பாலஸ்தீனியர் தீர்வு திட்டம் முறியடிப்பு

ஜோர்டான் (Jordan) நாட்டால் இன்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. Security Council இல் முன்வைத்த இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் விவகாரத்துக்கான தீர்வு 1 வாக்கு குறைவால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு அடுத்த படியை அடைய மொத்தம் 15 வாக்குகளில் குறைந்தது 9 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு 9 வாக்குகளை இந்த திட்டம் பெற்றிருந்தாலும், அமெரிக்கா இதை veto மூலம் நிராகரித்து இருக்கும். ஆனால் அமெரிக்கா veto பாவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பி இருந்திருக்கவில்லை. . இந்த […]

சீனாவின் முதலீட்டில் நிக்கரகுவா கால்வாய்

அமெரிக்கா கட்டிய பனாமா கால்வாயை மிஞ்சும் வகையில் நிக்கரகுவாவை ஊடறுத்து புதியதோர் கால்வாயை கட்ட இன்று அடிக்கல் நாட்டியுள்ளது சீனா. நிக்கரகுவாவின் சன் குவான் (San Juan) ஆற்றையும் நிக்கரகுவா வாவியையும் உள்ளடக்கி செல்லப்போகும் இந்த கால்வாய், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கப்போகும் இரண்டாவது கால்வாய் ஆகும். . ஆதியில் அமெரிக்கா இந்த வழியில் கால்வாய் ஒன்றை அமைப்பதை ஆராய்ந்து இருந்தது. ஆனால் பின்னர் பனாமாவை தெரிந்து கொண்டது. . 2013 ஆம் ஆண்டு ஜூன் […]

SONYயை உலுக்கிய வடகொரியா

SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வரும் நத்தார் தினத்தன்று திரையிடப்பட்டு இருந்தது. . இந்த படத்தின் கதைப்படி வெளிநாடவர் இருவர் பத்திரிகையார் உருவில் வடகொரிய சென்று, அந்நாட்டு தலைவர் Kim Jong-Un உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி […]

மீண்டும் அமெரிக்கா-கியூபா உறவு

1961 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா-கியூபா உறவை மீண்டும் புதிப்பிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பணித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதுவர் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அமெரிக்கர்கள் கியூபா செல்லவும் இலகுவாக அனுமதிக்கப்படும். கடந்த 18 மாதங்களாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளது. . இந்த புது உறவின் ஒரு அங்கமாக அமெரிக்கா தன்னிடம் கைதிகளாக இருந்த 3 கியூபா நாட்டவர்களை விடுதலை செய்யவுள்ளது. […]

CIAயின் கொடூர விசாரணை பயனற்றது

அமெரிக்காவில் இன்று வெளியிடப்பட்ட Senate Report, அவர்களால் கைது செய்யப்பட்ட al-Queda உறுப்பினர் மீது சட்டங்களுக்கு அப்பால் CIA செய்த கொடூர விசாரணைகள் புதிதாக உண்மைகள் எதையும் கொடுக்கவில்லை என்கிறது. al-Quedaவின் தலைவர் ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்ததிலும் CIAயின் விசாரணைகளால் பெறப்பட்ட உண்மைகள் பயன்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. . சுமார் 120 சந்தேகநபர்கள் மீது நடாத்தப்பட்ட water-boarding (கைதியின் முகத்தை மேலே பார்க்க வைத்து முகத்தில் நீண்ட நேரம் பெருமளவு நீரை ஊற்றுதல்), ஒரு வாரகாலம் […]

நாசாவின் Orion பரீட்சை வெற்றிகரம்

அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே. . மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் பயணித்த இந்த கலம் இரண்டு தடவைகள் பூமியை வலம் வந்து இருந்தது. இது முதல் சுற்றில் 270 km உயரத்திலும் இரண்டாம் சுற்றில் 5794 km உயரத்திலும் பயணித்து இருந்தது. தற்போது உலகை […]

ஊழல் கணிப்பில் இலங்கை 85வது இடத்தில்

Transparency International என்ற ஊழல் எதிர்ப்பு குழு நடாத்திய இந்த ஆண்டு கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 85வது இடத்தை அடைந்துள்ளது. Burkina Faso, இந்தியா, Jamaica, Peru, Philippines, Thailand, Trinidad and Tobago, Zambia போன்ற நாடுகளும் 38 புள்ளிகளை பெற்று 85 இடத்தை இலங்கையுடன் இணைந்து பெற்றுள்ளன. மொத்தம் 174 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. . Denmark 92 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், New Zealand […]

சீனாவில் இருந்து ஸ்பெயினுக்கு ரயில்

இந்த மாதம் 18 ஆம் திகதி சீனாவின் கிழக்கு எல்லையில் உள்ள YiWu நகரில் இருந்து 82 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் Madrid நகருக்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் தற்போதை அதிபர் சீ (Xi) இன் திட்டத்துக்கு இணங்க இந்த 6,200 மைல் நீள பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த ரயில் 21 நாட்களில் தனது பயணத்தை Madrid இல் முடிக்கும் என கூறப்பட்டுள்ளது. . சீனா இரண்டு புதிய silk road களை கட்டியெழுப்ப […]

ஒபாமாவை இந்தியாவுக்கு அழைகிறார் மோடி

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவை இந்தியாவுக்கு வருமாறு இன்று (2103-11-21) அழைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு January 26 ஆம் திகதி நடைபெறுவுள்ள இந்திய குடியரசு தினத்து (Republic Day) நிகழ்வுகளுக்கே ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். . அழைப்பை ஏற்று ஒபாமா இந்தியா செல்வார் என வெள்ளைமாளிகையும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் பங்கு கொள்வது இதுவே முதல் தடவையாக இருக்கும். . அதேவேளை ஒபாமா இதுவரை கால நட்பு நாடான பாகிஸ்தானின் […]

இஸ்ரவேலை கைவிடும் ஐரோப்பியம்

மிக நீண்ட காலமாக இஸ்ரவேலை கண்மூடித்தனமாக ஆதரித்து வந்த ஐரோப்பியம் மெதுவாக பாலஸ்தீனியர் பக்கம் ஆதரவை செலுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரவேல். . அமெரிக்கா உட்பட மேற்கின் அதியுயர் அரசியால் மற்றும் பத்திரிகை துறைகளை இஸ்ரவேல் ஆதரவு குழுக்கள் தமது கடுப்பாட்டில் நீண்டகாலமாக வைத்திருந்தன. அந்த ஆதரவின் பலத்துடன் தமக்கு வேண்டியது எல்லாவற்றையும் இஸ்ரவேல் நியாயமின்றி நிறைவேற்றியும் வந்து. இந்நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்படாவிடினும், மேற்கின் சாதாரண மக்கள் மத்தியில் இஸ்ரவேல் வெறுப்புக்குள்ளாகி வருகின்றது. […]