உத்தர பிரதேசத்தில் தாஜ்மஹால் இல்லாத உல்லாசம்

இந்தியா செல்லும் வெளிநாட்டு உல்லாச பயணிகளின் முதல் விருப்பத்தில் உள்ளது தாஜ்மஹால். இந்தியாவுக்கும், தாஜ்மஹால் உள்ள பகுதிக்கும் அதிக அளவு வருமானத்தை வழங்கும் இந்த வரலாற்று சின்னத்தை மறைக்க முனைகிறது உத்தர பிரதேச மாநில பாரதீய ஜனதா அரசு. அண்மையில் இந்த மாநில அரசு வெளியிட்ட உல்லாச பயணிகளுக்கான 32 பங்கங்களை கொண்ட புத்தகம் ஒன்றில் தாஜ்மஹால் முற்றாக இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது. . உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான, 1631 ஆம் ஆண்டில் கடப்பட்ட தாஜ்மஹால் […]

அமெரிக்கா-துருக்கி விசா இடைநிறுத்தம்

துருக்கியர் அமெரிக்கா செல்வதற்கான non-immigrant விசா சேவையும், அமெரிக்கர் துருக்கி செல்வதற்கான non-immigrant விசா சேவையும் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் துருக்கியில் உள்ள அமெரிக்க தூதுவராலய ஊழியர் ஒருவர் துருக்கி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னரேயே இந்த முறுகல் நிலை உக்கிரம் அடைந்துள்ளது. . கடந்த கிழமை இஸ்தான்புல் நாகரில் வைத்து ஒரு அமெரிக்க தூதுவராலய ஊழியர் அங்கு அண்மையில் இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் செயல்பட்டு இருந்தார் என்று கூறி கைது செய்யப்பட்டு இருந்தார். […]

ரம்பின் குட்டுக்கு கிடைத்தது கனடா மட்டுமே

மெக்ஸிக்கோவை (Mexico) தண்டிப்பேன், சீனாவை தண்டிப்பேன் என்றெல்லாம் மார்தட்டி வெள்ளைமாளிகைக்கு வந்திருந்த ஜனாதிபதி ரம்பின் குட்டுக்கு இறுதியில் கிடைத்தது கனடா மட்டுமே. கனடாவின் Bombardier தயாரிக்கும் CS100 என்ற நடுத்தர அளவிலான பயணிகள் விமானத்துக்கு அமெரிக்கா 80% வரி அறவிடவுள்ளது. . அமெரிக்காவின் விமான சேவையான Delta Airlines கனடாவின்  Bombardier தயாரித்த, சுமார் 100 பேர் பயணிக்கக்கூடிய, CS100 வகை விமானங்கள் எழுபத்தைந்தை (75) கொள்வனவு செய்யவிருந்தது. NAFTA (North American Free Trade Agreement) […]

159 மணித்தியால overtime, நிருபர் மரணம்

ஜப்பானில் மாதம் ஒன்றுக்கு 159 மணித்தியாலங்கள் overtime செய்த செய்தியாளர் இருதய பாதிப்பால் (congestive heart failure) மரணம் அடைந்துள்ளார். ஜப்பானிய அரச கட்டுப்பாடில் இயங்கும் NHK (Nippon Hoso Kyokai) என்ற செய்தி நிறுவனத்தில் கடமை புரிந்த, 31 வயதுடைய,  Miwa Sado என்பரே இவ்வாறு மரணமாகி உள்ளார். . 2013 ஆம் ஆண்டு Tokyo மாநகர தேர்தலின் போதே இந்த சம்பவம் நிகழ்துள்ளது. ஆனாலும் அந்த உண்மை தற்போதே உறுதியாகி வெளிவந்துள்ளது. . அதேவேளை Dentsu […]

முதல் முறையாக ரஷ்யாவில் சவுதி அரசர்

சவுதி அரசர் சல்மான் (King Salman) ரஷ்யாவுக்கு பணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பதவியில் உள்ள சவுதி அரசர் ஒருவர் ரஷ்யா செல்வது இதுவே முதல் தடவை.  இவரின் பயணத்தின் முக்கிய நோக்கம் மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கத்தை குறைக்க ரஷ்யாவை நாடுவதாகும். . இந்த பயணத்தின் போது, இன்று வியாழன், சவுதி ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகள், Kornet வகை tank எதிர்ப்பு ஏவுகணைகள் என்பன உட்பட பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்படும் உள்ளது. […]

