இந்தியாவின் 2 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று கூறியுள்ளது. அத்துடன் ஒரு இந்திய விமானியையும் கைப்பற்றி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. . இந்தியா தமது தரப்பில் ஓர் MiG 21 யுத்த விமானத்தை இழந்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் ஒரு விமானியும் தவறியுள்ளார் என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்திய தரப்பு இழப்பை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Raveesh Kumar அறிவித்துள்ளார். . பாகிஸ்தான் தரப்பு இணையங்களில் வீழ்ந்த இந்திய விமானியை தாக்குவது போன்ற காட்சிகள் […]
இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammmed என்ற ஆயுத குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்த குழுவின் முகாம்கள் மீதே இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியா கூறுகின்றது. . […]
இன்று பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து Gibraltar என்ற British Airways விமானம் கடும் காற்று காரணமாக தளம்பி உள்ளது. Gibraltar விமான நிலையத்தில் இறங்க முடியாத நிலையில், இந்த விமானம் இஸ்பெயின் நாட்டின் Malaga விமான நிலையத்தில் இறங்கி உள்ளது. . இன்று லண்டனில் இன்று காலை 8:25 மணிக்கு ஆரம்பித்த Flight BA 492 சேவையின் பயணிகள் காயம் எதுவும் இன்றி தரை இறங்கி உள்ளனர். . . .
இந்து சமுத்திரத்தில் உள்ள Chagos தீவுகளை பிரித்தானியா மீண்டும் Mauritius நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்று இன்று திங்கள் கேட்டுள்ளது ஐ.நா. நீதிமன்றம் (International Court of Justice). இந்த தீர்ப்பு சட்டபடியானது அல்ல (non-binding) என்றாலும், Mauritius நாட்டுக்கு இது ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது. . இந்த தீவுகளிலேயே அமெரிக்காவின் டியேகோ கார்சியா (Diego Garcia) இராணுவ மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. ஆசிய-பசுபிக் பகுதிகளில் அமெரிக்கா கொண்டுள்ள இரண்டு மிக பெரிய படை தளங்களுள் […]
மார்ச் 1 ஆம் திகதிக்கு முன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் புதிய வர்த்தக இணக்கம் ஏற்படாவிடின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முன்னர் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை 2 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி வரி அறவிடவேண்டும். . ஆனால் இன்று ரம்ப் தனது கூற்றில் மார்ச் 1ஆம் திகதி ஆக […]
வெனிசுவேலா எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வெனிசுவேலாவுக்கு எடுத்துவரப்பட்ட உதவி பொருட்கள் வெனிசுவேலாவுள்ளே அனுமதிக்கப்படாதபோது எல்லை நகர்களில் கலவரங்கள் தோன்றி உள்ளன. இந்த கலவரங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனங்கள் சில தீயிடப்பட்டும் உள்ளன. அவற்றில் இருந்த பொருட்களை கூடி நின்ற மக்கள் மீட்டனர். . அமெரிக்காவின் உதவி பொருட்களை தனது நாட்டின் ஊடு எடுத்துவர கொலம்பியா அனுமதித்தால், வெனிசுவேலா அரசு கொலம்பியாவுடனான உறவுகளை துண்டித்தும் […]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 78 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 100 பேர் வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மரணித்தோருள் பெண்களும் அடங்குவர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . இங்கு கள்ள கசிப்பால் பாதிகப்பட்டோர் அனைவரும் Golaghat மற்றும் Jorhat பகுதி தேயிலை தோட்ட ஊழியர்களே. இவர்களுக்கு அண்மையிலேயே ஊதியம் கிடைத்திருந்தது. . Jorhat Mediacl College என்ற வைத்தியசாலையில் மட்டும் 9 பெண்களும், 11 ஆண்களும் சிகிசைகள் […]
உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் மாலை 8:00 மணியுடன் கொலம்பியா நாட்டுடனான தனது தெற்கு எல்லையை மூடுவதாக வெனிசுவேலா (Venezuela) அறிவித்து உள்ளது. அமெரிக்கா தான் கொலம்பியாவுக்கு (Colombia) எடுத்து சென்ற உதவி பொருட்களை வெனிசுவேலா உள்ளே எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கமே இந்த மூடலுக்கு காரணம். . அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வராத Maduro தலைமையிலான தற்போதைய அரசை கவிழ்த்து, தமக்கு ஆதரவான Guaido தலைமையிலான எதிர்க்கட்சியை அங்கு பதவியில் அமர்த்துவதே அமெரிக்காவின் நோக்கம். . எதிர்க்கட்சி தலைவர் […]
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று புதன் இரவு ஏற்பட்ட தீக்கு குறைந்தது 70 பேர் பலியாகி உள்ளனர். இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . அத்துடன் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கீழே இருந்த உணவு விடுதிகள், கடைகள் போன்றவற்றில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். . பல மாடிகளை கொண்ட மக்கள் குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இரசாயன பொருட்களும் பெருமளவில் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]
அமெரிக்காவுக்கு ரஷ்ய ஜனாதிபதி Putin இன்று புதன் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஐரோப்பிய தளங்களுக்கு நகர்த்துமாயின் ரஷ்யா மீண்டும் தனது ஏவுகணைகளை அமெரிக்க குறிகளை நோக்க வைக்கும் என்று கூறியுள்ளார் பூட்டின் (Putin). . ரம்ப் தலைமயிலான அமெரிக்கா INF என்ற அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அண்மையில் வெளியேறியதும், அமெரிக்க அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அண்மையில் நிலைகொள்ள முயல்வதும் தம்மை இந்நிலைக்கு தள்ளி உள்ளதாக பூட்டின் கூறியுள்ளார். . ரஷ்யாவிடம் […]