அமெரிக்க பங்குச்சந்தை 2 தினங்களில் $6 ட்ரில்லியன் இழப்பு 

அமெரிக்க பங்குச்சந்தை 2 தினங்களில் $6 ட்ரில்லியன் இழப்பு 

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி மேலும் 2,230 புள்ளிகளை (5.5%) இழந்துள்ளது. இந்த சுட்டி ஏற்கனவே வியாழக்கிழமை 4% பெறுமதியை இழந்திருந்தது. வெள்ளிக்கிழமை NASDAQ மற்றும் S&P 500 ஆகிய சுட்டிகளும் சுமார் 6% பெறுமதியை இழந்துள்ளன. ரம்பின் இந்த வரி யுத்தத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கடந்த 2 தினங்களில் மட்டும் $6 ட்ரில்லியன் (அல்லது $6,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. வரலாற்றில் இது மிக பெரிய இழப்பாகும். ரம்பின் வரிக்கு சீனா […]

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34% பதிலடி வரி 

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34% பதிலடி வரி 

ரம்ப் சீனாவிலிருந்தான இறக்குமதிகளுக்கு அண்மையில் 34% மேலதிக இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% பதிலடி வரியை இன்று அறிவித்துள்ளது. சீனாவின் இந்த வரிகள் இந்த மாதம் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோயாவின் (soybean) 60 முதல் 70% வரை சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் இதை பயிரிடும் மக்கள் பொதுவாக கிராமப்புற ரம்ப் ஆதரவாளர்களே. அமெரிக்காவின் Boeing விமானங்கள் அதிக அளவில் சீனாவால் கொள்வனவு செய்யப்படுகின்றன. […]

வெள்ளி மாலை இலங்கை வரும் இந்திய பிரதமர் மோதி

வெள்ளி மாலை இலங்கை வரும் இந்திய பிரதமர் மோதி

இன்று வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் மோதி இலங்கை வருகிறார். இவர் இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார். இவரின் இலங்கை பயணத்தின் உள்நோக்கம் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும், எரிபொருள் ஒப்பந்தங்களையும் செய்வதே. திருகோணமலையில் கைத்தொழில் நிலையங்கள், இலங்கையின் பயன்பாட்டுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய அமைப்பது தொடர்பாகவும் மோதியும், அனுரவும் உரையாடுவார். இந்தியா இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அது சீனா அம்பாந்தோட்டையில் $3.2 பில்லியன் செலவில் அமைக்கும் Sinopec சுத்திகரிப்பு நிலையத்துடன் போட்டியிட தள்ளப்படும். மோதி […]

அமெரிக்க DOW பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் வீழ்ச்சி 

அமெரிக்க DOW பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் வீழ்ச்சி 

இன்று வியாழன் காலை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி 1,570 புள்ளிகளால் (அல்லது 3.6%) வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் உலகளாவிய இறக்குமதி வரிகளால் உலக பொருளாதாரம் மிகவும் மந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அமெரிக்க பொருளாதாரமே அதிகம் பாதிக்கப்படும். அத்துடன் அமெரிக்காவின் S&P 500 சுட்டி 4% ஆலும், தொழில்நுட்ப பங்குகளை கையாளும் NASDAQ சுட்டி 4.9% ஆலும் வீழ்ச்சி அடைந்துள்ளன. உலக அளவில் அமெரிக்க பங்குச்சந்தைகளே பாரிய வீழ்ச்சியை […]

சீன பொருட்களுக்கான ரம்பின்வரி 54% ஆக உயர்வு

சீன பொருட்களுக்கான ரம்பின்வரி 54% ஆக உயர்வு

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கான ரம்பின் வரி (tariff) புதன்கிழமை 54% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 20% ஆக இருந்த இந்த வரியே தற்போது 54% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சீனா ரம்பின் புதிய வரிகளுக்கு பதில் வரிகள் அறவிட உள்ளதாக முன்னர் அறிவித்து இருந்தது. சீனாவின் புதிய பதிலடி வரி விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை வியட்நாம் மீதான இறக்குமதி வரி 46% ஆகவும், கம்போடியா மீதான இறக்குமதி வரி 49% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய […]

