துருக்கி ஓர் NATO அணி நாடு. ஆனால் துருக்கி NATOவின் மறுதரப்பு நாடான சீனாவிடம் இருந்து பாரிய ஏவுகணை கட்டமைப்பை (missile-defense சிஸ்டம்) கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. வழமையாக அமெரிக்கா போன்ற NATO அணி நாடுகளிடம் இருந்து மட்டுமே பாரிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் துருக்கி இம்முறை சீனாவை நாடியிருப்பதையிட்டு அமெரிக்கா உட்பட பல NATO நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த ஏவுகணை உடன்படிக்கை சுமார் U$ 3.5 பில்லியன் பெறுமதி கொண்டதாக இருக்கும். சீனாவின் China […]
சீனா போன்ற நாடுகள் தம்மை உளவு பார்ப்பதாக குறைகூறும் அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளையே உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (ஐப்பசி 23, 2013) ஜேர்மனியின் தலைவி Angela Merkel அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து வெறுப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சு அரசுடன் அமெரிக்கா உளவு விடயம் சம்பந்தமாக சமரசம் பேசவேண்டி இருந்தது. மார்கழி 10, 2013 முதல் தை 8, 2013 வரையில் சுமார் […]
இந்த வருடம் மாசி மாதம் பெரியதோர் விண்கல் ரஷ்யாவின் Chelyabinsk என்ற நகரின் அண்மையில் வீழ்ந்திருந்தது.இன்று புதன்கிழமை அந்த கல்லை Chebarkul வாவிக்கு அடியில் இருந்து மீட்டுள்ளனர். இந்த கல் வீழ்ந்தபோது பனிப்பாறை படர்ந்த வாவியின் மேற்பரப்பில் 20 அடி துளையை ஏற்படுத்தி இருந்தாலும் சுமார் 40 அடி ஆழத்தில் 8 அடி சதுப்புக்குள் புதைத்திருந்த இந்த கல்லை கண்டுபிடித்து எடுக்க 7 மாதங்கள் வரை எடுத்துள்ளது. இதை வாவிக்கு வெளியே எடுக்கும்போது 3 துண்ட்டுகளாக உடைந்துள்ளது. […]
முதுமரத் தாய் துவாரகன் (2013/05) அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்து போகாத நினைவுகள் வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின. சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின. தளர்ந்து செதிலாகிப் போன கால்களை நீட்டியபடி இன்னமும் தீர்ந்து போகாத அந்த நினைவுகளோடு காத்திருக்கிறாள் முதுமரத் தாயொருத்தி. அறுந்துபோன செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல் எல்லோரும் அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
“எழுநூற்றி ஐம்பது, அல்லது சுருக்கமாக ஐம்பது. இது யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னிலை பஸ் இலக்கம். அந்த பஸ்ஸில் ஒரு மூலையில் வாத்தியார். அவரும் யாழ்ப்பாண குடா நாட்டின் முன்னிலை பிரசைகட்கு ஒரு உதாரணம். அவரின் மடியில் கூடை நிரம்ப மீன், காய்கறி. வாத்தியார் அருகில் ஒரு வாலிபன்.
க. நீலாம்பிகை“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு”“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” மேல் கூறிய மூத்தோர் வாக்குகள் மூலம் பண்டைய தமிழர் எழுத்தறிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சம அளவில் எண் அறிவுக்கும் கொடுத்திருந்தமையை அறியக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று உலகெங்கும் பாவனையில் உள்ள நவீன எண்களை (modern decimal number system) பண்டைய தமிழரே உலகிற்கு வழங்கியிருக்கலாம் என கருத பல ஆதாரங்கள் உண்டு. முதலாவதாக நாம் இலக்கங்களை அழைக்கும் முறையை […]
முதல் தடவையாக ஜப்பானின் கடன் தொகை ஆயிரம் ரில்லியன் யென்னை (1000 trillion Yen = U$ 10.4 trillion) தாண்டியுள்ளது என்று ஜப்பானிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஜப்பானிய பிரசையும் 7.92 மில்லியன் yen (U$ 82,000) கடனாளியாவார். இத்தொகையில் 830 trillion அரச bond களும் அடங்கும். ஜப்பானிய நிதி அமைச்சின் தரவுகளின்படி கடந்த சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையான காலத்தில் மட்டும் ஜப்பானின் கடன் தொகை U$ […]
வாரம் இருமுறை பச்சையாக உள்ளி (வெள்ளைப்பூடு, garlic) உட்கொண்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்வாய்ப்படுவதை 44% ஆல் குறைக்கலாம் என்று சீன ஆய்வு ஒன்று கணித்துள்ளது. சீனாவின் Jiangsu மாநிலத்தில் உள்ள Cancer Prevention Research என்ற அமைப்பே இந்த ஆய்வை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருந்த இந்த ஆய்வு சுமார் 4,500 சுகதேக நபர்களிடம் இருந்தும் 1,424 நுரையீரல் நோயாளிகளிடம் இருந்தும் தரவுகளை பெற்றிருந்தது. உள்ளியை கடிக்கும்போது அல்லது […]
அமெரிக்காவின் அரசியல் புள்ளிகள் மற்றும் அந்நாட்டு பத்திரிகை துறையினர் எல்லாம் தம்மை ஜனநாயக நேயர்கள், அதற்காக முன்னின்று உழைப்பவர்கள் என்றெல்லாம் பெருமையுடன் பிரச்சாரம் செய்பவர்கள். ஆனால் வரலாறு அவையெல்லாம் பொய் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. 1961 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4ஆம் திகதி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி John F. Kennedy அரசினால் Foreign Assistance Act அமெரிக்க சட்டமாக்கப்பட்டது. அச்சட்டம் “restricts assistance to the government of any country […]
2010 ஆம் ஆண்டில் சீனா தனது நாணயமான Yuan (யுஅன் அல்லது RMB) ஐ உலக வணிக நாணயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது. அதாவது Yuanஐ சர்வதேச கொடுக்கல், வாங்கல் போன்றவற்றுக்கு பயன்படும் நாணயமாகவும், foreign reserve நாணயமாகவும் பயன்படுத்தப்படுவதை ஊக்கிவிக்க சீன அரசு முயன்றது. தற்போது Yuan பயன்பாடு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பிரித்தானியாவின் Bank of England 200 பில்லியன் Yuan (சுமார் US$ 30 பில்லியன்) currency swap […]