சீன சனாதிபதி சீயும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் இன்று புதன் தொலைபேசி மூலம் உரையாடினர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் சீயும், செலன்ஸ்கியும் உரையாடுவது இதுவே முதல் தடவை. இவர்களின் உரையாடல் யூக்கிறேனில் சமாதான நிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த உரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது என்றும், அர்த்தமுள்ளது என்றும் செலன்ஸ்கி உரையாடலை விபரித்துள்ளார். சீனா இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை நிராகரித்து பேசியது இல்லை. பதிலுக்கு NATO நாடுகளையே யுத்தத்துக்கு காரணம் என்று […]
2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று செவ்வாய் அறிவித்துள்ளார். தற்போது 80 வயதான பைடேன் அமெரிக்காவின் வயதில் முதிர்ந்த சனாதிபதியாவார். பைடெனின் வயது அமெரிக்காவின் சனாதிபதி பதவிக்கு தகுமா என்று அவரின் கட்சியினர் பலரும் வியக்கின்றனர். அத்துடன் Republican கட்சி வயதில் இளையவர் ஒருவரை போட்டியிட வைத்தால், பைடென் வாக்குகளை இழக்க நேரிடுமா என்றும் கேட்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் பைடென் சனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படடால், அவர் தனது இரண்டாவது […]
ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இடம்பெறும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது தூதரக ஊழியர்களை வெளியேற்றி உள்ளன. அமெரிக்கா தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிரு சூடான் தலைநகர் Khartoum இல் இருந்து Chinook ஹெலிகள் மூலம் வெளியேற்றி உள்ளது. பிரித்தானிய பிரதமரும் தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிறு படையினரின் உதவியுடன் வெளியேற்றி உள்ளதாக கூறியுள்ளார். பிரெஞ்சு ஊழியர்கள் தம் மீதான தாக்குதல் காரணமா மீண்டும் […]
கனடாவின் டொரோண்டோ விமான நிலையத்தில் (Toronto Person Airport) சுமார் $15 மில்லியன் பெறுமதியான தங்கமும், வேறு சில பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டு உள்ளன. கடந்த திங்கள் விமானம் ஒன்றில் வந்த பொருட்களே திருடப்பட்டு உள்ளன. இந்த செய்தியை போலீசார் இன்று வியாழன் அறிவித்து உள்ளனர். பொதியை எடுத்து வந்த விமான சேவையின் பெயர், எங்கிருந்து அந்த பொதி எடுத்துவரப்பட்டது என்ற விபரங்களை போலீசார் பகிரங்கம் செய்யவில்லை. விமானத்தில் இருந்து முறைப்படி இறக்கப்பட்ட பொருட்கள் உரிய இடத்தில் […]
Elon Musk என்பவரின் உரிமை கொண்ட SpaceX என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று வியாழன் ஏவிய Starship என்ற விண் கலமும் அதை காவிய ஏவுகணையும் ஏவி 40 செகண்ட் நேரத்தில் வெடித்து சிதறியது. விண்வெளி வீரர்கள் எவரையும் கொண்டிராத இந்த கலம் Texas மாநிலத்தில் உள்ள SpaceX தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது ஒரு பரிசோதனை ஏவல் முயற்சியே. உலகம் எங்கும் இதுவரை ஏவப்பட்ட கலங்களில் இது மிக அதிக உந்து சக்தியை கொண்டிருந்தது. […]
Fox News என்ற அமெரிக்க கடும்போக்கு வலதுசாரி செய்தி சேவை நிறுவனத்திற்கும், அதன் மீது மானநட்ட வழக்கு தொடர்ந்த Dominion Voting என்ற வாக்கெடுப்பு இயந்திர தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையில் இறுதிநேரே $787.5 மில்லியன் உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தலின்போது ராம்புக்கு ஆதரவாக பல ஆதாரம் அற்ற செய்திகளை Fox News வெளியிட்டு இருந்தது. பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட Dominion Votes என்ற நிறுவனத்தின் வாக்கு பதியும் இயந்திரங்கள் மூலம் […]
இந்தியாவின் மும்பை நகரில் பரிசளிப்பு விழா ஒன்றுக்கு பெருவெளியில் கூடியிருந்தோரில் 11 பேர் சூரிய வெப்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். அங்கு வெப்பநிலை சுமார் 38 C (100 F) ஆக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் நீண்ட நேரமாக நிழல் எதுவும் இன்றிய மைதானத்தில் இருந்துள்ளனர். Appasaheb Dharmadhikari என்பவருக்கு சமூக சேவை விருது வழங்கும் பொருட்டு மஹாராஷ்டிரா மாநில முதல்வர், மற்றும் மத்திய Home அமைச்சர் ஆகியோர் கூடிய கூட்டத்துக்கு சுமார் 1 மில்லியன் மக்கள் […]
தற்போது அஸ்ரேலியவின் மிக பெரிய நகரமாக Melbourne மாறியுள்ளது. அதனால் சுமார் 100 ஆண்டு காலமாக அஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரம் என்ற புகழை கொண்டிருந்த சிட்னி இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டில் Australian Bureau of Statistics பெற்ற தவுகளின்படி மெல்பெர்னின் சனத்தொகை 4,875,400 ஆக இருந்துள்ளது. அத்தொகை சிட்னியின் சனத்தொகையில் 18,700 அதிகம். மெல்பெர்ன் நகருக்கு அண்மையில் உள்ள Melton என்ற சிறு நகரம் மெல்பெர்ன் நகருடன் இணைக்கப்பட்டமையும் மெல்பெர்னின் சனத்தொகை […]
இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான Atiq Ahmed என்பவர் போலீஸ் காவலில் உள்ளபோதே சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். கூடவே இவரின் சகோதரரான Ashraf உம் சூட்டுக்கு பலியாகி உள்ளார். பல குற்ற செயல்களை செய்தமைக்காக சிறையில் உள்ள Atiq Ahmed நீதிமன்ற உத்தரவைன் காரணமாக வைத்திய பரிசோதனைக்கு Prayagraj (முன்னாள் Allahabad) நகரில் உள்ள வைத்தியசாலைக்கு போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்ட வேளையிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையின் சந்தேக நபர்கள் மூவர் […]
இலங்கைக்கு $12 பில்லியன் bond கடன் வழங்கிய அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் முதல் முறையாக கடனை மீண்டும் அடைக்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்து உள்ளது என்று கூறப்படுகிறது. Amundi Asset Management, Black Rock, HBK Capital Management, T. Rowe Price Associates ஆகிய நிறுவனங்கள் உட்பட சுமார் 30 சர்வதேச முதலீட்டு நிறுவனங்களே இவ்வாறு தமது திட்டத்தை முன்வைத்துள்ளன. ஆனால் திட்ட விபரங்கள் எதுவும் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. மேற்படி […]