இந்தியாவில் 36 பேர் கிணற்று மூடி உடைந்ததால் பலி

இந்தியாவில் 36 பேர் கிணற்று மூடி உடைந்ததால் பலி

இந்திய மத்திய பிரதேச மாநிலத்து Indore என்ற நகரில் இடம்பெற்ற ராம் நவமி நிகழ்வின்போது கிணற்று மூடி ஒன்று பாரத்தால் உடைய, அதில் இருந்தோர் உள்ளே விழுந்து உள்ளனர். அவர்களில் குறைந்தது 36 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 பேர் வைத்தியசாலைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். Beleshwar Mahadev Jhulelal என்ற ஆலயத்தில் இருந்த சுமார் 40 அடி (12 மீட்டர்) ஆழ கிணறு ஒன்றுக்கு சீமெந்து மூடி இருந்துள்ளது. விழாவுக்கு வந்த மக்கள் இந்த […]

ரம்ப் கைதாகலாம், வரலாற்றில் முதல் தடவை

அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி விரைவில் கைதாகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. நியூ யார்க் ஜூரி ரம்ப் criminal குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்கவேண்டும் என்று இன்று வியாழன் கூறியுள்ளது. ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016 சட்டவிரோத முறையில் பணம் ($130,000 hush money) வழங்கி உண்மையை மறைக்க முயன்றார் என்பதே ரம்ப் மீதான குற்றச்சாட்டு. ரம்ப் அடுத்த கிழமை சரண் அடையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு தற்போது Florida மாநிலத்தில் வாழும் ரம்ப் நியூ […]

ஆறு பிரிவுகளாகும் சீனாவின் அலிபாபா நிறுவனம்

ஆறு பிரிவுகளாகும் சீனாவின் அலிபாபா நிறுவனம்

அலிபாபா (Alibaba) என்ற மிகப்பெரிய சீன நிறுவனம் 6 பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. இந்த பிரிவை சீன அரசே முன்னின்று செய்யதாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை தனியார் வர்த்தகங்கள் அரசிலும் பெரிதாக வளர்வதை சீன அரசு தடுக்க முயல்வதாக தெரிகிறது. 1999ம் ஆண்டு ஜாக் மா (Jack Ma) என்ற சீனரால் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா என்ற eCommerce வர்த்தகம் விரைவில் வளர்ந்து உலகின் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றானது. தனது பண பலத்தால் அலிபாபா வட்டிக்கு கடன் வழங்கும் […]

முன்னாள் தாய்வான் சனாதிபதி இன்று சீனா பயணம்

முன்னாள் தாய்வான் சனாதிபதி இன்று சீனா பயணம்

முன்னாள் தாய்வான் சனாதிபதி மா (Ma Ying-jeou, வயது 73) இன்று திங்கள் சீனா சென்றுள்ளார். தாய்வானின் சனாதிபதி ஒருவரோ அல்லது முன்னாள் சனாதிபதி ஒருவரோ சீனா செல்வது இதுவே முதல் தடவை. தற்போதைய சனாதிபதி Tsai Ing-wen, ஒரு DPP (Democratic Progressive Party) கட்சி உறுப்பினர், மா சீனா செல்வதை வன்மையாக கண்டித்துள்ளார். மா ஒரு KTM (Kuomintang) கட்சி உறுப்பினர். மாவின் பயணம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று கூறப்பட்டாலும் அவர் […]

அம்ரிட்பால் சிங்கை தேடி இந்திய காவல் 1 கிழமை வேட்டை

அம்ரிட்பால் சிங்கை தேடி இந்திய காவல் 1 கிழமை வேட்டை

அம்ரிட்பால் சிங் (Amritpal Singh) என்பவரை கைது செய்ய இந்திய காவல்துறை கடந்த ஒரு கிழமையாக தேடுதல் வேட்டை செய்கிறது. புஞ்சாப் சீக்கியரான அம்ரிட்பால் மீண்டும் புஞ்சாப் பிரிவினையை தூண்டுகிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. 1993ம் ஆண்டு புஞ்சாப்பில் பிறந்த அம்ரிட்பால் 3ம் ஆண்டுடன் கல்லூரி படிப்பை நிறுத்தி இருந்தார். 2012ம் ஆண்டில் இவர் டுபாய் சென்று பெற்றோரின் போக்குவரத்துக்கு வர்த்தகத்தில் பணியாற்றினார். 2019ம் ஆண்டு இவர் புஞ்சாப் உழவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தார். […]

