G7 அமர்வுக்கு ரம்ப் வெறுப்புடன் பயணம்

நாளை 8ஆம் திகதியும், மறுதினம் 9ஆம் திகதியும் கனடாவின் Quebec மாகாணத்து Charlevoix நகரில் இடம்பெறவுள்ள வருடாந்த G7 அமர்வுக்கு வேண்டாவெறுப்புடன் செல்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். இவர் பதவிக்கு வந்த நாள் முதல் தன்னிசையாக எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் தொடர்பாக மற்றைய 6 நாட்டு தலைவர்களும் விமர்சனம் செய்யக்கூடும் என்பதாலேயே ரம்ப் அங்கு செல்ல நாட்டம் கொண்டிருக்கவில்லை. . ரம்பின் வர்த்தகத்துக்கான ஆலோசகர் Larry Kudlow இந்த முரண்பாடுகளை ஒரு குடும்ப சண்டை (much like a […]

வெள்ளைமாளிகையை எரித்தது கனடா, கூறுவது ரம்ப்

கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், கனடிய பிரதமர் ரூடோவுக்கும் இடையில் ரம்பின் புதிய உலோக வரிகள் தொடர்பாக காரசாரமான பேச்சுக்கள் இடம்பெற்றதாம். அந்த உரையாடலின்போது ரம்ப் 1812 ஆம் ஆண்டில் கனடாவே அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை எரித்தது என்றும் கூறியுள்ளார். . ரம்பின் அரைகுறை அறிவு War of 1812 தொடர்பானது. அந்த யுத்தம் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கு இடையிலானது. அப்போது கனடா என்ற ஒரு நாடே இருந்திருக்கவில்லை. . உண்மையில் பிரித்தானியா வெள்ளைமாளிகை […]

ஒருவருட தடை, பணியாது வளர்ந்த கட்டார்

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 5ஆம் திகதி சவுதி, UAE, பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது கடுமையான தடைகளை விதித்திருந்தன. முதலில் மேற்கூறிய நான்கு நாடுகளும் ஈரானுடனான உறவை துண்டி, கட்டாரின் Al Jazeera தொலைக்காட்சி சேவையை நிறுத்து, கட்டாரில் நிலைகொண்டுள்ள துருக்கி இராணுவத்தை வெளியேற்று என்று பல நிபந்தனைகளை விதித்து இருந்தன. அவற்றுக்கு கட்டார் இணங்க மறுக்க, நான்கு நாடுகளும் கட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன. கட்டாரின் விமான சேவை தனது […]

பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் Lecomte

பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரெஞ்சு நாட்டு Ben Lecomte என்பவர். சுமார் 9,000 km நீளம் கொண்ட இவரின் நீச்சல் ஜப்பானின் கிழக்கு கரையில் ஆரம்பித்து அமெரிக்காவின் மேற்கு கரையான San Franciscoவில் முடிவடையும். இந்த சாதனையை இவர் வெற்றிகரமாக நிறைவு செய்தால் இவரே பசுபிக் கடலை நீந்திக்கடந்த முதலாவது நபர் ஆவார். . தான் தினமும் 8 மணித்தியாலங்கள் நீந்தவுள்ளதாக இவர் கூறியுள்ளார். இவருக்கு உதவியாக வள்ளம் ஒன்று இவருடன் பயணிக்கும். இந்த […]

புதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை

இன்று ஞாயிற்றுக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் சீனாவில் அமெரிக்காவின் Commerce Secretary Wilbur Ross, சீனாவின் வர்த்தகத்துக்கு பொறுப்பான உதவி முதல்வர் Liu He ஆகியோர் நடாத்திய பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முடிந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் இணைந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. . பதிலாக சீனா அமெரிக்கா இந்த மாத நடுப்பகுதியில் நடைமுறை செய்ய முன்வந்துள்ள புதிய இறக்குமதி வரிகள் (tariffs) தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்கா தன்னிசையாக புதிய வரிகள் எதையும் நடைமுறை […]

