அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் Arizona மாநிலத்தின் senator பதவியில் உள்ளவருமாகிய John McCain திங்கள்கிழமை சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடும் ஆயுததாரிகளை சந்திக்க சென்றுள்ளார். இவர் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான குழுக்களை மட்டுமே சந்தித்துள்ளார். குறிப்பாக ஜெனரல் Salim Idris என்றபவரை McCain சந்தித்திளார். 2011 ஆம் ஆண்டில் லிபியாவில் நடைபெற்ற கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளின்போதும் McCain அங்கு சென்று கிளர்ச்சிக்குளுக்களுக்கு உதவி வழங்கியிருந்தார். லிபியா, சிரியா போன்ற நாடுகளில் […]
ஜப்பான் நாட்டின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான SHARP இன் 2012 ஆம் ஆண்டுக்கான நிகர நட்டம் US $5.4 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 2011 ஆண்டுக்கான நிகர நட்டம் US $4.7 பில்லியன் ஆக இருந்ததுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் Ever-Sharp என்ற mechanical pencil களை தயாரித்ததால் SHARP என்ற பெயரை கொண்டிருந்தது. அண்மை காலங்களில் cell phone, LCD panel, calculators, printers, தொலைக்காட்சிகள் என பலதரப்பட்ட பொருட்களை […]
அந்நியர்களால் ஆரம்பிக்கப்பட்டு 70,000 அதிகமான உயிர்களை பலிகொண்ட சிரியா யுத்தம் இப்போ ஒருபடி மேலே போகிறது. அண்மையில் சிரியாவுக்கு S-300 என்ற ஏவுகணைகளை ரஷ்யா வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய அமெரிக்காவின் செயலாளர் John Kerry இந்த விற்பனை இஸ்ரவேலின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றுள்ளார். அதேவேளை சிரியாவில் கிளர்ச்சி புரிவோருக்கு U$ 100 மில்லியன் மேலதிக உதவிகளையும் அமெரிக்கா செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த யுத்தத்தை மேற்கு ஆரம்பித்ததே இஸ்ரவேலுக்கு எதிரான […]
ஆஸ்திரேலியா அண்மையில் ஒரு பதிய விசா வகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விசேட முதலீட்டாளர் விசா முறைமை சீனாவில் பெருகிவரும் செல்வந்தர்களையே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசா வகுப்பு முறைமை குறைந்தது A$ 5 மில்லியன் முதலீட்டை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வோருக்கு 5 வருடம் வாழ விசா வழங்குகிறது. அந்த 5 வருடத்தின் பின் விரும்பின் அவர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறவும் உரிமை உண்டு. இதுவரை சுமார் 170 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் அதிகமானோர் சீன பிரசைகள். […]
சனத்தொகை வேகமாக அழிந்துவரும் நாடுகளுள் முன்னணி வகிப்பது ஜப்பான். 1915 இல் 7.7% சனத்தொகை அதிகரிப்பு, 1930 இல் 7.0% அதிகரிப்பு, 1950 இல் 15.6% அதிகரிப்பு, 1975 இல் 7.9% அதிகரிப்பு என்றெல்லாம் இருந்த ஜப்பானில் 2005 இல் சனத்தொகை அதிகரிப்பு வெறும் 0.7% ஆகி, அது 2010 இல் 0.2% ஆகி தற்போது சனத்தொகை வீழ்ச்சியை எதிர்பார்க்கிறது. அதாவது 2012 இல் சனத்தொகை மாற்றம் -0.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு வேகமாக அதிகரித்து வருவது முதியோர் எண்ணிக்கையே. 1930களில் இருந்து […]
ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கார்சாய் (Hamid Karzai) தான் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி New York Times என்ற பத்திரிக்கை அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கார்சாய் இவ்வாறு கூறியுள்ளார். NY Times செய்தியின்படி இவர் பல பத்து மில்லியன் அமெரிக்கன் டொலர்களை பொதிகளில் பெற்றுள்ளார். அவர் தனது பதிலில் “ஆம், தேசிய பாதுகாப்பு அலுவலகம் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவுடன் இருந்து உதவிகளை பெற்று வருகிறது” […]
தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2013 இன் முதலாம் காலாண்டு இலாபம் U$6.4 பில்லியன் (7.15 ட்ரில்லியன் கொரியன் won) என வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 42% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது. உலக smartphone சந்தையின் 32.7% பங்கை சாம்சங் தற்போது கொண்டுள்ளது. கடந்த காலாண்டில் இது 30% ஆகவும் ஒரு வருடத்தின் முன் 28.8% ஆகவும் இருந்தது. சாம்சங்கின் இவ்வாறான வளர்ச்சி […]
PKK (Kurdistan Workers’ Party) என்ற குர்திஸ் இனத்தை சார்ந்த ஆயுத குழு 1978 ஆம் ஆண்டில் இருந்து துருக்கிக்கு (Turkey) எதிராக போராடி வந்திருந்தது. Cold-War காலத்தில்முளைத்த எல்லா போராட்ட குளுக்களைப்போல் இதுவும் ஆரம்பத்தில் மேற்கு சார்பான துருக்கிக்கு எதிரான ஓர் சோஷலிச குழுவாகவே கொள்கைகளை கொண்டிருந்தது. பல மேற்கு நாடுகள் இந்த குழுவை பயங்கரவாத குழுவாக தடை செய்திருந்தாலும் மறைமுகமாக தமது நாடுகளில் செயல்படவிட்டன (அதையே புலிகளுக்கும் செய்திருந்தனர்). துருக்கியின் இன் நண்பன் அமெரிக்காகூட தேவைகள் ஏற்படும்போது PKK இக்கு உதவியும், அதனிடம் […]
பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி செய்யும் 8 மாடி கட்டம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 120 பணியாளர்வரை மரணமாகி உள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு வடக்கே 20 km தூரத்தில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9:00 மணியவில் இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது. மேலும் 5000 பணியாளர்வரை இடிபாடுகளுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு நாட்டு பிரபல ஆடை நிறுவனங்கள் இங்கே தமது ஆடைகளை உற்பத்தி செய்வதுண்டு. Calvin Klein, Tommy Hilfiger, Gap போன்ற நிறுவனங்களும் Wal-Mart போன்ற விற்பனை நிலையங்களும் இதில் அடங்கும். பங்களாதேசில் சுமார் 4500 ஆடை உற்பத்தி […]
NATO வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீடுகள். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய NATO நாடுகளின் இவ்வருடத்துக்கான இராணுவ வரவுசெலவு சுமார் US $35 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வகை குறைப்பு அடுத்துவரும் வரும் வருடங்களில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுவரை NATO வின் செலவுகளின் சுமார் 62% மட்டுமே செலுத்தி வந்த அமெரிக்கா இப்போது சுமார் 75% செலுத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பங்களிப்பு குறைவதே இதற்கு காரணம். இதேவேளை அமெரிக்காவும் […]