சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக இறங்கியதுடன், அங்கிருந்து படங்களை அனுப்பவும் ஆரம்பித்துள்ளது. சந்திரனின் மறுபக்கத்தில் மனித கலம் தரை இறங்குவது இதுவே முதல் தடவை. . சந்திரனின் மறுபக்கம் எப்போதும் பூமியின் பார்வைக்கு அப்பால் இருப்பதால், அங்கிருந்து பூமியில் உள்ள தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை என்பதாலேயே சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்குவது இதுவரை தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த குறைபாட்டை தவிர்க்க சீனா ஒரு செய்மதியை சந்திரனுக்கு அப்பால், 65,000 km […]
உலகவங்கியின் தலைவர் Jim Yong-kim இன்று திங்கள் தீடீரென தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். இவர் தான் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக காரணம் கூறி இருந்தாலும், உண்மை வேறாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. . இவரின் பதவி காலம் 2022 ஆம் ஆண்டிலேயே முடிய உள்ள நிலையில், இந்த திடீர் பதவி விலகலுக்கு அமெரிக்க அரசில் நிலவரங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொரியர் வழி வந்த அமெரிக்கரான Jim Yong-kim முன்னாள் […]
2018 ஆம் ஆண்டுக்கான சீனாவின் பிறப்பு வீதம் பெரும் வீழ்ச்சியை கொண்டிருக்கும் என்று சீனாவின் Global Times பத்திரிகை கூறுகிறது. ஆனால் ஒரு பிள்ளை மட்டும் என்ற கொள்கையை 2016 ஆம் ஆண்டில் நீக்கிய சீன அரசு, அதிகரித்த பிறப்பு வீதத்தை எதிர்பார்த்து இருந்தது. . 2018 ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் மொத்த தொகை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சில முக்கிய நகர மற்றும் மாகாண பிறப்பு தொகைகள் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி […]
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் type G வகை 13-amp மின் plugs மற்றும் sockets வகைகள் மட்டுமே சட்டப்படியானதாக இருக்கும். இதுவரை பாவனையில் இருந்துவந்த உருளை (round) pin களுக்கு பதிலாக புதிய plugs மற்றும் sockets செவ்வக (rectangle) pin களை கொண்டிருக்கும். . முதலாம் திகதி முதல் type G வகை plugs மற்றும் sockets மட்டுமே சட்டப்படி விற்பனை செய்ய முடியும். அதுமட்டுமன்றி கடைகளில் […]
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள Purvanchal University என்ற பல்கலைக்கழகத்து vice-chancellor Raja Ram Yadav தனது மாணவர்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில் “நீங்கள் யாருடனும் சண்டையிடும் நிலைமை தோன்றினால், அழுது கொண்டு என்னிடம் வராதீர்கள், அவர்களை அடியுங்கள், தேவைப்பட்டால் அவர்களை கொலை செய்யுங்கள், நாங்கள் மிகுதியை பின்னர் கவனிப்போம்” என்று கூறியுள்ளார். . உத்தர பிரதேசத்தில் உள்ள Ghazipur என்ற நகரில் சனிக்கிழமை தனது மாணவர் மத்தியில் செய்து கொண்ட ஒரு பேச்சின்போதே Yadav […]
சிரியா, துருக்கி, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் வாழும் Kurd மக்கள் ஒரு தனிநாடு அமைக்கும் முயற்சியில் எப்போதுமே முனைந்து வந்துள்ளனர். அதற்காக PKK என்ற குழு ஆயுத போராட்டத்திலும் இறங்கி இருந்தது. அவர்கள் துருக்கியிலும் தாக்குதல்களை செய்து வந்திருந்தனர். துருக்கி ஒரு NATO நாடு என்பதால், அமெரிக்கா உட்பட பெரும்பாலான மேற்கு நாடுகள் PKK அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கூறி வந்தன. . ஆனாலும் PKK சார்பு குழுக்கள் சிரியா, ஈராக், […]
இந்தியாவின் ஆரம்பத்தை விபரிக்க முனைகிறது அண்மையில் வெளிவந்த “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” என்ற புத்தகம். இந்த புத்தக கருத்துப்படி இன்றைய இந்தியா நான்கு பெரிய குடிவரவுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகளவில் DNA தரவுகளை மட்டும் கொண்டே இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் அடையப்பட்டுள்ளன. . இப்புத்தகத்தின்படி முதலாவது இந்திய குடிகள் ஆபிரிக்காவில் இருந்து சுமார் 65,000 வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளனர். தற்போதும் இந்தியாவின் 50%-65% வரையான மக்கள் […]
இந்தியா தனது நாட்டவரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பத்தாயிரம் கோடி இந்திய ரூபாய்களை ($1.43 பில்லியன்) ஒதுக்கி உள்ளது. 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதமளவில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இந்திய அமைச்சரவை இந்த நிதியை ஒதுக்கி உள்ளது. . Gaganyaan என்ற இந்த திட்டப்படி 3 இந்திய விண்வெளி வீரர்கள் குறைந்தது 7 நாட்களுக்கு விண்ணில் தங்குவர். . மேற்படி முயற்சிக்கு முன்னோடியாக இந்திய முதலில் இரண்டு மனிதர் அற்ற […]
ரஷ்யா புதிய வகை ஏவுகணை ஒன்றை தனது படைகளுக்கு வழங்கவுள்ளது. ஒலியின் வேகத்திலும் 27 மடங்கு வேகத்தில் அணுகுண்டுகளை எடுத்து சென்று எதிரியை தாக்கக்கூடிய இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கம் மிரட்டப்பட்டுள்ளது. . ஒருகாலத்தில் ஏவுகணைகளை கொண்ட நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளாக இருந்தன. குறிப்பாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பெருமளவு ஏவுகணைகளை கொண்டு மறு தரைப்பை கட்டுப்பாடில் வந்திருந்தன. நீ தாக்கினால் நானும் தாங்குவேன் என்ற நிலை இருந்தது. . தனது கையை ஓங்கவைக்க அமெரிக்கா […]
சீனாவில் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்க தற்போதைய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சாதாரண அதிகாரிகள் மட்டுமன்றி, பல உயர் அதிகாரிகளும் அங்கு தற்போது சிறை செல்கிறார்கள். சீனாவின் பெருளாதாரம் வேகமாக வளர்ந்த காலத்தில் அங்கு அதிகாரிகள் இலகுவில் ஊழல் செய்திருக்க முடித்து. . Cai Xiyum என்ற முன்னாள் உயர் அதிகாரிக்கு இன்று 12 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Sinochem என்ற அரச இரசாயன பொருட்களுக்கான அமைச்சின் […]