SDF மீது துருக்கியின் தாக்குதல் ஆரம்பம்

துருக்கி முன்னர் கூறியபடி சிரியாவில் உள்ள Kurdish ஆயுத குழுவான SDF (Syrian Democratic Forces) மீது இன்று புதன் தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்காது துருக்கி தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. . கடந்த கிழமை வரை இப்பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் SDF குழுவுக்கு பாதுகாப்பை வழங்கி வந்துள்ளன. ஆனால் ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து திடீரென பின்வாங்கி இருந்தார். . துருக்கி SDF […]

மாமல்லபுரத்தில் மோதி, சீ சந்திப்பு

சென்னைக்கு தெற்கே உள்ள மாமல்லபுரம் என்ற தமிழ்நாட்டு கரையோர நகரில் இந்திய பிரதமர் மோதியும், சீன சனாதிபதி சீயும் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு ஒரு informal சந்திப்பு என்றாலும், இவர்களின் உரையாடல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பல விசயங்களை உள்ளடக்கும். சீ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) சென்னை வருகிறார். . ராஜ ராஜ சோழன் காலத்தில் (960 – 1279) தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. சீன கோவில் என்ற புத்த கோவில் […]

Kurdish குழுவை கைவிட்டார் ரம்ப்

துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் உள்ள Kurdish ஆயுத குழுக்களை அமெரிக்கா நீண்ட காலமாக ஆயுத, பொருளாதார, அரசியல் உதவிகள் வழங்கி வளர்த்து வந்துள்ளது. . அண்மையில் ISIS குழு மீது அமெரிக்கா தாக்குதல் செய்தபோதும் சிரியாவில் உள்ள Kurdish ஆயுத குழுவான Syrian Democrtic Forces (SDF) உடன் இணைந்து செயல்பட்டு இருந்தது. . நேற்று துருக்கி-சிரியா எல்லையில் உள்ள SDF மீது தாக்குதல் செய்யவுள்ளதாக துருக்கி அறிவித்தது. அந்த […]

சிங்கப்பூரிலும் பொருளாதார நெருக்கடி

இதுவரை காலமும் ஓரளவு நலமான பொருளாதாரத்தை கொண்டிருந்த சிங்கப்பூரும் தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகிறது. அந்த நெருக்கடி தற்போது அங்குள்ள வீட்டு உரிமையாளர் தமது வீடுகளை இழக்கும் நிலையையும் உருவாகியுள்ளது. . அங்கு இந்த வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சி 0.0% முதல் 1.0% ஆக மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. . வங்கி கடன் சுமை காரணமாக bankruptcy ஆகுவோர் தொகையம் அங்கு அதிகரித்து வருகின்றது. அதில் பிரதானமானது வீட்டு கடனுக்கான மாதாந்த தொகையை (mortgage) […]

ஈராக்கில் 100 ஆர்ப்பாட்டக்காரர் பலி

ஈராக்கில் கடந்த ஐந்து தினங்களாக இடம்பெறுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு சுமார் 100 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . ஈராக் ஒரு எண்ணெய்வளம் கொண்ட நாடு என்றாலும், அங்கு நிலவும் ஊழல் நிறைந்த அரசியலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாதா ஆட்சியும் மக்களை வீதிக்கு செல்ல வைத்துள்ளன. . அண்மையில் சுத்தமற்ற நீரை குடித்த பல்லாயிரம் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். தரமான மின் கட்டமைப்பு இன்மையால் அங்கு மின் தடை தினசரி நிகழ்வாக உள்ளது. . வேலைவாய்ப்பு […]

அமெரிக்கர் அடுத்த கனடிய பிரதமர்?

இந்த மாதம் 21 ஆம் திகதி கனடாவில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. தற்போதைய பிரதமர் Justin Trudeau அடுத்த தடவையும் பதவிக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பதிலாக எதிர்கட்சியான Conservative கட்சியின் தலைவர் கனடாவின் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பும் உள்ளது. . இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் Conservative கட்சி தலைவர் Andrew Scheer தற்போதும் ஒரு இரட்டை குடியுரிமையாளர். அவரிடம் கனடா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் குடியிருமைகளும் உண்டு. . […]

காந்தியின் சாம்பலையும் திருடினர்

மகாத்மா காந்தியின் சாம்பலை அவரது 150 ஆவது பிறந்த தினத்தன்று இனம் தெரியாதோர் திருடி விட்டனர் என்று காந்தியின் நினைவாலயம் அறிவித்து உள்ளது. திருடியவர்கள் நினைவாலயத்தில் இருந்த காந்தியின் உருவ படத்தில் துரோகி என்றும் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இந்து-இஸ்லாம் இணக்கத்தை போதித்த காந்தியை இந்துவாதி ஒருவர் 1948 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்திருந்தார். மத்திய பிரதேசத்தில் உள்ள Rewa என்ற நகரத்து போலீசார் இந்த செய்தியை உறுதி செய்துள்ளனர். . காந்தியின் மரணத்தின் பின் அவரின் […]

நீர்மூழ்கி ஏவுகணையை ஏவியது வடகொரியா

புதன்கிழமை காலை 7:00 மணியளவில் வடகொரியா முதல் தடவையாக நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வடகொரியாவுக்கு மிகையான பலத்தையும் வழங்கி உள்ளது. . நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை எதிரி கண்காணிப்பது இலகு. ஆனால் கடல் நீருக்குள் மறைந்து நகரும் ஏவுகணையை சாதாரண செய்மதிகள் மூலம் கண்காணிக்க முடியாது. ஆழ்கடல்களை கண்காணிப்பது மிகவும் செலவான காரியம். . புதன்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை நிலைக்குத்தாக ஏவப்பட்டது. அதனால் அது 910 […]

துரையப்பா கனடாவில் போலீஸ் அதிகாரி

இலங்கையில் பிறந்து கனடா சென்ற நிசான் துரையப்பா என்பவர் Toronto நகரை அண்டியுள்ள Peel பகுதியின் (Peel Region) தலைமை போலீஸ் அதிகாரியாக அக்டோபர் முதல் பணியாற்றவுள்ளார். . இலங்கையில் இருந்து கனடா வந்த இவர் University of Toronto வில் BA கல்வி பயின்றவர். இவர் 1995 ஆம் ஆண்டில் அண்மையில் உள்ள Halton Regional பகுதி போலீஸ் சேவையில் தனது காவல்துறை பணியை ஆரம்பித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டில் அப்பகுதியின் Deputy Chief […]

70ஆம் வருட சீன அணிவகுப்பில் பாரிய ஆயுதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1ஆம் திகதி, சீனா தனது தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70 ஆம் வருட நிறைவை பெரும் ஆயுத அணிவகுப்புகளுடன் கொண்டாடியுள்ளது. . அணிவகுப்புக்கு வந்திருந்த சில ஆயுதங்கள் அமெரிக்க இராணுவ ஆய்வாளரை வியக்க வைத்துள்ளன. . அணிவகிப்பில் சென்ற DF-17 (அல்லது DongFeng-17) என்ற hypersonic ஏவுகணை ஒலியிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லவல்லது (Mach 5 அல்லது 3,400 mph). இவ்வகை ஏவுகணை உலகம் அறிந்தவரையில் சீனாவிடம் மட்டுமே தற்போது […]