அதானிக்கு எதிராக ஆய்வு அறிக்கை, $12 பில்லியன் அழிந்தது

அதானிக்கு எதிராக ஆய்வு அறிக்கை, $12 பில்லியன் அழிந்தது

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் (Adani Group) எதிராக Hindenburg Research என்ற நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பாதகமான ஆய்வு அறிக்கை காரணமாக அதானி நிறுவன பங்கு சந்தை பெறுமதி சுமார் $12 பில்லியனால் இன்று புதன் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி நிறுவனம் UAE, Caribbean, Mauritius ஆகிய இடங்களில் இரகசிய நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை ஒளிப்பதாகவும், உரிய வருமான வரியை செலுத்த தவறுவதாகவும் கூறப்படுகிறது. அதானி நிறுவனம் ஜனவரி மாதம் 27ம் […]

Gaga, Rhianna பாடல்களுடன் போட்டியிடும் Naatu… Naatu…

Gaga, Rhianna பாடல்களுடன் போட்டியிடும் Naatu… Naatu…

RRR (Roudram Ranam Rudhiram) என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும் Naatu… Naatu… (ஆடு… ஆடு…) என்ற பாடல் அமெரிக்காவின் முன்னணி பாடகிகளான Lady Gaga, Rhianna ஆகியோரின் பாடல்களுடன் போட்டியிடுகிறது. ஏற்கனவே Golden Globe மற்றும் Critics’ Choice பரிசுகளை வென்ற Naatu… Naatu… என்ற பாடல் தற்போது Oscar புடிக்கும் தெரிவாகி உள்ளது. இந்திய திரைப்படம் ஒன்றின் பாகம் ஒன்று international film என்ற வகுப்புக்கு அப்பால் ஒரு சர்வதேச பொது போட்டிக்கு செல்வது […]

ஜப்பானில் பிறப்பு பாரிய வீழ்ச்சி, பிரதமர் Kishida எச்சரிக்கை

ஜப்பானில் பிறப்பு பாரிய வீழ்ச்சி, பிரதமர் Kishida எச்சரிக்கை

ஜப்பானில் அண்மை காலங்களில் நிலவும் பாரிய பிறப்பு வீழ்ச்சி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஜப்பான் பிரதமர் Fumio Kishida இன்று திங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நாட்டில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர் “now or never” என்று விபரித்துள்ளார். 2021ம் ஆண்டில் ஜப்பானில் 800,000 க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. இந்நிலை 2029ம் ஆண்டு அளவிலேயே இடம்பெறும் என்று முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் அங்கு நிலைமை வேகமாக பாதிப்படைந்து வருகிறது. […]

மோதியை சாடும் BBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

மோதியை சாடும் BBC ஆவண படத்துக்கு இந்தியா தடை

இந்திய பிரதமர் மோதியை சாடும் பிபிசி ஆவண படம் ஒன்று இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க அக்கால குஜராத் முதலமைச்சர் மோதி தவறியுள்ளார் என்று கூறும் ஆவண படமே தடை செய்யப்பட்டுள்ளது. India: The Modi Question என்ற என்ற இந்த ஆவணப்படம் இந்தியாவுள் YouTube, Twitter போன்ற இணையங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய சட்டமான IT Rules 2021 க்கு அமையவே மேற்படி […]

தென் ஆபிரிக்கா ரஷ்யா, சீனாவுடன் யுத்த பயிற்சி

தென் ஆபிரிக்கா ரஷ்யா, சீனாவுடன் யுத்த பயிற்சி

தென் ஆபிரிக்கா ரஷ்ய, சீன படைகளுடன் இணைந்த யுத்த பயிற்சிகளை மீண்டும் செய்ய இணங்கி உள்ளது. இதற்கான அழைப்பை தென் ஆபிரிக்கா ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் விடுத்துள்ளது. Mosi என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சி வரும் பெப்ருவரி மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை இடம்பெறும். இந்த அறிவிப்பால் கடும் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. இந்த யுத்த பயிற்சி ரஷ்யாவின் யுக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் செயல் என்று சாடுகிறது அமெரிக்கா. BRICS (Brazil, Russia, […]

