ISIS குழுவின் தலைவர் அல் பக்டாடி (Abu Bakr al-Baghdai) அமெரிக்க படைகளால் சனிக்கிழமை ஞாயிறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளார். இவருடன் பல பெண்களும், சிறுவர்களும் பலியாகி உள்ளனர். நேற்று கசிந்த இந்த செய்தியை, அமெரிக்க சனாதிபதி இன்று ஞாயிறு அறிவிப்பு மூலம் உறுதி செய்துள்ளார். தாக்குதலின்போது அல் பக்டாடிசிரியாவின் Idlib என்ற மேற்கு மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தார். சுற்றிவளைப்பின்போது இவர் தனது கவச ஆடையை வெடிக்க வைத்துள்ளார். . இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய […]
சிரியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க படைகள் தமது கட்டுப்பாட்டுள் எடுப்பதாகவும், அது சர்வதேச காடைத்தனம் என்றும் கூறுகிறது ரஷ்யா. . சிரியாவின் கிழக்கே உள்ள Deir el-Zour என்ற இடத்தில் பெருமளவு எண்ணெய் வளம் உள்ளது. அப்பகுதியில் ISIS குழு ஆட்சி செய்த காலத்தில், அக்குழு எண்ணெய் நிலையங்களையும் தம் கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது. ISIS குழு விரட்டப்பட்ட பின் Kurdish ஆயுத குழு இவ்விடங்களை தமது கட்டுப்பாட்டுள் வைத்திருந்தது. . ஆனால் தற்போது துருக்கியின் Kurdish […]
இந்தியாவின் மும்பாய் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் இந்தியாவின் Vistara விமானசேவை புதிதாக நேரடி சேவையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளது. Vistara விமான சேவை சிங்கப்பூர் விமானசேவையினதும் (Singapore Airlines), TATA நிறுவனத்தினதும் கூட்டு முயற்சியாகும். . மும்பாயில் இருந்து 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படும் Vistara சேவையின் 4 ஆவது வெளிநாட்டு சேவை கொழும்புக்கான சேவையாகும். சிங்கப்பூர், டுபாய், Bangkok ஆகிய இடங்களுக்கும் Vistara சேவையை வழங்குகிறது. . இதன் […]
வர்த்தகத்துக்கு சாதகமான வழிகளை வழங்குவதில் இலங்கை 99 ஆம் இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கியின் Doing Business 2020 என்ற ஆய்வு அறிக்கை. . வர்த்தகத்தை ஆரம்பித்தல், நிர்மாண உரிமைகள் பெறல், மின் இணைப்பு பெறல், சொத்துக்களை பதிவுசெய்தல், கடன்பெறல், முதிலீடுகளை பாதுகாத்தல், வரி, இறக்குமதி/ஏற்றுமதி வசதிகள் போன்ற பல விசயங்கள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. . நியூசிலாந்து 86.8 புள்ளிகளை பெற்று வர்த்தகம் செய்வதற்கு முதலாவது இலகுவான நாடாக உள்ளது. சிங்கப்பூர் 86.2 […]
பிரித்தானியாவின் Essex பகுதில் உள்ள Waterglade Industrial Park என்ற பகுதில் லாரி ஒன்றுடன் பொருத்தப்பட்டு இருந்த கொள்கலம் (container) ஒன்றிலிருந்து 39 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Mo Robinson என்ற 25 வயதுடைய சாரதியும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். . பெல்ஜியத்தில் இருந்து வந்த இந்த வண்டி, தேம்ஸ் ஆற்றினூடாக Essex பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வண்டி பல்கேரியாவில் (Bulgaria) பதிவு செய்யப்பட்ட வண்டி என்கிறது பல்கேரியா. இந்த […]
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை டெங்கு தாக்கத்துக்கு ஆளானோர் தொகை 55,894 ஆக இருந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலத்தில் மட்டும் 74 பேர் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர். . 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12 மாதங்களில், 58 பேர் மட்டுமே டெங்கு நோய்க்கு பலியாகி இருந்தனர். . மேற்கு மாகாணத்தில் மட்டும் 26,286 பேர் டெங்கு தாக்கத்துக்கு ஆளாகி இருந்தனர். மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் […]
முதல் முறையாக உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்டோரின் பட்டியலில் அமெரிக்கரை பின்தள்ளி பெருமளவு சீனர் தற்போது இடம்பெறுள்ளனர். . தற்போது உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்ட அமெரிக்கரின் தொகை 99 மில்லியன் ஆகும். ஆனால் அவ்வகை வருமானம் கொண்ட சீனர்களின் தொகை 100 மில்லியன் ஆக உயர்ந்து உள்ளது. . தற்போது $109,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 10% வருமானம் கொண்டோர் பட்டியலில் அடங்குவர். அதேவேளை $936,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 1% பட்டியலில் […]
காஸ்மீர் பகுதில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருபகுதிக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஞாயிரு இடம்பெற்ற வன்முறைகளுக்கு இருதரப்பும் மற்றைய தரப்பை காரணம் கூறியுள்ளனர். . இந்திய படைகளின் பேச்சாளர் Jajesh Kalia தனது கூற்றில் பாகிஸ்தான் இராணுவமே 2003 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்திருந்த சமாதான உடன்படிக்கையை மீறி, இந்திய காவல் அரண்களை நோக்கி சுட்டதாக கூறியுள்ளார். தமது பதில் சூட்டுக்கு குறைந்தது 6 பாகிஸ்தான் படையினரும் […]
பிரித்தானிய பிரதமர் விரைவுபடுத்தி தயாரித்த Brexit திட்டத்தை பிரித்தானிய பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை மறைமுகமாக நிராகரித்து உள்ளது. இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறை செய்வது என்ற சட்டத்தை முதலில் பாராளுமன்றம் அங்கீகாரம் செய்யவேண்டும் என்றுள்ளது பிரித்தானிய பாராளுமன்றம். குழம்பியுள்ள பிரதமர் தற்போது முரண்பட்ட கடிதங்களை சமர்ப்பித்து வருகிறார். . சட்டப்படி பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அக்டோபர் 31 ஆம் திகதி வெளியேறும் தீர்வு திட்டம் இன்று சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமதினால் அங்கீகரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். அது […]
இன்று வெள்ளி ஆப்கானிஸ்தான் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் குறைந்தது 36 பேர் காயமடைந்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்ற மசூதி உள்ள மாநிலம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது. . இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதியில் தலபானும், ISIS குழுவும் வெளிப்படையாக செயல்படுகின்றன. . ஐ. நா. கணிப்புப்படி ஆப்கானிஸ்தானில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத காலத்தில் 1,174 பொதுமக்கள் தாக்குதல்களுக்கு […]