செவ்வாய் இடைக்கால தேர்தல்களில் ரம்ப் தரப்பு பின்னடைவு 

செவ்வாய் இடைக்கால தேர்தல்களில் ரம்ப் தரப்பு பின்னடைவு 

செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற சில இடைக்கால தேர்தல்களில் ரம்பின் கட்சி தோல்விகளையும், பின்னடைவுகளை அடைந்துள்து. இந்த தேர்தல் முடிபுகள் ரம்பின் ஆட்சிக்கு ஆபத்து அல்ல என்றாலும் அவரின் Republican கட்சிக்கு கடும் எச்சரிக்கையாக அமையும். Wisconsin மாநிலத்து Supreme Court நீதிபதிகளுக்கான தேர்தலில் ரம்பின் ஆதரவு கொண்டவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றிக்காக ரம்பின் கையாள் ஆக விளங்கும் இலான் மஸ்க் $21 மில்லியன் வரை செலவு செய்திருந்தார். ஆனாலும் Democratic கட்சி ஆதரவு கொண்ட போடியாளரேவென்றார். […]

தமிழ்நாடு பா.ஜ., அ.தி.மு.க கூட்டுக்கு அண்ணாமலை பலி?

தமிழ்நாடு பா.ஜ., அ.தி.மு.க கூட்டுக்கு அண்ணாமலை பலி?

கடந்த தமிழ்நாடு மாநில தேர்தலில் அண்ணாமலை தலைமயிலான தமிழ்நாடு பா.ஜ. கட்சி படுதோல்வி அடைந்தாலும், அண்ணாமலையும்  தேர்தலில் வெற்றி பெறாததாலும் தமிழ்நாடு பா.ஜ. கட்சி திராவிட கட்சியான அ.தி.மு.க. வுடன் இணைந்து போட்டியிட முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டு முயற்சிக்கு தற்போதைய தமிழ்நாட்டு பா.ஜ. தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு பதிலாக Nainar Nagendran என்பவர் பா.ஜ வின் தமிழ்நாட்டு தலைவர் ஆகலாம். அத்துடன் இந்த கூட்டு வென்று […]

இதுவரை புகழ் பாடிய பூட்டின் மீது ரம்ப் பாய்ச்சல் 

இதுவரை புகழ் பாடிய பூட்டின் மீது ரம்ப் பாய்ச்சல் 

இதுவரை காலமும் அமெரிக்காவின் வழமையான நட்பு நாடுகள் மீது பாய்ந்து, ரஷ்ய சனாதிபதி பூட்டினை புகழ்ந்து பாடிய ரம்ப் ஞாயிறு தான் பூட்டின் மீது மிகவும் கோபம் (very angry) கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் ரஷ்யாவுக்கும் யூக்கிறேனுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு பூட்டின் ஆதரவு தராமையாலேயே தான் பூட்டின் மீது கோபம் கொண்டுள்ளதாக ரம்ப் காரணம் கூறியுள்ளார். அத்துடன் தனது யுத்த நிறுத்த திட்டத்துக்கு பூட்டின் விரைவில் இணங்காவிட்டால் ரஷ்ய எரிபொருளை […]

ஈரான் இணங்க மறுத்தால் குண்டு வீசுவாரம் ரம்ப் 

ஈரான் இணங்க மறுத்தால் குண்டு வீசுவாரம் ரம்ப் 

ஈரான் தான் விரும்பியபடி அணு சக்தி உடன்படிக்கைக்கு இணங்க மறுத்தால் ஈரான் மீது குண்டுகள் வீசப்படும் என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று ஞாயிரு மிரட்டியுள்ளார். ஆனால் ஈரான் மீது குண்டு வீசுவேன் என்று கூறிய மறுகணம் தான் குண்டுக்கு பதிலாக மேலும் உக்கிரமான தடைகளை விதிப்பேன் என்றும் குழப்பமாக கூறினார் ரம்ப். 2017 முதல் 2021ம் ஆண்டு வரையான தனது முதலாவது ஆட்சிக்காலத்தில் ரம்ப் அதற்கு முன் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகள் செய்துகொண்ட […]

பர்மாவை தாக்கிய 7.7 அளவிலான நிலநடுக்கம் 

பர்மாவை தாக்கிய 7.7 அளவிலான நிலநடுக்கம் 

பர்மாவை 7.7 அளவிலான நிலநடுக்கம் இன்று வெள்ளி மதியம் அளவில் தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பர்மாவின் மத்திய Mandalay பகுதியில் நிலைகொண்டாலும் தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவு கட்டிடங்கள் உடைந்து விழுந்தாலும் இதுவரை உயிர் பலி விபரங்கள் அறியப்படவில்லை. 2021ம் ஆண்டு பர்மாவின் இராணுவம் சதிமூலம் ஆட்சியை கைப்பற்றிய பின் அங்கிருந்து உண்மையான தகவல்கள் வெளிவருவது கடினமாக உள்ளது. தாய்லாந்தில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி ஒன்று உடைந்து விழுந்துள்ளது. கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த பலர் […]