ஈரான் எண்ணெய் மீதான தடை விதிவிலக்கு இரத்து

ஒபாமா காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கின. அந்த இணக்கப்படி ஈரான் அணு ஆயுதத்துக்கு பயன்படும் அணு வேலைகளை நிறுத்தியது. பதிலாக ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகளும் நீக்கப்பட்டன. அப்போது ஈரான் நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் பரல் எண்ணெய்யை ஒவ்வொரு நாளும் ஏற்றுமதி செய்தது. . ஆனால் பின் பதவிக்கு வந்த ரம்ப் தன்னிசையாக மேற்படி உடன்படிக்கையில் இருந்து வெளியேறி, ஈரானுக்கு எதிராக போர்க்கொடி […]

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு குறைந்தது 207 பேர் பலி

ஈஸ்டர் ஞாயிரான இன்று கிறீஸ்தவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 6 குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 207 பேர் பலியாகியும், 450 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோருள் குறைந்தது 36 பேர் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா (குறைந்தது 5 பேர்), இந்தியா, துருக்கி, டென்மார்க், நெதர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் உட்பட்ட அந்நிய நாடுகளின் பிரசைகள். . இன்று காலை சுமார் 8:45 மணியளவில் இடம்பெற்ற ஒரேநேர தாக்குதல்கள் கொழும்பு St. Anthony’s Shrine, நீர்கொழும்பு Sebastian’s Church, […]

வடகொரிய தூதரக தாக்குதல் பின்னணியில் CIA?

கடந்த பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி ஸ்பெயின் (Spain) நாட்டில் உள்ள வடகொரிய தூதுவரகம் மீது இனம் தெரியாத சுமார் 10 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தது. தரமான திட்டத்துடன் துப்பாக்கிகள், கத்திகள் கொண்டு அரங்கேற்றிய இந்த தாக்குதலில் அங்கிருந்த பல முக்கிய ஆவணங்கள் அபகரித்து செல்லப்பட்டு இருந்தது. . முதலில் இது கொள்ளை நோக்கம் கொண்ட தாக்குதல் என்று கருதப்பட்டாலும், பின்னர் இந்த தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது […]

அமெரிக்க கூரையில் 18 அடி மலைப்பாம்பு

அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் உள்ள Detroit நகரத்து வீட்டு கூரை ஒன்றில் தோன்றிய 18 அடி நீள மலைப்பாம்பு (python) அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Juliet என்ற பெயரை கொண்ட இந்த மலைப்பாம்பு ஒருவரின் வளர்ப்பு பிராணி என்பது பின்னர் தெரிய வந்துள்ளது. . உரிமையாளர் Devin Jones-White பாம்பின் கூட்டை முறையாக மூடாத நிலையிலேயே இந்த பாம்பு கூட்டைவிட்டு வெளியேறியுள்ளது. அதை அறிந்த சுற்றுப்புற நாய்கள் குறைக்க, பாம்பு கூரைக்கு எறியுள்ளது. அப்போது […]

இரண்டு UAE நபர்களை துருக்கி கைது

இரண்டு United Arab Emirates (UAE) நபர்களை துருக்கி கைது செய்துள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனமான Anadolu இன்று வெள்ளிக்கிழமை கூறி உள்ளது. துருக்கியில் நிலைகொண்டுள்ள இவர்கள் இருவரும் UAE சார்பில் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியே கைது செய்யப்பட்டு உள்ளனர். . அத்துடன் இவர்களுக்கும், ஜமால் கசோகி என்பவர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தொடர்பு உண்டதா என்பதையும் துருக்கி விசாரணை செய்கிறது. . துருக்கிக்கும், UAE க்கும் இடையே […]

அடுத்த கிழமை பூட்டின்-கிம் சந்திப்பு?

அடுத்த கிழமை ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டினும் (Vladimir Putin), வடகொரியாவின் தலைவர் கிம்மும் (Kim Jong Un) சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு Vladivostok என்ற வடகொரியாவின் எல்லைக்கு அருகே உள்ள ரஷ்ய நகரில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. . கிம்முக்கான அழைப்பை பூட்டின் கடந்த வருடம் விடுத்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் இரண்டு தடவைகள் கிம்மை சந்தித்து இருந்தார். ரம்புடனான சந்திப்புகள் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் எதையும் வழங்கவில்லை. . ரஷ்யாவின் விமான தாயாரிப்பு மற்றும் […]

முன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை

தென் அமெரிக்க நாடான பெருவின் (Peru) முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஊழல் தொடர்பாக இவரை கைது செய்ய அதிகாரிகள் இவரின் வீட்டுக்கு சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி தற்கொலை செய்துள்ளார். . அதிகாரிகள் கைது செய்ய வந்ததை அறிந்த Alan Gracia ஒரு தொலைபேசி தொடர்பு எடுக்க விரும்புவதாக கூறி தனது வீட்டு அறை ஒன்றுள் சென்று, கதவை பூட்டிவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். . 1949 […]

தாய்வான் அரசியலுள் குதிக்கிறார் Foxconn CEO

தாய்வானில் தலைமையகத்தை கொண்டுள்ள Foxconn என்ற இலத்திரனியல் தயாரிப்பு நிறுவனத்தின் CEO Terry Gou, KMT (KuoMinTang) கட்சி சார்பில், தாய்வானின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவரின் வரவு தற்போதைய ஜனாதிபதிக்கு பலத்த போட்டியாக இருக்கும். . Democratic Progressive Party என்ற கட்சியை சார்ந்த தற்போதைய ஜனாதிபதி Tsai Ing-wen அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் ஆதரவுடன் சீனாவை சாடி வருபவர். அத்துடன் தாய்வான் ஒரு சுதந்திர நாடு என்றும் கூறி வருபவர். ஆனால் KMT கட்சியை […]

ரம்ப், கியூபா மோதல், ஐரோப்பா நெருக்கடியில்

புதன் கிழமை அமெரிக்காவின் ரம்ப் அரசு கியூபா மீது தாக்கல் ஒன்றை தொடரவுள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் புதிய நெருக்கடியில் மூழ்கவுள்ளன. . 1996 ஆம் ஆண்டில், அப்பா புஷ் காலத்தில், அமெரிக்காவில் Helms-Burton Act என்ற ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த சட்டப்படி கியூபாவில் இழப்புகளை அடைந்த கியூபன்-அமெரிக்கர் கியூபா மீதும், அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிறநாட்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரலாம். . இந்த சட்டத்தால் விசனம் கொண்ட கனடா […]

வீழ்ந்த F 35 விமானத்தால் ஜப்பான் அவதி

கடந்த செவ்வாய் கிழமை ஜப்பானின் F 35A வகை யுத்த விமானம் ஒன்று ஜப்பானின் வடகிழக்கு கடலுள் வீழ்ந்துள்ளது. வீழ்ந்த இந்த அதிநவீன யுத்த விமானத்தை மீட்க ஜப்பானும், அமெரிக்காவின் கடுமையாக முயற்சிக்கின்றன. விமானியும் இதுவரை அகப்படவில்லை. . F 35 வகை விமானங்களே அமெரிக்காவின் தற்போதைய அதி நவீன யுத்த விமானங்கள். இவற்றின் ஒவ்வொரு பாகமும் நவீன தொழிநுட்பம் கொண்டவை. வீழ்ந்து உடைந்துள்ள விமானத்தின் எந்தவொரு பகுதியும் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் பாரிய ரகசியங்களை வழங்கக்கூடியவை. அதனால் […]