நேற்று ஞாயிறு ஏவப்பட்ட Zuma என்ற குறியீட்டு நாமம் கொண்ட அமெரிக்காவின் உளவுபார்க்கும் செய்மதி தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்மதியை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் தயாரித்தும், SpaceX என்ற நிறுவனம் ஏவி இருந்திருந்தாலும், இந்த செய்மதியை வடிவமைத்த குழுவின் அல்லது நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. . இந்த செய்மதிக்கான மொத்த செலவும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், அச்செலவு பல பில்லியன் டாலர் ஆகவிருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. . Florida மாநிலத்தில் […]
Bond விநியோகம் மூலம் $500 மில்லியனை இலங்கை பெறவுள்ளதாக இன்று இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. அத்துடன் இரண்டு அரச கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளும் (hotel) தனியார் வசம் விடப்படவுள்ளது. இலங்கை கடனில் மூழ்கி உள்ளமையே இந்த நடவடிக்கைகளுக்கு பிரதான காரணம் என்று கருதப்படுகிறது. . இந்த வருடம் இலங்கை சுமார் $12.85 பில்லியன் கடனை அடைக்கவேண்டும் என்றும், அதில் $2.9 பில்லியன் அந்நிய நாட்டு கடன் என்றும் கூறப்படுகிறது. இந்த கடன்களின் வரி (interest) மட்டும் […]
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்த முடிவு செய்திருந்தார். அதை கண்டித்து கடந்த டிசம்பர் 21ஆம் திகதி ஐ.நா. ஒரு கண்டன அறிக்கையை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தது. அந்த கண்டனம் 128 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டும் இருந்தது. . இந்த வாக்கெடுப்பை யெமன் (Yemen) ஐ.நா.வில் அறிமுகப்படுத்தி இருந்தது. எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை இணைந்து முன்மொழிந்திருந்தன. . ஆனால் தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ள இரகசியங்களின்படி ஐ.நா.வில் இந்த தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு […]
வடகொரியாவும் தென்கொரியாவும் இந்த மாதம் 9ஆம் திகதி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன. தென்கொரியாவின் இந்த விருப்பத்தை வடகொரியா ஏற்றுள்ளதாக தென்கொரியாவின் அமைச்சர் Baik Tae-hyun இன்று வெள்ளி தெரிவித்து உள்ளார். . கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரியா இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடாத்த விரும்புவதாக கூறி இருந்தது. அதற்கு முன்னர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தாம் தமது விளையாட்டு வீரர்களை தென்கொரியாவில் இடம்பெறவுள்ள Winter Olympic போட்டிகளுக்கு அனுப்ப உள்ளதாக கூறி […]
சீனா சுமார் U$1 பில்லியன் செலவில் மூன்று 60-மாடி கட்டிடங்களை கொழும்பு நகரில் கட்டவுள்ளது. இந்த கட்டிடங்கள் Colombo International Financial City அபிவிருத்தியின் ஒரு அங்கமாக இருக்கும். . Colombo International Financial City அபிவிருத்திக்காக ஏற்கனவே சீனா, U$ 1.4 பில்லியன் செலவில், Gall Face பகுதியில் கடலை நிரப்பி 269 hectare நிலத்தை உருவாக்குகிறது. கடலை நிரப்பும் வேலை 60% பூர்த்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. . இந்த கட்டுமான வேலைகள் சுமார் 83,000 […]
ஈரானுள் கடந்த சில நாட்களாக கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த கலவரங்களுக்கு குறைந்தது 21 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். . கலவரங்கள் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன. ஒரு இடத்தில் அல்லாமல், நாட்டின் பல நகரங்களில் இந்த கலவரங்கள் இடம்பெறுகின்றன. ஈரானின் உள்ளக அமைச்சரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டு உள்ளோரில் 90% மானோர் 25 வயதுக்கும் குறைவானவரே. . கலவரத்தை செய்வோர் குறிப்பாக எந்தவொரு காரணத்தையும் வெளியிடவில்லை அல்லது பகிரங்கம் […]
கனடாவின் பல நகரங்கள், அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக, புதுவருட நிகழ்வுகள் பலவற்றை இரத்து செய்துள்ளன. இந்த நகரங்கள் வாணவேடிக்கை போன்ற சில நிகழ்வுகளை மட்டும் நடாத்தும். . வழமையாக புதிய வருடம் பிறக்கும் வரைக்கும் பல மணித்தியால நிகழ்வுகளை இந்த நகரங்ககள் செய்வதுண்டு. பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளே இடம்பெறும். அவ்வகை நிகழ்வுகள் பொதுவாக இரத்து செய்யப்பட்டு உள்ளன. . Calgary, Winnipeg, Toronto, Ottawa, Montreal, Quebec City, Charlottetown ஆகிய பிரதான நகரங்கள் […]
தமிழ்நாட்டு நடிகர் ரஜனிகாந்த் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக இன்று கூறியுள்ளார். வரும் தமிழ்நாடு தேர்தலில் தனது புதிய சுதந்திர கட்சி அனைத்து (234) தொகுதிகளிலும் போட்டியிடும் என்றுள்ளார் ரஜனி. . தான் அரசியலுக்கு வருவதற்கு புகழ் அடைவதோ, அல்லது பணம் சேர்ப்பதோ காரணம் அல்ல என்று கூறிய ரஜனி, மக்கள் தனக்கு போதுமான புகழையும், பணத்தையும் ஏற்கனவே தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தான் அரியாசனத்துக்கும் ஆசைப்படவில்லை என்றும், அதற்கான சந்தர்ப்பம் 1996 ஆம் ஆண்டில் கிடைத்ததாகவும் அவர் […]
யாழ் பல்கலைக்கழக வளாகத்துள் வானில் இருந்து இறங்கவும், தரையால் நுழையவும் முற்பட்ட IPKF படையினர் புலிகளின் முற்றுகையுள் உள்ள போது புகையிரத தண்டவாளம் வழியே தனது அணியை செலுத்தி, முற்றுகைக்குள் இருந்த IPKF படைகளை மீட்ட கேணல் Anil Kaul கடந்த புதன் (2017/12/27) மரணம் ஆகியிருந்தார். அவரின் நினைவாக Shekhar Gupta என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் உள்ள தரவுகள் பின்வருமாறு. . IPKF படையின் முதலாவது இழப்புக்கள் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் […]
பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்ட Centre for Economics and Business (CEBR) அண்மையில் வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில், 2032 ஆம் ஆண்டளவில் சீன பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை பின் தள்ளி உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் மிக பெரிய 4 பொருளாதாரங்களில் 3 ஆசியாவில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. . தற்போது உலகின் முதலாவது பெரிய பொருளாதாரமாக அமெரிக்க பொருளாதாரமும், இரண்டாவதாக சீன பொருளாதாரமும் […]