U$ 13 பில்லியன் தண்டம் கட்டும் JPMorgan வங்கி

JPMorgan வங்கி உலகில் இரண்டாவது பெரியது, அமெரிக்காவில் முதலாவது பெரியது. இதன் ஆரம்பம் 1895. 2000 அம்ம ஆண்டில் இதுவும் அமெரிக்காவின் மற்றுமோர் வங்கியான Chase Manhattan உடன் இணைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் இதன் மொத்த சொத்துக்கள $2500 பில்லியனுக்கும் அதிகம் (1.5 ரில்லியன்). 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலங்களில் JPMorgan பல பெரு நட்டங்களை எதிர்பார்க்கக்கூடிய முதலீடுகளில் பங்கெடுத்தது. வேறு பல வங்கிகளும் வீடு அடமான நிறுவனக்களும் இவ்வாறு […]

இலங்கையில் சீனா U$ 500 மில்லியன் முதலீடு

அண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட […]

ஒரு-குழந்தை சட்டத்தை தளர்க்கும் சீனா

சீனாவின் தற்போதைய அதீத வளர்ச்சிக்கு தந்தையான டெங் சியாஒ பிங் (Deng Xiao Ping) அறிமுகப்படுத்திய கடுமையான சட்டங்களில் ஒன்று ஒரு-குழந்தை சட்டம். இந்த சடத்தின் கீழ் ஒரு தம்பதியினர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். தவறின் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாரிய குற்றப்பணம் செலுத்துதல், மானியங்கள் குறைப்பு, பாடசாலை வசதிகள் மறுப்பு போன்றன இந்த தண்டனைகளில் அடங்கும். இந்த சட்டம் Hong Kong, Macau போன்ற விசேட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இரணை பிள்ளைகளும் இந்த […]

ஈரான் அணுசக்தி: ஒபாமா தவிக்கிறார், இஸ்ரேல் குமுறுகிறது

ஈரான் அணுசக்தி உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஈரான் தமது அணுசக்தி உற்பத்தி மின்சக்தி போன்ற தேசநலன் பயன்பாடுகளுக்கு மட்டுமே அன்றி அணு ஆயுத பயன்பாடுகளுக்கு அல்ல என்கிறது. ஆனால் ஈரானின் பரம எதிரி இஸ்ரேல் உட்பட அமெரிக்கா நட்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மற்றைய சிறிய நாடுகளையும் பயமுறித்தி ஈரானின் மீது தடைகளை விதிக்க தூண்டுகிறது. தடைகளின் மத்தியிலும் […]

பங்களாதேசத்தில் 152 எல்லைக்காவல் படையினருக்கு மரணதண்டனை

பங்களாதேசத்தில்எல்லை காவல்படையினருக்கு அந்நாட்டின் இராணுவத்துக்கு உள்ள சலுகைகள், உரிமைகள் இல்லை. பங்களாதேசத்தின் 4000 km இக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பர்மா எல்லைகளில் காவல் புரியும் இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. இதை எதிர்த்து எல்லை காவல் படையினர் 2009 ஆம் ஆண்டில் சிறு புரட்சி ஒன்றை செய்திருந்தனர். இந்த புரட்சி 33 மணித்தியாலங்களே நீடித்தது. இந்த 33 புரட்சியின் முடிவில் 57 உயர் மற்றும் நடுத்தர இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 74 பெயர்கள் கொல்லப்பட்டிருந்தனர். […]

எகிப்தை தண்டிக்கவில்லை என்கிறர் John Kerry

ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றிகொண்டு பதவிக்கு வந்த மோர்சி தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த ஜெனரல் அல்-சிஸ்சி (al-Sissi) தலைமையிலான அரசை முன் அறிவித்தல் எதுவும் இன்றி இன்று ஞாயிறு சென்று சந்தித்துள்ளார் அமெரிக்காவின் Secretary of State John Kerry. சில மாதங்களின் முன் ஒபாமா அரசு மோர்சியின் வெற்றியில் பங்குகொண்டு பிரச்சாரங்கள் செய்திருந்ததை மறந்து இப்போ Kerry எகிப்து சென்று மோர்சியை சிறை வைத்த இராணுவ சதியாளரை […]

Bankruptcy ஆகும் $30 பில்லியன் வைத்திருந்தவர்

பிரேசில் நாட்டவரான Eike Batista சில வருங்களின் முன்னர் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். 2012 ஆம் ஆண்டளவில் இவரின் மொத்த பெறுமதி (market value) சுமார் $30 பில்லியன்.இந்த வருட நடுப்பகுதில் இவரின் பெறுமதி சுமார் $200 மில்லியன். இவாரம் அவரின் நிறுவனம் Bankruptcy ஆகிறது. எண்ணெய் மற்றும் உலோக அகழ்வுகளில் முன்னணி வகித்த இவரின் நிறுவனம் ஒரு காலத்தில் பிரேசிலிலும் கனடாவிலும் 8 தங்க அகழ்வுகள், 1 சில்வர் அகழ்வு, 3 இரும்பு அகழ்வுகளை […]

அமெரிக்காவுக்கு இந்திய InfoSys $34 மில்லியன் தண்டம்

InfoSys இந்தியாவின் மிகப்பெரியதோர் software நிறுவனம். பெங்களூர், கர்நாடகாவில்தலைமையகத்தை கொண்ட இது உலகளவில் சுமார் 160,000 பணியாளர்களை கொண்டது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பணியாளர் உண்டு. இதன் வருட வருமானம் $7.3 பில்லியனுக்கும் அதிகம். நிகர இலாபம் $1.7 பில்லியனுக்கும் அதிகம். அண்மையில் இதன் அமெரிக்க பணியாளர் Jay Palmer சில உள்வீட்டு உண்மைகளை பகிரங்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமெரிக்க அரசு விசாரணைகளை தொடங்கியது. அமெரிக்காவில் 3 வருடம் வரை பணியாற்ற விரும்பும் இந்திய தொழிநுட்ப […]

அமெரிக்கா-சவூதி முறுகல்

சவுதி அரேபிய அமெரிக்காவின் நீண்டகால நண்பன். நண்பன் என்பதைவிட சந்தர்ப்பவாத கூட்டாளிகள் எனலாம். சவுதிக்கான இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள், எண்ணெய் உற்பத்திக்கான அறிவுகள், இயந்திரங்கள் எல்லாமே பெருமளவில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது. அதேவேளை சவுதி அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் ‘war on terror, இல் சவுதி ஒரு முக்கிய பங்காளி. ஆனால் அவர்களிடையே இப்போது முறுகல் நிலை தேன்றியுள்ளது. சிரியாவில் நடைபெறும் யுத்தம் சுவுதி போன்ற நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. சிரியாவின் தலைவர் அசாத், சுவுதியின் […]

இந்தியாவில் பாரிய வெங்காய தட்டுப்பாடு

சீனாவுக்கு அடுத்ததாக உலகில் அதிகம் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அத்துடன் வெங்காயம் இந்தியர்களின் சமையலில் ஓர் முக்கிய அங்கமாகும். இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு சுமார் 16.5 மில்லியன் தொன் வெங்காயத்தை கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பாரிய தட்டுப்பாடு காரணமாக ஒரு Kg வெங்காயத்தின் விலை Rs 100.00 வரைக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களின் முன் ஒரு Kg Rs 25.00 ஆக இருந்துள்ளது. இந்த அதீத […]