அண்மையில் அமெரிக்கா கொண்டிருந்த யூக்கிறேன் யுத்த புலனாய்வு இரகசியங்கள் Discord என்ற இணையம் மூலம் கசிந்து அமெரிக்காவுக்கு அவலத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இன்று வியாழன் அமெரிக்கா கசிவு தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது. Massachusetts Air National Guard அணியில் அங்கம் கொண்ட 21 வயதுடைய Jack Teixeira என்பவரே FBI ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். Dighton என்ற இடத்தில் வாழும் இவர் online video game அணி ஒன்றில் அங்கம் கொண்டவர். கைது […]
மேற்கு அஸ்ரேலியாவை இல்ஸா (Ilsa) என்ற மிகப்பெரிய சூறாவளி தாக்குகிறது. கடந்த 14 ஆண்டுகளில் அஸ்ரேலியாவை தாக்கும் மிகப்பெரிய சூறாவளி இதுவாகும். Port Headland என்ற இடத்தை தாக்கவுள்ள இந்த சூறாவளி சுமார் 315 km/h வேகத்திலான காற்றுவீச்சை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நரகர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சூறாவளிக்கு சில இடங்கள் 400 mm (15.7 அங்குல) மழை வீழ்ச்சியையும் பெறும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. Port Headland […]
தாய்வான் விவகாரத்தில் பிரான்ஸ் அமெரிக்க கொள்கையுடன் முரண்படலாம் என்ற கருத்துப்பட பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் நேர்முகம் ஒன்றில் கூறியுள்ளார். இதனால் அமெரிக்க ஆய்வாளர் கவலை கொண்டுள்ளனர். பிரான்சின் Les Echos என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் சீனா-தாய்வான் முரண்பாடு தமது விசயம் அல்ல (not ours) என்றும் மக்கிறான் கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்கா சீன-தாய்வான் விசயத்தை மிகைப்படுத்துவதாகவும் (escalating) மக்கிறான் கூறியுள்ளார். The Inter-Parliamentary Alliance on China மக்கிறான் ஐரோப்பா சார்பில் கதைக்கவில்லை (do not […]
சவுதி அதிகாரிகள் தற்போது ஈரான் சென்றுள்ளனர். இவர்கள் ஈரானின் தலைநகர் தெகிரானில் மீண்டும் சவுதியின் தூதரகத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரானின் அதிகாரிகள் வரும் சில தினங்களில் சவுதி சென்று ஈரானின் தூதரகத்தை ஆரம்பிப்பர். மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருந்த ஆளுமையை உடைத்து சீனா அண்மையில் சவுதிக்கும், ஈரானுக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கி, அவர்கள் இடையே உறவை மீண்டும் ஆரம்பித்து இருந்தது. சீனாவின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அமெரிக்கா திகைத்தது. சீனாவின் முயற்சி தோல்வியில் முடியலாம் என்றே […]
யூக்கிறேன் யுத்தம் தொடர்பான அமெரிக்க புலனாய்வு ஆவணங்களை ரஷ்யா சில தினங்களுக்கு முன் பகிரங்கப்படுத்தி இருந்தது. அப்போது அதை பொய்யான ஆவணங்கள் என்று அமெரிக்கா கூறியிருந்தாலும், தற்போது அவை உண்மையான உளவு ஆவணங்களே என்று அறியப்படுகிறது. இந்த ஆவணங்கள் பெப்ருவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து மார்ச் மாத ஆரம்பம் வரையான காலத்தில் தயாரிக்கப்பட்டன என்றும் அறியப்படுகிறது. இந்த ஆவணங்களின்படி அமெரிக்கா இஸ்ரேல், தென் கொரியா ஆகிய நட்பு நாடுகளையும், யூக்கிறேன் சனாதிபதி செலென்ஸ்கியையும் உளவு செய்துள்ளது. யூக்கிறேன் […]
தாய்வான் தீவை தாக்குவது போல் சீன இராணுவம் ஒத்திகை செய்கிறது. சனி, ஞாயிரு, திங்கள் ஆகிய 3 தினங்கள் செய்யப்படும் சீனாவின் இந்த இராணவ ஒத்திகை தாய்வான் சனாதிபதி அண்மையில் அமெரிக்கா சென்று அமெரிக்க House அவை தலைவரை சந்தித்ததை கண்டிக்கும் நோக்கில் செய்யப்படுகிறது. பெரும்பலாலான ஒத்திகை நடவடிக்கைகள் தாய்வானின் தென்மேற்கு கடல் பகுதியில் இடம்பெற்றாலும், தாய்வானின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுகின்றன. சனிக்கிழமை சீனாவின் 71 யுத்த விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. ஞாயிரு […]
யூக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சீனா சனாதிபதி சீயின் உதவியை நாடியுள்ளார் பிரஞ்சு சனாதிபதி மக்கிறான். தற்போது சீனாவுக்கு 3-தின பயணத்தை மேற்கொண்டுள்ள பிரஞ்சு சனாதிபதிக்கு சீனாவில் முழு அளவிலான மரியாதை வழங்கப்படுள்ளது. பூட்டினை பேச்சுக்கு அழைக்க சீயால் முடியும் என்று தான் கருதுவதாக மக்கிறான் கூறியுள்ளார். அமெரிக்கா யூக்கிறேன் யுத்தம் தொடர்வதை விரும்பினாலும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தை விரைவில் நிறுத்த விரும்புகின்றன. அதேவேளை மக்கிறான் சீனாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக […]
உலக அளவில் அதிகம் hedge fund முதலீட்டை கொண்ட வங்கி கனடாவின் TD Bank (Toronto Dominion Bank, TD.TO) என்று அறியப்படுகிறது. TD வங்கியின் பங்குச்சந்தை பங்கில் சுமார் $3.7 பில்லியன் hedge fund முதலீடுகளில் உள்ளது என்று அறியப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் JP Morgan பங்குகளில் $2.3 பில்லியன் பங்குகளே hedge fund முதலீடுகளில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை வீழ்ச்சி அடைய உள்ளது என்று கருதும் பொழுதே hedge […]
பின்லாந்து (Finland) இன்று முதல் ஒரு நேட்டோ நாடு ஆகிறது. நேட்டோ அணியில் இணையும் 31 ஆவது நாடாகிறது பின்லாந்து. பின்லாந்து நேட்டோவுடன் இணைவதால் நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லை மேலும் 1,340 km ஆல் அதிகரித்துள்ளது. யூக்கிறேன் நேட்டோ அங்கம் கொள்வதை எதிர்த்து பூட்டின் யூக்கிறேனை ஆக்கிரமித்து ஒரு ஆண்டுக்கு மேலாக யுத்தத்தில் அவதிப்பட, பின்லாந்து இலகுவில் நேட்டோ நாடாகியுள்ளது. அதேவேளை சுவீடனும் நேட்டோ அணியில் இணைய விண்ணப்பித்துள்ளது. அந்த முயற்சியை நேட்டோ நாடான துருக்கி […]
Florida மாநிலத்தில் வாழும் முன்னாள் அமெரிக்க சனாதிபதி தற்போது நியூ யார்க் நகரை நோக்கி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நாளை செவ்வாய் நியூ யார்க் நீதிமன்றில் சரணடைவார். இவர் மீது 30 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் பிரதானமானது ரம்ப் Stormy Daniel என்ற உயர்வர்க்க விபசாரிக்கு 2016ம் ஆண்டு சட்டவிரோத முறையில் பணம் வழங்கி ($130,000 hush money) உண்மையை மறைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டே. அமெரிக்க சனாதிபதி ஒருவர் இவ்வாறு சரண் அடைவது […]