேல் பலஸ்தீனர் மீது மேலாதி தடைகளையும் விதித்து, தாம் வசூலிக்கும் பலஸ்தீனரின் வரிப்பணத்தையும் கைக்கொள்ள அறிவித்துள்ளது. ICJ உதவியை நாடும் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 31ம் திகதி இடம்பெற்றது. மொத்தம் 87 நாடுகள் ICJ நீதிமன்றின் உதவியை நாட ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, கனடா உட்பட மனித நேயம் […]
கடந்த 3 தினங்களாக அமெரிக்க House Speaker பதவிக்கான வாக்கெடுப்பு அமெரிக்க காங்கிரசின் House அவையில் 11 தடவைகள் இடம்பெற்றன. இங்கே போட்டி Republican கட்சிக்குள் மட்டுமே என்றாலும் Speaker பதவிக்க எவரும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாலாவது தினமும் தொடர்கிறது. Republican கட்சியே House அவையில் அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான Republican உறுப்பினர் விரும்பும் Kevin McCarthy என்பவருக்கு ஆதரவு வழங்க அதே கட்சியை சார்ந்த 20 கடும்போக்கு […]
கனடாவின் மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசுகளும் உலகம் எங்கும் சென்று தமக்கு தேவையான பணியாளர்களை அறுவடை செய்கின்றன. Nova Scotia என்ற கனடிய மாநிலமும் அந்த மாநிலத்தில் உள்ள முதியோரை பராமரிக்க கென்ய (Kenya) அகதி முகாமில் இருந்து 65 பேரை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நோவா ஸ்கொஸ்யா மாநில சுகாதார அமைச்சர் Michele Thompson இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இந்த அறுவடைக்கு நோவா ஸ்கொஸ்யா மாநிலத்தில் இருந்து ஒரு குழு கென்யா சென்றதாகவும் […]