நேற்று அமெரிக்காவில் இடம்பெற்ற மூன்று மாநில தேர்தல் முடிவுகள் ரம்பின் Republican கட்சிக்கு பலத்த தோல்விகளை வழங்கி உள்ளன. சனாதிபதி ரம்ப் மீதான வெறுப்பாலேயே அவர் சார்ந்த Republican கட்சியும் தோல்விகளை அடைந்துக்கலாம் என்று கருதப்படுகிறது. . Virginia மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் Democritic கட்சி இரண்டு அவைகளிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே ரம்பின் செயற்பாடுகளுக்கு 30% ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இந்த மாநிலம் Republican கோட்டையாக பல சந்ததிகளுக்கு விளங்கியது. . […]
2015 ஆம் ஆண்டு, ஒபாமா ஆட்சி காலத்தில், ஈரான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட அணு வேலைப்பாடுகள் தொடர்பான JCPOA என்ற உடன்படிக்கையில் இருந்து மேலும் விலகும் முறையில் யூரேனியம் வல்லமையாக்கல் (uranium enrichment) வேலைகளை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு சனாதிபதி இன்று கூறி உள்ளார். . ஒபாமா செய்துகொண்ட JCPOA என்ற உடன்படிக்கைகை மீது ரம்ப் வழமைபோல் வெறுப்பு கொண்டிருந்தார். தான் பதவிக்கு […]
இந்தோனேசியாவிலும், எதியோப்பியாவிலும் இரண்டு புதிய Boeing 737 MAX 8 வகை விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியதை தொடர்ந்து அனைத்து MAX 8 விமானங்களும் சேவைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டன. Boeing என்ற அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விமானங்களுக்கான திருத்தங்கள் தொடர்ந்தும் இழுபடுவதால், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus பெரும் பயனை அடைகிறது. . ஆகஸ்ட் மாதம் முதலிருந்தான 3 மாத காலத்தில் Airbus விமான தயாரிப்பு நிறுவனம் மொத்தம் 350 விமானங்களை ஆசியாவில் மட்டும் விற்பனை […]
உலகிலேயே அதிகம் மாசடைந்த வளியை கொண்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்கி (Delhi) உள்ளது. இன்று ஞாயிறு அந்த நகரின் வளி மாசின் அளவு வளி மாசை அளக்கும் கருவிகளின் உச்ச வாசிப்பையும் மீறி உள்ளது. வளி மாசை அளக்கும் கருவிகள் (Air Quality Index meter) வாசிக்கக்கூடிய அதி உயர் வாசிப்பு 999 ஆகும். ஆனால் இன்று ஞாயிறு அந்த நகரில் உள்ள அனைத்து மாசு அளக்கும் கருவிகளும் 999 வாசிப்புடன் முடங்கி விட்டன. . […]
2012 ஆம் ஆண்டு புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லஓஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 10 ASEAN (Association of Southeast Asian Nations) நாடுகளும் சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் இணைந்து RECP (Regional Comprehensive Economic Partnership) என்ற சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க முயற்சி எடுத்தன. . அந்த முயற்சி இன்று நவம்பர் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் இடம்பெறும் […]
அண்மையில் பிரித்தானியா சென்ற லாரி கொள்கலம் ஒன்றுள் மரணித்தோர் அனைவரும் வியட்னாம் நாட்டவர் என்று தெரியவந்துள்ளது. முதலில் இவர்கள் சீனர்கள் என்று கருதப்பட்டு இருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகள் மரணித்தோர் வியட்னாம் நாட்டினர் என்பதை உறுதி செய்துள்ளது. . மரணித்தோரின் சில குடும்ப உறவினர்கள் ஏற்கனவே மரணித்த தமது உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டு, போலீசாருக்கும் தேவையான தகவல்களை வழங்கி உள்ளனர். . உறவினர் வழங்கிய தரவுகளின்படி மரணித்தோருள் Pham Thi Tra My என்ற 26 வயது […]
பாகிஸ்தானின் தென்பகுதி நகரமான கராச்சியில் இருந்து வடபகுதி நகரமான ராவல்பிண்டி நோக்கி சென்ற ரயிலில் பரவிய தீக்கு குறைந்தது 74 பேர் பலியாகியும், 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பயணிகள் தமது உணவை சமைக்க பயன்படுத்திய gas cylinder ஒன்று வெடித்ததாலேயே இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது. . குறைந்தது 3 வண்டிகள் இந்த தீக்கு இரையாகி உள்ளன. Tezgam என்ற இந்த ரயில் சேவைக்கு கராச்சியில் இருந்து ராவல்பிண்டி செல்ல சுமார் 25 மணித்தியாலங்கள் […]
ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தை இரண்டு பிரதேசங்களாக (federal territories) பிரித்து மத்திய அரசின் கடுப்பாட்டுள் கொண்டுவர இந்தியா நடவடிக்ககை எடுத்துள்ளது. நாளை வியாழன் இந்த நடவடிக்கை நடைமுறை செய்யப்படும். . மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி ஏற்கனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தின் விசேட சலுகைகளை பறித்து உள்ளது. . முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஸ்மீர் பகுதி ஒன்றாகவும், புத்த சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தீபெத் எல்லையோரம் உள்ள Ladakh பகுதியை இன்னொன்றாகவும் மத்திய அரசு […]
அமெரிக்காவின் ஆளில்லா விண்கலம் ஒன்று 780 நாட்கள் பயணித்த பின் பாதுகாப்பாக தரை இறங்கி உள்ளது. X-37B என்ற இந்த விண்கலத்தின் 5 ஆவது பயணம் இதுவாகும். இதன் முதல் நான்கு பயணங்களில் இது முறையே 224, 469, 675, 718 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து உள்ளது. . இந்த ஆளில்லா விண்கலம் இராணுவ நோக்கங்களுக்கே பயன்படுத்தப்படுவதாக கருதப்படுகிறது. பொதுவாக விண்ணுக்கு செலுத்தப்படும் கலங்கள் தொடர்பான தரவுகளை ஐ. நா. வுக்கு வழங்கும் முறைமை இருந்தாலும், X-37B […]
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற மேலும் 3 நாட்கள் மட்டும் இருக்கையில், இந்த நாடகத்தில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க இரு தரப்பும் இணங்கி உள்ளன. அதன்படி பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆக நீடிக்கப்பட்டு உள்ளது. . தற்போதுவரை இருந்த கால எல்லையான அக்டோபர் 31 ஆம் திகதியை நீடிக்கும் நிலை தோன்றின் பதிலுக்கு தான் தெருவோரம் செத்துக்கிடக்கலாம் என்று கூறிய பிரதமர் ஜான்சன் தற்போதைய 3 […]