ஆதி காலங்களில் அமெரிக்கா வந்த இந்தியர்கள் சிறுது சிறுதாக சேமித்து, படிப்படியாக பொருளாதரத்தில் வளர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியாவின் பட்டேல்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் பல வணிகத்துறைகளில் வேரூன்றி நின்றவர்கள். Motel துறை இவர்கள் வேரூன்றிய முன்னணி வணிகங்களில் ஒன்று. சிலர் அதற்கும் மேலாக சென்று பிராந்திய அளவிலான வங்கிகளையும் ஆரம்பித்திருந்தனர். அனால் அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. . கடந்த மாதம் United States Department of Treasury இந்தியர்களால் […]
ஆஸ்திரேலிய நாட்டின் தம்பதியினர், மனைவியின் உடல்நல குறைபாடு காரணமாக தமக்கு குழந்தை பிறக்காது என்பதால் Pattramon Chanbua என்ற தாய்லாந்து பெண் ஒருவரை 10,000 euro கொடுத்து surrogate தாயாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். பணம் கொடுத்து இவ்வகையில் surrogate தாய் எடுப்பது ஆஸ்திரேலியாவில் குற்றம். அதனாலேயே இவர்கள் தாய்லாந்து போன்ற இடங்களில் அவ்வகை வாடகை தாயை பிறப்பு வரை வாடகைக்கு அமர்த்துவர். . இந்த தம்பதியினரின் கருக்கட்டல் இரணை பிள்ளைகளை தாய்லாந்து வாடகை தாய்க்கு கொடுத்தது. […]
Malaysian Airlines விமானம் ஒன்று Ukraine-Russia எல்லைப்பகுதில் வீழ்ந்துள்ளது. Amsterdam இல் இருந்து கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் 280 பயணிகளையும் 15 பணியாளர்களையும் கொண்டிருந்தது என கூறப்பட்டுள்ளது. . தற்போது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிழக்கு Ukraine பகுதிக்கு மேலே 10,000 மீட்டர் உயரத்தில் (33,000 அடி) செல்கையிலேயே ஏவுகணை ஒன்றால் வீழ்த்தப்படு இருக்கலாம் என நம்பப்படுகிறது. . ஆனால் அப்பகுதியில் இயங்கும் ரஷ்சிய ஆதரவு குழு தமது ஏவுகணை 4,000 மீட்டர் உயரம் வரையே சென்று […]
அண்மைய தேர்தலின்பின் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு தமது மதிய அரசுக்கான வரவுசெல்வில் US $33 மில்லியனை Sardar Vallabhbhai Patelஇக்கு ஒரு சிலை அமைப்பதற்கு ஒதுக்கியுள்ளது. இந்த சிலை அமைப்பு வேலைகள் மோடி மத்திய அரச தேர்தலில் வெல்வதற்கு 6 மாதங்கள் முன்னரேயே ஆரம்பிக்கபட்டு இருந்தது. அப்போது இந்த சிலைக்கான மொத்த செலவையும் குஜராத் மாநில அரசே செலுத்தும் என்று கூறப்பட்டது இருந்தது. மோடி அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்திருந்தார். […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மோடி வரும் September மாதத்தில் அமெரிக்கா செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் கடிதத்தை அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் Williams Burns டில்கியில் இன்று வெள்ளிக்கிழமை அளித்துள்ளார். . 2002 ஆம் ஆண்டில் குஜாராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி அப்போது அங்கு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவில்லை என்று கூறிய அமெரிக்கா, மோடிக்கு அமெரிக்க செல்ல விசா […]
பெர்லின் (Berlin) நகரில் நிலைகொண்டுள்ள CIA இன் தலைமையை ஜேர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி அந்நாடு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதை ஜேர்மன் அரச பேச்சாளர் Steffen Seibert ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் அண்மைக்கால அமெரிக்கா மற்றும் ஜேர்மன் இடையேயான உளவு விவகார முரண்பாடு உச்சத்துக்கு வந்துள்ளது. . இவ்வகையில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை உளவு பார்க்கும் உண்மைகள் Edward Snowden மூலம் பகிரங்கத்துக்கு வந்திருந்தது. ஜேர்மனின் தலைமை Angela Merkelலின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும் அமெரிக்கா மீது குற்றம் […]
பர்மா என்று முற்காலங்களில் அழைக்கப்பட்ட மயன்மாரின் முக்கிய அரசில் பிரமுகரான அங் சன் சு கியின் (Aung San Suu Kyi) அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியில் உள்ளது. மேற்கு நாடுகளின் பலத்த ஆதரவுடன் பர்மாவின் அடுத்த தலைவராக இவர் தெரிவு செய்யப்படலாம் என்று அண்மைவரை கருதப்பட்டு வந்தது. அனால் இந்தக்கிழமை உறுதிப்படுத்தப்பட சட்டம் ஒன்று Suu Kyi அந்நாட்டின் தலைவர் ஆவதை தடுக்கின்றது. பர்மாவின் நீண்டகால சட்டப்படி ஒருவரின் கணவர்/மனைவி அல்லது பிள்ளைகள் வேறு […]
FIFA 2014 கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (வியாழன்) பிரேசில் நாட்டின் Sao Paulo நகரில் ஆரம்பமாகிறது. முதல் தினத்தில் போட்டியை நடாத்தும் பிரேசிலுக்கும் குரோசியாவுக்கும் இடையில் போட்டி நடைபெறும். மொத்தம் 31 நாடுகள் 2014 போட்டிகளில் பங்குகொள்கின்றன. ஆசிய-பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே பங்குகொள்கின்றன. பிரேசில் நாட்டின் பலரும் அங்கு FIFA 2014 நடைபெறுவதை விரும்பி இருந்தாலும், சிலர் இதற்காக பெருமளவு பணம் செலவழிப்பதை வெறுத்து வீதி […]
Ukraine முரண்பாடுகள் ஆரம்பமாகுமுன், 2011 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அரசு ரஷ்யாவுக்கு இரு பாரிய Mistral வகை யுத்த கப்பல்களை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த இரு கப்பல்களினதும் மொத்த பெறுமதி $1.66 பில்லியன். அத்துடன் மேலும் இரு கப்பல்களையும் ரஷ்யா கொள்வனவு செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்கா இவ்வகை நவீன கப்பல்கள் ரஷ்யாவிடம் போவதை முதலில் இருந்தே விரும்பி இருந்திருக்கவில்லை. ரஷ்யா கிரைமியாவை தன்வசப்படுத்தியபின் அமெரிக்காவின் எதிர்ப்பு மேலும் பலப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் […]
பாகிஸ்தானின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான கராச்சி விமான (Muhammad Ali Jinnah International Airport) நிலையம் மீது குறைந்தது 10 ஆயுததாரிகள் தாக்கியதில் மொத்தம் 23 நபர்கள் வரை பலியாகியுள்ளனர். மேலும் 23 நபர்கள் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி ஞாயிறு இரவு 11:00 மணியளவில் ஆரம்பித்திருந்துள்ளது. உடனடியாக விமான சேவைகள் திசை திருப்பப்பட்டன. சுமார் 5 மணித்தியாலங்களில் படையினர் 10 தாக்குதல்காரர்களை கொலை செய்து நிலைமையை கட்டுப்பாட்டுள் கொண்டுவந்துள்ளனர். ஞாயிரு […]