59 பேர் பலி , 500 காயம், ஆனால் terrorist என்ற சொல்லில்லை

கடந்த ஞாயிறு இரவு Stephen Paddock என்றவர் நடாத்திய படுகொலைக்கு இதுவரை 59 பேர் பலியாகியும், 500 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டும் உள்ளனர். இந்த படுகொலைகளை செய்த இவர் தனது hotel அறையுள் 23 இராணுவ தரத்து ஆயுதங்களை வைத்திருந்துள்ளார். இவரின் வீட்டில் இருந்த ஆயுதங்களுடன் மொத்தம் 47 ஆயுதங்கள் இவரிடம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. . அமெரிக்காவில் தனி மனிதர் ஒருவரால் செய்யப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிக பெரியது. . வழமைபோலவே அமெரிக்கா ஊடகங்களும் இந்த […]

LasVegas சூட்டுக்கு 50 பேருக்குமேல் பலி

அமெரிக்காவின் Nevada மாநிலத்தில் உள்ள Las Vegas என்ற களியாட்ட நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 50 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டும், 400 பேருக்கு மேலானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த சம்பவம் Mandalay Bay Resort and Casino என்ற நிலையத்துக்கு முன்னாலேயே இடம்பெற்று உள்ளது. . ஞாயிறு இரவு 10:08 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பமாகியது என்று கூறப்படுகிறது. Stephen Paddock என்ற 64 வயதுடையவரே இந்த துப்பாக்கி சூட்டை செய்துள்ளார். போலீசார் […]

ஸ்பெயினில் இருந்து பிரிய முற்படும் Catalonia

ஸ்பெயின் நாட்டின் (Spain) ஒரு பகுதியாக உள்ள கற்ரலுன (Catalonia) என்ற பகுதி. அப்பகுதி அண்மைக்காலமாக ஸ்பெயினில் இருந்து விலகி, தனி நாடாக செயல்பட முனைகிறது. இதை வன்மையாக எதிர்க்கிறது ஸ்பெயின். இன்று அங்கு நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று பெரும் வன்முறைகளில் முடிந்துள்ளது. . இன்று இடம்பெற்ற அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துமாறு ஸ்பெயின் அரசு பொலிஸாருக்கு கட்டளை விடுத்திருந்தது. அவ்வாறு போலீசார் வாக்கு சாவடிகளை மூட முனைந்தபோதும், வாக்கு பெட்டிகளை கைப்பற்ற முனைந்தபோதும் […]

அமெரிக்கா-வடகொரியா நேரடி தொடர்பு

அமெரிக்க அரசு வடகொரிய அரசுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Rex Tillerson இன்று கூறியுள்ளார். தற்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ள Tillerson இந்த விடயத்தை தெரிவித்து உள்ளார். டிரம்ப் அரசு வடகொரியாவுடன் தொடர்புகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொண்டது இதுவே முதல் தடவை. . பத்திரிகையாளர் தொடுத்த கேள்விகளுக்கு பதிலளித்த Tillerson, “we have a couple, three channels open to Pyongyang” என்றுள்ளார். இந்த தொடர்புகள் சீனா ஊடானதா என்று கேட்டபோது, […]

மும்பாய் புகையிரத நிலைய நெரிசலுக்கு 22 பேர் பலி

வெள்ளிக்கிழமை காலை மும்பாய் புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு 22 பேர் பலியாகியும், மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நெரிசல் இரண்டு நிலையங்களுக்கு இடையில் உள்ள நடை பாலம் ஒன்றில் இடம்பெற்று உள்ளது. . பிரபாதேவி நிலையத்துக்கும் (Prabhadevi station) பரோல் (Parel station) நிலையத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிய பாலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. . நெரிசலுக்கான காரணம் இதுவரை திடமாக அறியப்படவில்லை. அனால் ஒரு சீமெந்து […]