இந்த மாதம் 30ஆம் திகதி முதல் Research in Motion ஒரு புதிய OS ஐ பயன்படுத்த தொடங்கவுள்ளது. இதன் பெயர் QNX. QNX கனடாவில் 1982 ஆம் ஆண்டு Quantum Software System என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதை Research in Motion கொள்வனவு செய்திருந்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி சந்தைக்கு வரும் BB10 என்ற cell phone இந்த OS ஐயே கொண்டிருக்கும். QNX இன் வரவு OS போட்டியை உக்கிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இன் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை […]
தற்போது மிகவும் மந்தமாக இருக்கும் ஜப்பானிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஜப்பானிய அரசு இன்று வெள்ளிக்கிழமை (2013:01:11) புதிய பொருளாதார ஊக்க முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரதமர் Shizo Abe இனது அரசின் இந்த ஊட்ட முதலீடு சுமார் U$230 பில்லியன் (20 trillion Yen) பெறுமதியானது. இந்த முதலீடு முதலில் மூன்று துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும். சுமார் $43 பில்லியன் அனர்த்த நிவாரணம், அனர்த்தம் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் செலவிடப்படும். இதில் பெருந்தெருக்கள் திருத்தம், சுரங்கப்பாதைகள் திருத்தம் போன்றவையும் […]
ஐரோப்பியர் 10 மாதங்களைப் 12 மாதங்களாக மாற்றியமைக்கு தமிழ் ஆண்டுக்கணிப்புமுறை காரணமாயிருக்கலாம். தொல்காப்பியக் காலம் 2ஆம் உரோமச் சக்கரவர்த்தியின் காலத்திற்கு முற்பட்டதாகும். அதாவது 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது. இந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை. 2010 […]
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று தனது இரண்டாம் ஆட்சிக்காலத்துக்கான புதிய உறுப்பினர்களை முன்மொழிந்துள்ளார். அமரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக Chuck Hagel (சக் கேகல்) பதவி வகிப்பார்.
கருணாநிதி உண்மையான தமிழ்நாட்டு மக்கள்மேல் அக்கறைகொண்ட தலைவர் என்றால் அவர் உடனடியாக செய்யவேண்டியது நேர்மையானதும், தராதரத்துடன் முன்வரும் எல்லா வேட்பாளர்களையும் உள்ளடக்கியதுமான ஒரு தெரிவுப்போட்டி வைத்து அதன் மூலம் அடுத்த தி.மு.க.வின் தலைவரை தெரிவு செய்யவதே.