இஸ்ரேல் போகிறார் இந்திய பிரதமர் மோதி

இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 ஆம் திகதி இஸ்ரேல் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் தடவை. நீண்ட காலமாக பலஸ்தீனருக்கு ஆதரவாக இருந்து வந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் தயவையும், அதை நிறைவேற்ற இஸ்ரேலின் ஆதரவையும் நாடுகிறது. . தனது இஸ்ரேல் பயணத்தின்போது மோதி இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூவை (Netanyahu) சந்திப்பார். . அண்மை காலங்களில் இஸ்ரேல் இந்தியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. […]

ஐரோப்பாவில் Googleக்கு $2.7 பில்லியன் தண்டம்

அமெரிக்காவின் Google நிறுவனத்தின் மீது அதன் சட்டவிரோத செயல்கள் (antitrust) காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) $2.7 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது. . தற்போது இந்த $2.7 பில்லியன் தண்டமே ஒரு நிறுவனம் மீது ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிக தண்டமாகும். இதற்கு முன் ஐரோப்பா அமெரிக்காவின் chip தயாரிப்பு நிறுவனமான Intel மீது சுமார் $1.1 பில்லியன் தண்டம் விதித்து இருந்தது. . தற்போது பொதுமக்கள் கூகிளின் […]

டிரம்பை சந்திக்க அமெரிக்காவில் மோதி

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க இந்திய பிரதமர் வாஷிங்டன் வந்துள்ளார். இந்தியா மீது டிரம்ப் பெருமளவு பொருளாதார குற்றச்சாட்டுக்களை ஏவிய நிலையிலேயே மோதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். . சீனா மீதும் டிரம்ப் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்திருந்தாலும், சீன ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் சீனா மீதான பல குற்றச்சாட்டுக்களை டிரம்ப் கைவிட்டு இருந்தார். உதாரணமாக சீனா, தனது பொருளாதார நலன்களுக்காக, தனது நாணயத்தை கட்டுபப்டுத்தும் நாடு (currency manipulator) என்றிருந்தார் டிரம்ப். ஆனால் சீன ஜனாதிபதியின் […]

Ehud Barak: இஸ்ரேல் apartheid ஆட்சியை நோக்கி

இஸ்ரேல் தென் ஆபிரிக்கா வெள்ளையரின் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது போலான apartheid ஆட்சியை நோக்கி செல்கிறது என்றுள்ளார் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் Ehud Barak. ஜெர்மன் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே Barak இவ்வாறு கூறியுள்ளார். . யூதருக்கு, அரபு நாட்டவர்க்கும் இடையே இடம்பெற்ற Six-Day யுத்தத்தின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு Tim Sebastian நடாத்திய நேர்காணலுக்கே முன்னாள் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். . Netanyahu தலைமயிலான தற்போதைய இஸ்ரேல் அரசு இஸ்ரேல்-பாலஸ்தான் […]

2032 ஒலிம்பிக்கை நடாத்த இந்தியா ஆவல்

2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பான Indian Olympic Association (IOA) 2032 ஆண்டுக்கான போட்டிகளை இந்தியாவில் நடாத்த முயற்சிக்கும் பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த செய்தியை IOA தலைவர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். . இந்திய அரசு ஆதரவு வழங்கினும், 2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிகை நடாத்த வேறு நாடுகள் முன்வரின் அந்த நாடுகளுடன் போட்டியிட்டே இந்தியா உரிமையை பெற்ற […]

ஈரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

சிரியாவின் தென் பகுதியில் ஆயுதங்கள் பெருத்தப்பட்ட நிலையில் பறந்த ஆளில்லா வேவு விமானம் ஒன்றை இன்று செவ்வாய் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் அரசுக்கு ஆதரவாக பறந்த ஈரானின் Shaheed-129 என்ற ஆளில்லா விமானமே அமெரிக்காவின் F-15 வகை யுத்த விமானதால் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. . மேற்படி ஆளில்லா விமானம் தமது அணிக்கு பயமுறுத்தலாக செயல்பட்டதால், உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 12:30 மணியளவில், சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க படை கூறியுள்ளது. […]

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

நேற்று அமெரிக்காவின் F/A-18 Hornet வகை யுத்த விமானம் சிரியாவின் SU-22 வகை யுத்த விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதை இன்று திங்கள் கடுமையாக கண்டித்த ரஷ்யா, சிரியா மேல் பறக்கும் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் தமது இலக்கு ஆகலாம் என்றும் கூறியுள்ளது. . அத்துடன் சிரியாவின் மேலே பறக்கும் அமெரிக்காவின் யுத்த விமானங்களும், ரஷ்யாவின் யுத்த விமானங்களும் ஒன்றுடன் ஒன்று தவறுதலாக மோதுவதை தவிர்க்கும் பொருட்டு இருதரப்பும் இடையே கடைப்பிடித்து வந்த முன்னறிவிப்பு முறைமையையும் தாம் […]

லண்டனில் மீண்டுமொரு வாகன தாக்குதல்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் மீண்டும் ஒரு வாகன தாக்குதல் இன்று திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது. லண்டன் போலீசார் இதை ஒரு “major incident” என்றும், “there are number of casualties” என்றும் மட்டுமே தற்போது கூறியுள்ளனர். மேலதிக விபரங்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை. . அதேவேளை Muslim Council of Britain (MCB) Finsbury Park என்ற இடத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றில் இருந்து வெளியேறியோர் மீதே வான் ஒன்று தாக்கியதாக […]

சிரிய யுத்தவிமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

சிரியாவில் IS குழுவுக்கு எதிராக யுத்தம் செய்யும் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சிரியாவின் யுத்த விமானம் ஒன்றை இன்று ஞாயிறு சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக போராடும் ஆயுத குழுக்கள் மீது சிரியாவின் யுத்த விமானம் தாக்கியது என்று கூறியே அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. . சிரியாவின் ராக்கா (Raqqa) பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அதேவேளை தமது விமானப்படை IS குழுவுக்கு எதிராக போராடும் போதே அமெரிக்காவின் படை இந்த […]

பிரான்ஸின் Macron கட்சிக்கு பெரும்பான்மை வெற்றி

இன்று பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் அங்கு அண்மையில் ஜனாதிபதியாக வெற்றி கொண்ட Macron தலைமயிலான LERM என்ற கட்சி பெரும்பான்மை அரசை அமைக்க வேண்டிய ஆசனங்களை வெல்லும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. . முந்திவரும் தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் 577 ஆசங்களை கொண்ட சட்ட சபைக்கு LERM கட்சி சுமார் 355 முதல் 425 ஆசங்களை பெறும் என்று கூறப்படுகிறது. பெரும்பான்மை அரசை அமைக்க குறைந்தது 289 ஆசனங்கள் தேவை. . இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட 57% வாக்குகளில் […]