கடந்த சில மாதங்களாக தென் ஆபிரிக்காவின் Cape Town நகரில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு தண்ணீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு மேலும் உக்கிரம் அடையும். . போதிய மழை இன்மை, தரமான நீர் பயன்பாட்டு கொள்கை இன்மை, அதீத வெப்பம் போன்ற காரணங்களால் Cape Town நகரம் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆளுக்கு 50 லீட்டர் நீர் என்ற கட்டுப்பாட்டை […]
இந்தியா தனது அக்கினி-5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) இன்று வியாழன் காலை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) உள்ள ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கணை சுமார் 19 நிமிடங்களில் 4,800 km பயணித்து இந்து சமுத்திரத்துள் வீழ்ந்துள்ளது. . சுமார் 55 அடி நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1.5 தொன் அணுக்குண்டு […]
கனடாவின் Toronto நகரில் உள்ள ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் கட்டுமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து வந்திருந்த தற்காலிக வேலையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக குறைபாடுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆலயம் அந்த குறைபாடுகளை மறுக்கிறது. . கனடாவின் ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான CBC (Canadian Broadcasting Corporation) இந்த குறைபாடுகளை விசாரணனை செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. . இந்தியாவில் இருந்து வந்திருந்த தொழிலாளிகளான 51 வயதுடைய சேகர் குருசாமி, 46 வயதுடைய சுதாகர் […]
அமெரிக்க படைகளின் தலைமையகமான Pentagon ரஷ்யாவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை வேவுபார்த்து வகைப்படுத்துவதுண்டு. அவ்வகை ஆவணம் ஒன்று தற்போது பகிரங்கத்துக்கு கசிந்துள்ளது. அவ்வாறு கசிந்த தரவுகளின்படி, ரஷ்யாவிடம் தற்போது கடலுக்கு அடியில் சுதந்திரமாக செல்லக்கூடிய (Autonomous Underwater Vehicle, அல்லது Drone), அணுகுண்டு ஏவுகணை கொண்ட நீர்மூழ்கி உள்ளது புலனாகியுள்ளது. . 2016 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்திருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கி 100 மெகா-தொன்னுக்கு நிகரான அணுவாயுதத்தை காவக்கூடியதாம். அவ்வகையில் இதுவே உலகின் மிக பெரிய […]
இந்த மாதம் 6ஆம் திகதி கிழக்கு சீன கடலில் ஈரானின் Sanchi என்ற எண்ணெய் கப்பலும், CF Crystal என்ற Hong Kong கொள்கலன் கப்பலும் மோதி இருந்தன. இந்த மோதல் காரணமாக ஈரானிய எண்ணெய் கப்பல் தீ பற்றிக்கொண்டது. அந்த தீ இன்றுவரை எரிந்திருந்தது. இறுதியில், உள்ளூர் நேரப்படி ஞாயிறு பிற்பகல் 4:45 மணிக்கு அந்த கப்பல் தாழ்ந்தது. . எண்ணெய் கப்பலில் இருந்த 30 ஈரானியரும், 2 பங்களாதேசத்தவரும் தொலைந்து உள்ளனர். அந்த கப்பலில் […]
இன்று சனி அதிகாலை 8:07 மணிக்கு தொலைபேசிகளுக்கு விடப்பட்ட ஏவுகணை வருகிறது என்ற அவசரகால அறிவிப்பு (alert) காரணமாக ஹவாய் (Hawaii) மக்கள் கிலிகொண்டு பாதுகாப்புக்கு ஓடியுள்ளனர். குறிப்பாக இந்த செய்தி ஒரு பயிற்சி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. . “Emergency Alert: BALLISTIC MISSILE THREAT INBOUND TO HAWAII. SEEK IMMEDIATE SHELTER. THIS IS NOT A DRILL” என்றே அந்த தொலைபேசி அறிவிப்பு இருந்துள்ளது. . இந்த அறிவிப்பு வெளிவந்து […]
இலங்கைக்கான விசா வழங்கும் முறைமைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றங்களை அமைச்சரவை அங்கீகாரமும் செய்துள்ளது. அந்த மாற்றங்களுள் சில பின்வருமாறு: . 1) விசா கட்டணத்தை அமெரிக்க டாலரில் செலுத்த அனுமதிக்கப்படும். . 2) தமது விசா காலம் கடந்த பின் நாட்டில் இருப்போரிடம் U$500 தண்டம் அறவிடப்படும். . 3) இலங்கைக்கு படிக்க வரும் மாணவருக்கு அவர்களின் படிப்பு காலம் (whole academic period) முழுவதுக்குமான விசா வழங்கப்படும். . 4) U$500,000 […]
தற்போதைய நிலைமைகள் தொடர்ந்தால் இந்திய சனநாயகம் விரைவில் அழிந்துவிடும் என்று 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் இந்த எச்சரிக்ககை விடப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையின் பிரதான குற்றச்சாட்டுக்கள் உச்சநீதிமன்றின் தலைமை நீதிபதி (Chief Justice) Dipak Misra மீதே விடப்பட்டு உள்ளன. . மொத்தம் 25 நீதிபதிகளை கொண்ட இந்திய உச்சநீதிமன்றின் 4 நீதிபதிகள் மட்டுமே இவ்வாறு என்றுமில்லாதவாறு இந்திய நீதி துறையை சாடி இருந்தாலும், […]
கடந்த புதுவருட தினத்தன்று இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து மும்பை (Mumbai) வந்த Jet Airways விமானிகள் நடுவானில் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர். சண்டையில் ஈடுபட்ட ஆண் விமானியும் (pilot), பெண் உப-விமானியும் (co-pilot) தற்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். . வாக்குவாத சண்டையின் இறுதியில் விமானி, உப-விமானியை அடித்ததாகவும், அதனால் உப-விமானி விமானிகள் கூடத்திலிருந்து (cockpit) அழுதுகொண்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் உப-விமானி மீண்டும் விமானிகள் கூடம் செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது. . செவ்வாய் கிழமை […]
இன்று செவ்வாய் கிழமை வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையே இடம்பெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் முடிந்துள்ளது. சுமார் 11 மணி நேரம் வரை இடம்பெற்ற இந்த பேச்சுக்களின் இறுதியில் இரு தரப்பும் கூட்டாக 3 தீர்மானங்கள் கொண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. . 1) வடகொரியா பெப்ருவரி 9ஆம் திகதி தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ளும். . 2) இரு தரப்பு இராணுவங்களுக்கு இடையே தெடர்புகள் ஏற்படுத்தி முறுகல் நிலையை குறைக்க நடவடிக்கை எடுத்தல். […]