மாணவர் சுற்றுலா பஸ் விபத்தில், 7 பேர் பலி

மாணவர் சுற்றுலா பஸ் விபத்தில், 7 பேர் பலி

கொழும்பு Thurstan College மாணவர்களை நானு ஓயாவுக்கு எடுத்துச்சென்ற பஸ் செங்குத்தான 40 அடி ஆழ சரிவில் விழுந்துள்ளது. இந்த விபத்துக்கு மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பை நோக்கி வெள்ளி மாலை வந்து கொண்டிருந்த பஸ் வான் ஒன்றையும், ஆட்டோ ஒன்றையும் மோதியது என்றும் பஸ் பின்னர் பள்ளத்தில் விழுந்தது என்றும் கூறப்படுகிறது. ஆட்டோ சாரதியும், வானில் இருந்த 6 பேரும் பலியாகினர். பல மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த பஸ்சில் 42 […]

கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

கூகிளும் 12,000 ஊழியரை பதவி நீக்குகிறது

Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet என்ற நிறுவனம் 12,000 ஊழியரை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக இன்று வெள்ளி அறிவித்துள்ளது. இத்தொகை அந்த நிறுவன ஊழியர் தொகையின் 6% ஆகும். பதவி நீக்கம் செய்யப்படுவோர் மேலும் 4 மாத ஊதியமும், 6 மாதங்களுக்கு வைத்திய உதவிகளும் (health coverage) பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. உலக பொருளாதார மந்த நிலை காரணமாக Google தேடுதல், YouTube போன்ற பிரிவுகளின் விளம்பர வருமானம் குறைந்து வருவதும் பதவி நீக்கலுக்கு காரணமாகும். […]

நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் பதவி நீங்குகிறார், மக்கள் வியப்பில்

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தான் பதவி விலகுவதாக இன்று வியாழன் அறிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் பதவி விலகலுக்கு குளறுபடிகள், குற்றசாட்டுகள் எதுவும் காரணம் அல்ல என்று கூறப்பட்டாலும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் பதவியை தொடர அவர் தன்னிடம் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று Jacinda கூறியுள்ளார்.  இவர் பெப்ரவரி 7ம் திகதி பதவி நீங்குவார். இந்த ஞாயிறு இவரின் கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்யும். 2017ம் ஆண்டு தனது 37 ஆவது […]

யுத்தத்தை நிறுத்த உதவுமாறு சீக்கு செலன்ஸ்கி கடிதம்

யுத்தத்தை நிறுத்த உதவுமாறு சீக்கு செலன்ஸ்கி கடிதம்

யுக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்த உதவுமாறு யுக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி சீனா சனாதிபதி சீக்கு கடிதம் மூலம் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை செலன்ஸ்கியின் மனைவி Olena Zelenska தற்போது சுவிற்சலாந்தின் Davos நகரில் இடம்பெறும் World Economic Forum அமர்வுக்கு சென்றுள்ள சீன அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். செலன்ஸ்கி சீன சனாதிபதியை சந்திக்க பலமுறை முனைந்திருந்தாலும் அது நிறைவேறாத நிலையில் அவர் கடிதம் மூலம் அழைப்பை விடுவதாக மனைவி கூறியுள்ளார். இந்த அழைப்புக்கு ஒரு பதில் […]

இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் 8 வயதில் துறவியான செல்வந்த சிறுமி

இந்தியாவில் செல்வம் மிக்க 8 வயது ஜெயின் (Jain) மத சிறுமி ஒருத்தி துறவி ஆக்கியுள்ளார். Devanshi Sanghvi என்ற இந்த சிறுமியின் தந்தை சுமார் $61 மில்லின் பெறுமதியான வைர வர்த்தகர். குயாரத் மாநிலத்தில் உள்ள Surat என்ற வைர நகரில் வாழும் இவரின் குடும்பம் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள். ஜெயின் மதம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்தது. மாமிசம் உண்ணாத இவர்கள் சிறு உயிர்களை கொல்லப்படுவதையும் தவிர்ப்பவர்கள். நாலு தினங்கள் இடம்பெற்ற விழாவில் இந்த […]

1 73 74 75 76 77 343