சீனாவில் ஊழல் செய்தவர் அமெரிக்கா சென்றும் ஊழல்

சீனாவில் ஊழல் செய்தவர் அமெரிக்கா சென்றும் ஊழல்

Guo Wengui, வயது 52, என்பவர் சீனாவில் ஊழல் செய்த குற்றத்துக்காக விசாரணை செய்யப்பட இருக்கையில் 2014ம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடி அகதியானார். ஆனால் இவர் பின் அமெரிக்காவிலும் $1 பில்லியனுக்கும் மேலான முதலீட்டு திருட்டுக்களை செய்துள்ளதாக கூறி இவரை அமெரிக்காவின் FBI புதன் கைது செய்துள்ளது. பொதுவாக சீனா போன்ற நாடுகளில் இருந்து ஊழல் வழிகளில் பணம் பெற்றவர்கள் அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளுக்கு பெருமளவு பணத்துடன் செல்லும் போது அந்த நாடுகள் […]

சுவிஸ் வங்கி பங்கின் பெறுமதி 30% ஆல் வீழ்ச்சி

சுவிஸ் வங்கி பங்கின் பெறுமதி 30% ஆல் வீழ்ச்சி

Credit Suisse என்ற சுவிஸ் வங்கியின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி இன்று புதன் சுமார் 30% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வங்கியை இயக்க தேவையான பணம் கையிருப்பில் இல்லாமையும், அதை வங்கியின் முன்னணி பங்காளர் வழங்க முன்வராமையுமே பங்கு விலை வீழ்ச்சி அடைய காரணம். கடந்த கிழமை அமெரிக்காவின் SVB என்ற வங்கி முறிந்த பின் வங்கிகள் மீது பண வைப்பாளர் சந்தேக பார்வையை கொண்டுள்ளனர். வங்கிகளை கண்காணிக்கும் அரச அமைப்புகள் மீதும் மக்கள் […]

அமெரிக்க MQ-9 வேவு விமானத்தை ரஷ்யா வீழ்த்தியது

அமெரிக்க MQ-9 வேவு விமானத்தை ரஷ்யா வீழ்த்தியது

கருங்கடல் மேலாக பறந்து ரஷ்யாவை வேவு பார்த்த அமெரிக்காவின் MQ-9 வகை ஆளில்லா வேவு விமானத்தை ரஷ்யா இன்று செவ்வாய் வீழ்த்தி உள்ளது. அதனால் அமெரிக்காவும், நேட்டோவும் (NATO) ஆவேசம் அடைந்துள்ளன. அமெரிக்காவின் கூற்றுப்படி ரஷ்யாவின் இரண்டு Su-27 வகை யுத்த விமானங்கள் MQ-9 அருகே வந்து, பின் ஒரு Su-27 வேவு விமானம் MQ-27 மீது மோத, வேவு விமானம் கடலுள் வீழ்ந்துள்ளது. ஆனால் ரஷ்யா தாம் வேவு விமானம் மீது மோதவில்லை என்றும், Su-27 […]

அமெரிக்க தடையிலிருந்த ஜெனரல் சீன பாதுகாப்பு அமைச்சராகிறார்

அமெரிக்க தடையிலிருந்த ஜெனரல் சீன பாதுகாப்பு அமைச்சராகிறார்

அமெரிக்கா தடை செய்திருந்த சீனாவின் முன்னாள் ஜெனரல் Li Shangfu இன்று சீனாவில் பாதுகாப்பு அமைச்சர் ஆகியுள்ளார். Li பாதுகாப்பு அமைச்சர் ஆவது அமெரிக்காவுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்திய பிரதமர் மோதி மீதான தடையை, அவர் பிரதமர் ஆகிய பின், நீக்கியது போல் Li Shangfu மீதான தடையை அமெரிக்கா நீக்கி அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது தொடர்பு கொள்ளாது இருத்தல் வேண்டும். தொடர்பு கொள்ளாது இருப்பது கடின விசயம். Li Shangfu ரஷ்யாவிடம் இருந்து […]