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

இன்று வியாழன் இந்திய கீழ் நீதிமன்றம் ஒன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2019ம் ஆண்டு ராகுல் காந்தி மோதிகளை திருடர் என்று அழைத்ததே ராகுலின் குற்றம். ராகுல் தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார். இந்த வழக்கு மோதியின் மாநிலமான குயாரத்தில், பா.ஜ. கட்சி உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டு குயாராத் மாநிலத்து Surat நகர் நீதிமன்றமே விசாரித்து இருந்தது. 2024ம் ஆண்டு இந்தியாவில் பொது தேர்தல் நிகழவுள்ள காலத்தில் இந்த தீர்ப்பு […]

$3 பில்லியனுக்கு IMF இலங்கை அரசை கண்காணிக்கும்?

$3 பில்லியனுக்கு IMF இலங்கை அரசை கண்காணிக்கும்?

இலங்கைக்கு $3 பில்லியன் கடன் வழங்க முன்வந்துள்ளதாக IMF இன்று செவ்வாய் அறிவித்துள்ளது. அந்த $3 பில்லியனில், $333 மில்லியன் உடனடியாக இலங்கைக்கு கிடைக்கும் என்றும் IMF கூறியுள்ளது. ஆனால் என்றும் இல்லாத வகையில் IMF இலங்கை அரசின் ஆட்சி முறையை கண்காணிக்கும் என்றும் IMF நிபந்தனை வைத்துள்ளது. IMF தனது அறிக்கையில் “A more comprehensive anti-corruption reform agenda should be guided by the on going IMF governance diagnostic mission […]

சீன சனாதிபதி மாஸ்கோவில், பூட்டின் பெரும் வரவேற்பு

சீன சனாதிபதி மாஸ்கோவில், பூட்டின் பெரும் வரவேற்பு

சீன சனாதிபதி சீ ஜின்பிங் (Xi JinPing) இன்று திங்கள் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். சீயின் இன்றைய பயணம் ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை மையமாக கொண்டது. அதேவேளை சீயின் மாஸ்கோ பயணத்தால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. பூட்டினும், சீயும் ஒருவரை மற்றவர் புகழ்ந்து பேசியுள்ளனர். பூட்டியின் சீயை “dear friend” என்று பாராட்டி உள்ளார். சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவும் இருவராலும் புகழப்பட்டு உள்ளது. ஆனால் சீயின் பயணத்தால் விசனம் கொண்ட அமெரிக்க சனாதிபதி […]

UBS வங்கி முறியும் Credit Suisse வங்கியை கொள்வனவு

UBS வங்கி முறியும் Credit Suisse வங்கியை கொள்வனவு

சுவிற்சலாந்தின் முதலாவது பெரிய வங்கியான UBS (முன்னர் Union Bank of Switzerland) தற்போது முறியும் நிலையில் உள்ள Credit Suisse என்ற சுவிற்சலாந்தின் இரண்டாவது பெரிய வங்கியை 3 பில்லியன் சுவிஸ் பிரங்குக்கு ($3.24 பில்லியன்) கொள்வனவு செய்யவுள்ளது. இந்த கொள்வனவை அரசுகளே முன் நின்று செய்துள்ளன. மேற்கு நாடுகளில் பெரும் வங்கிகள் முறிந்தால், அந்த நாடுகளில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை அடையும். 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் சில பெரிய வங்கிகள் முறியும் நிலையில், அமெரிக்க […]

ஓய்வூதிய வயது அதிகரிப்பை எதிர்த்து பிரான்சில் வன்முறை

ஓய்வூதிய வயது அதிகரிப்பை எதிர்த்து பிரான்சில் வன்முறை

பிரான்சின் சனாதிபதி இமானுவேல் மக்ரான் நடைமுறை செய்யும் ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பை எதிர்த்து வீதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. இன்று வெள்ளி மாலையும் பல இடங்களில் வீதி போராட்டங்கள் தொடர்கின்றன. போலீசார் கண்ணீர் புகை கொண்டு கலகத்தை அடக்க முனைகின்றனர். ஓய்வூதிய வயது அதிகரிப்பை பாராளுமன்றம் மூலம் செய்யாது, மக்ரான் தன்னிச்சையாக நடைமுறை செய்தது கடந்த சில நாட்களாக இடம்பெறும் வன்முறைகளை உக்கிரம் அடைய செய்துள்ளது. அங்கு வேலை புறக்கணிப்பு காரணமாக வீதிகளில் குப்பைகள் குவிந்து வருகின்றன. தற்போது […]

1 68 69 70 71 72 343