வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எங்கும் தற்போது பரந்த அளவில் வெப்ப கொடுமை நிலவுகிறது. அமெரிக்காவில் சுமார் 113 மில்லியன் அல்லது 1/3 பங்கு மக்கள் வெப்ப கொடுமையில் உள்ளனர். கலிபோர்னியா மாநிலம் முதல் புளோரிடா மாநிலம் வரையான தென் பகுதி பிரதானமாக வெப்பத்தால் பாதிக்கப்படுள்ளது. அரிசோனா மாநிலத்து Phoenix நகரில் சனிக்கிழமை வெப்பநிலை 43 C ஆக உள்ளது. கலிபோர்னியாவின் Death Valley பகுதியில் வெப்பநிலை 53 C ஆக உள்ளது. Las Vegas மாநிலத்து- […]
இன்று வெள்ளி இந்தியா மீண்டும் ஆளில்லா கலம் ஒன்றை சந்திரனுக்கு ஏவியுள்ளது. இக்கலம் ஏவுகணை ஒன்று மூலம் ஆந்திரா பிரதேச ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஏவப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாம் முயற்சி. 2019ம் ஆண்டு இந்தியா ஏவிய கலம் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கவில்லை. அது சந்திரனில் விழுந்து மோதியது. விண்வெளி வீரரை காவும் கலம் பாதுகாப்பாக தரை இறங்கள் அவசியம். Chandrayaan 3 (சந்திர வாகனம் 3) என்ற இந்த […]
உலக அளவில் பொதுமக்கள் கடன் தற்போது $92 டிரில்லியன் ஆக அதிகரித்து உள்ளது என்று ஐ. நா. வெளியிட்ட அறிக்கை ஒன்று இன்று கூறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலக பொதுக்கடன் 5 மடங்கால் அதிகரித்து உள்ளது. ஆனால் உலக பொருளாதார வளர்ச்சி (GDP) 3 மடங்கால் மட்டுமே அதிகரித்து உள்ளது. 2002ம் ஆண்டில் $17 டிரில்லியன் ஆக இருந்த உலக பொதுக்கடன் தற்போது $92 டிரில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அதில் சுமார் 30% வளரும் […]
இந்தியாவில் மிகையான மன்சூன் மழை பல இடங்களை பெருவெள்ளத்தில் அமிழ்த்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் சில இடங்கள் முழங்கால் அளவு வெள்ளத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மழைக்கும், மண்சரிவுகளுக்கும் இதுவரை குறைந்தது 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை பொழிந்த 153 mm மழை கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்துக்கான அதிகூடிய மழை வீழ்ச்சியை வழங்கியுள்ளது. மழை காரணமாக அங்கு பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளன. ஹிமாச்சல் மாநிலத்தில் மட்டும் சுமார் 700 வீதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து […]
ரஷ்யாவுடன் போரிடும் யூக்கிறேனுக்கு அமெரிக்கா கிளஸ்ட்டர் (cluster) குண்டுகளை வழங்கவுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிளஸ்ட்டர் குண்டுகளை உலகில் 123 நாடுகள் தடை செய்துள்ளன (2018 முதல் இலங்கையும் தடை செய்துள்ளது). ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, யூக்கிறேன் உட்பட 71 நாடுகள் கிளஸ்ட்டர் குண்டுகளை தடை செய்யவில்லை. ஒவ்வொரு கிளஸ்ட்டர் குண்டின் உள்ளும் பெருமளவு சிறிய குண்டுகள் இருக்கும். தாய் குண்டு எதிரியின் வானத்தில் வெடிக்க, சேய் குண்டுகள் பரந்த அளவில் வெடித்து அழிவை ஏற்படுத்தும். […]
டியேகோ கார்சியா (Diego Garcia) என்ற இந்து சமுத்திர தீவுக்கு அமெரிக்காவின் இரகசிய இணைய இணைப்பு தொடுக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி ஒன்று கூறுகிறது. இந்த இரகசிய இணைய இணைப்பு அமெரிக்க இராணுவத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படும். டியேகோ கார்சியாவில் அமெரிக்காவின் முப்படைகளும் தமது தளங்களை கொண்டுள்ளன. இந்த cable இணைப்பை அமெரிக்காவின் SubCom என்ற நிறுவனம் செய்துள்ளது. இந்த நிறுவனமே Google, Facebook, Microsoft போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் தனியார் கடலடி cable இணைப்புகளை செய்கிறது. பிரித்தானியா […]
இலங்கை மத்திய வங்கியின் வட்டி நாளை மேலும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாளைய குறைப்பு 1% முதல் 3% வரையில் இருக்கும் என்று கருதப்படுகிறது. மத்திய வங்கி கடந்த மாதம் பாரிய 2.5% வட்டி குறைப்பை செய்திருந்தது. பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதே வட்டி குறைப்புக்கு பிரதான காரணம். ஜூன் மாதம் வீக்கம் 12% ஆக குறைந்து உள்ளது. புதிய வட்டி வீதம் நாளை வியாழன் காலை 7:30 மணிக்கு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு இலங்கை பொருளாதாரம் […]
திங்களும், செவ்வாயும் West Bank பகுதியில் உள்ள Jenin என்ற பலஸ்தீனர் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் செய்த பெரும் தாக்குதல்களுக்கு 10 பேர் பலியாகியும், பலர் காயமடைந்து உள்ளனர். பலியானோரில் 3 சிறுவர்களும் அடங்குவர். தாக்குதல்கள் இடம்பெறும் இடத்துக்கு பலஸ்தீனர்களின் அம்புலன்ஸ் செல்லாது தடுக்க இஸ்ரேல் இராணுவம் வீதிகளை உடைத்து இருந்தது. இந்த முகாம் பகுதிக்கு மின் இணைப்பு, நீர் இணைப்பு ஆகியவற்றையும் இஸ்ரேல் இராணுவம் தடை செய்திருந்தது. வழமைபோல் ஐ.நாவின் WHO உட்பட MSF, […]
தாய்லாந்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யானையான முத்து ராஜா மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முத்து ராஜா ஞாயிரு தாய்லாந்து சென்றுள்ளது. தற்போது 19 வயதுடைய முத்து ராஜா சுமார் $540,000 செலவில் வர்த்தக விமானம் ஒன்றில் எடுத்து செல்லப்படுள்ளது. இதை எடுத்து செல்ல 4 தாய்லாந்து யானை பராமரிப்பாளரும் இலங்கை வந்திருந்தனர். புத்த கோவில் ஒன்றில் இருந்த இந்த யானையை இலங்கையில் துன்புறுத்தியதாக தாய்லாந்து கூறுகிறது. இலங்கை பிரதமர் தாய்லாந்து அரசரிடம் மன்னிப்பு கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த […]