மீண்டும் வீழ்ச்சி அடையும் ஜப்பான் சனத்தொகை

2017 ஆம் ஆண்டில் ஜப்பானின் சனத்தொகை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டிலும் ஜப்பானின் சனத்தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருந்தது. . 2017 ஆம் ஆண்டில் ஜப்பானில் 946,060 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இரண்டாவது வருடமாக அங்கு 1 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகள் பிறந்துள்ளன. அதேவேளை அங்கு 1,340,433 பேர் மரணமாகி உள்ளனர். அதனால் ஜப்பானின் சனத்தொகை 394,373 ஆல் குறைந்துள்ளது. . கடந்த வருடத்து பிறப்பு எண்ணிக்கையிலும் இந்த வருட பிறப்பு தொகை […]

வர்த்தக யுத்தம் வெள்ளி ஆரம்பம்

அமெரிக்காவுக்கும் ஏனைய பல நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக யுத்தம் வெள்ளி (ஜூன் 1) ஆரம்பமாகிறது. அண்மையில் ரம்ப் அரசு ஐரோப்பிய நாடுகள், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்தான இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களுக்கு புதிதாக முறையே 25%, 10% இறக்குமதி வரி நடைமுறை செய்யவிருந்தது. பின்னர் அந்த தீர்மானம் ஜூன் 1 வரை இடை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. . இடைநிறுத்தி வைக்கப்பட்ட காலம் இன்று வியாழன் சாமத்தில் முடிவடைவதாலும், இதுவரை ரம்ப் […]

இலங்கை-சீனா சுதந்திர வர்த்தக பேச்சில் இடர்கள்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கும் நோக்கில் நடாத்தப்படும் பேசசுவார்த்தைகள் தற்போது சில இடர்களை சந்தித்துள்ளன. . சீனா இலங்கையுடன் காலவரை அற்ற சுதந்திர வர்த்தகத்தக உடன்படிக்கையில் ஈடுபட விரும்புகிறது. ஆனால் இலங்கை 10 வருடங்களின் பின் மீளாய்வு செய்யும் உரிமையுடன் சுதந்திர வர்த்தகதக உடன்படிக்கையில் ஈடுபட விரும்புகிறது. புதிதாக அமையவுள்ள சுதந்திர வர்த்தகம் இலங்கைக்கு பெருமளவில் பாதிப்பை உருவாக்கின், 10 வருடங்களின் பின்னான மீளாய்வு அந்த பாதிப்புகளை குறைக்க உதவும் என்பதே இலங்கையின் […]

AirAsia India விமானசேவை விசாரணையில்

இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் விமான சேவையான AirAsia India மீது இந்தியாவின் குற்ற புலனாய்வு பிரிவான CBI விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதனால் AirAsia Indiaவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. . அண்மைக்காலம் வரை இந்திய சட்டப்படி இந்தியாவுள் குறைந்தது 20 விமானங்களை கொண்டுள்ள விமான சேவை, குறைந்தது 5 வருடங்கள் உள்ளூர் சேவை செய்த பின்னரே சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்க முடியும். ஆனால் அண்மையில் அந்த சட்டம் மாற்றப்பட்டு, இந்திய நிறுவனத்தின் 51% உரிமையை […]

ஞானசாரரை குற்றவாளியென நிரூபித்த பெண்

இலங்கையில் புத்த தர்மத்துக்கே இழுக்கு விளைவிக்கும் முறையில் செயல்பட்டு வந்திருந்த ஞானசார தேரரை Sandhya Ekneligoda என்ற பெண் இலங்கை நீதிமன்றில் குற்றவாளி என நிரூபித்து உள்ளார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஞானசாரர் Penal Code Sections 346 மற்றும் 486 சட்டங்களின்படி குற்றவாளி என ஹோமகம (Homagama) நீதிபதி Udesh Ranatunge தீர்ப்பு கூறியுள்ளார். ஞானசாரருக்கான தண்டனை ஜூன் மாதம் 24 ஆம் திகதி வழங்கப்படும். . இப்பெண்ணின் கணவர் Prageeth Ekneligoda […]