சீன முயற்சியில் சவுதி, ஈரான் மீண்டும் உறவு

சீன முயற்சியில் சவுதி, ஈரான் மீண்டும் உறவு

சீனாவின் முயற்சியில் சவுதி அரேபியாவும், ஈரானும் மீண்டும் தம்முள் உறவை புதுப்பிக்கின்றன. அதன் ஒரு படியாக சவுதியும், ஈரானும் 6 ஆண்டுகளுக்கு பின் தமது தூதரகங்களை மீண்டும் ஆரம்பிக்க உள்ளன. இந்த திடீர் உறவால் அமெரிக்கா திகைப்படைந்து உள்ளது. இதுவரை காலமும் அமெரிக்கா ஈரானை ஒரு பயங்கர நாடாக காட்டி, அந்த ஆபத்துக்கு மருந்து ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் இருப்பதே என்ற மாயையையும் வளர்த்து இருந்தது. அந்த மாயையை சீனா உடைத்தமை  அமெரிக்காவின் […]

அமெரிக்காவின் Silicon Valley Bank முறிந்தது

அமெரிக்காவின் Silicon Valley Bank முறிந்தது

அமெரிக்காவின் Silicon Valley Bank (SVB) கலிபோர்னியா மாநில அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை இழுத்து மூடப்பட்டுள்ளது. அந்த வங்கி அடையவுள்ள பாரிய பண இழப்பில் இருந்து முதலீட்டாளரை பாதுகாக்கும் நோக்கிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது. இந்த வங்கி அமெரிக்காவில் இதுவரை முறிந்த வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாகும் . இந்த வங்கி வைப்புகள் Federal Deposit Insurance Corporation (FDIC ) மூலம் காப்புறுதி செய்யப்பட்டதால் காப்புறுதி தொகைக்கு உட்பட்ட தொகையை வைப்பு செய்தோர் தமது முழு வைப்பையும் […]

IMF, the Corruption Enabler

IMF, the Corruption Enabler

(Alagan Elavalagan, March 9, 2023) The International Monetary Fund (IMF) was started in 1944, in theory, to build a framework for international economic cooperation. But the reality is not as honest as it claims to be. The true IMF framework is designed to enhance and extend indirect colonialism or imperialism. IMF has smartly been enforcing […]

Fitch: வளரும் இலங்கை ரூபா பின்னர் வீழ்ச்சி அடையும்

Fitch: வளரும் இலங்கை ரூபா பின்னர் வீழ்ச்சி அடையும்

கடந்த சில தினங்களாக இலங்கை நாணயத்தின் பெறுமதி வேகமாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு தற்காலிகமானது என்றும், ஆண்டின் இறுதியில் இலங்கை ரூபா மீண்டும் பெறுமதியை இழக்கும் என்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட Fitch நிதி சேவைகள் அமைப்பு கூறியுள்ளது. IMF இலங்கைக்கு $2.9 பில்லியன் கடன் வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது. இன்று புதன் டாலர் ஒன்றுக்கு 317 ரூபாய் கிடைத்தாலும், Finch கூற்றுப்படி இந்த ஆண்டின் […]

புதிய சீன கடிதத்தை IMF ஏற்கும், இலங்கை நம்பிக்கை

புதிய சீன கடிதத்தை IMF ஏற்கும், இலங்கை நம்பிக்கை

சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன் தொடர்பாக சீனா திங்கள் வழங்கிய “புதிய” கடிதத்தை IMF ஏற்று $2.9 பில்லியன் கடனை வழங்கும் என்றும் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பதை இலங்கை பகிரங்கம் செய்யவில்லை. இலங்கை கருதுவது போல் IMF சீன உறுதிமொழியை IMF ஏற்றால், அது இந்த மாத முடிவுக்குள் கடனை பகுதி பகுதியாக வழங்க ஆரம்பிக்கலாம். அதன் பின் ஏனைய கடன் வழங்கும் அமைப்புகளும் கடன் வழங்க […]

சீனா: அமெரிக்க குணம் தொடரின் மோதல் தவிர்க்க முடியாது

சீனா: அமெரிக்க குணம் தொடரின் மோதல் தவிர்க்க முடியாது

அமெரிக்கா சீனாவை சுற்றி வளைத்து, கட்டுப்படுத்தி, அமுக்க முனைகிறது என்றும் அமெரிக்காவின் இந்த குணம் தொடர்ந்தால் மோதல் தவிர்க்க முடியாது என்றும் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) செவ்வாய் கூறியுள்ளார். இதுவரை காலமும் அமெரிக்காவுக்கான சீன தூதுவராக இருந்த Qin Gang தற்போது சீனாவின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் சீன சனாதிபதி சீக்கு நெருக்கமானவர். அத்துடன் யூக்கிறேன் யுத்தத்தை ஒரு மாய கை (invisible hand) நெருப்பூட்டி வளர்கிறது […]

1 69 70 71 72 73 343