ஊக்க மாத்திரையால் ரஷ்யா மீது ஒலிம்பிக் தடை

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் ஊக்க மாத்திரை பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்த WADA (World Anti-Doping Agency) ரஷ்யா மீது 4-வருட தடை விதித்து உள்ளது. போட்டிகளில் மேலதிக உந்து சக்தியை பெறும் நோக்கில் சில விளையாட்டு வீரர்கள் ஊக்க மாத்திரைகளை பயன்படுவர். ஆனால் அது சட்டத்துக்கு விரோதம். . மேற்படி தடை காரணமாக ரஷ்யா 2020 Tokyo ஒலிம்பிக், 2022 Qatar World Cup போன்ற போட்டிகளில் பங்கு கொள்ளுமா என்பது சந்தேகமே. . […]

ஆப்கான் தோல்விகளை மறைத்தது அமெரிக்கா

புஷ், ஒபாமா, ரம்ப் அரசுகள் கடந்த 18 வருட காலமாக அமெரிக்கா புரிந்துவரும் ஆப்கானிஸ்தான் யுத்த தோல்விகளை அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தாது மறைத்து வந்துள்ளன என்று கூறுகிறது Washington Post செய்தி நிறுவனம். யுத்தத்தில் ஈடுபட்ட ஜெனெரல்கள் உட்பட சுமார் 400 யுத்த பங்காளர் (insiders) இந்த தவுகளை வழங்கி உள்ளனர். . தொடரும் இந்த யுத்தத்தில் அமெரிக்கா 2,300 படையினரை இழந்துள்ளது. அத்துடன் சுமார் 20,000 படையினர் காயமானதும் உள்ளனர். அமெரிக்க அரசு ஆப்கான் யுத்த […]

இந்திய தொழிற்சாலை தீக்கு 43 பேர் பலி

இந்திய தலைநகர் டெல்கியில் உள்ள பாடசாலை புத்தக பை (bag) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஞாயிரு அதிகாலை இடம்பெற்ற தீக்கு குறைந்தது 43 பேர் பலியாகி உள்ளனர். நான்கு மாடிகளை கொண்ட இந்த தொழிற்சாலையில் சுமார் 100 ஊழியர்கள் உறங்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. . மேற்படி தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்படும் நிலையம் என்று தீயணைப்பு அதிகாரி BBC செய்தி நிறுவனத்துக்கு கூறி உள்ளார். இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டும் உள்ளார். . முதலாம் மாடியில் […]

விமானம் தாங்கி தயாரிப்புகளை சீனா நிறுத்தம்

தனது 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கி கப்பல் தயாரிப்பு வேலைகளை சீனா இடைநிறுத்தி உள்ளது. புதிய தொழிநுட்பங்களை கொண்டதாக அந்த கப்பல்களை கட்டும் பணிகளில் ஏற்படுள்ள இடர்பாடுகள் தயாரிப்பு வேலைகளை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. . சீனா முதலில் சோவியத் கைவிட்ட விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்து, புதிதாய் மெருகூட்டி தனது முதலாவது (Type 001) விமானம்தாங்கியை தயாரித்தது. இது தற்போது சேவையில் உள்ளது. . முதலாம் விமானம் […]

சவுதி படையினன் 3 அமெரிக்க படையினரை கொலை

அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்றுவரும் சவுதி அரேபிய வான்படை உறுப்பினன் ஒருவர் வகுப்பறையில் இருந்த 3 அமெரிக்க உறுப்பினர்களை சுட்டு கொலை செய்துள்ளார். அங்கு விரைந்த அமெரிக்க படை அதிகாரிகள் சவுதி மாணவனையும் சுட்டு கொலை செய்துள்ளனர். . அமெரிக்காவின் புளோறிடா (Florida) மாநிலத்தில் உள்ள பென்ஸகோல (Pensacola) என்ற இடத்தில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திலேயே இந்த சம்பவம் இன்று வெள்ளி காலை 6:51 மணியளவில் இடம்பெறுள்ளது. . இந்த சம்பவத்தில் குறைந்தது மேலும் 8 […]

பங்கு சந்தையில் $25.6 பில்லியன் திரட்டியது Aramco

பங்கு சந்தை IPO (Initial Public Offering) மூலம் முதலீடு திரட்ட சென்ற சவுதி அரேபியாவின் Aramco என்ற எண்ணெய்வள நிறுவனம் இன்று $25.5 பில்லியனை திரட்டி உள்ளது. இதுவரை IPO மூலம் அதிகம் முதலீட்டை திரட்டிய நிறுவனமாக $25 பில்லியன் திரட்டிய சீனாவின் Alibaba நிறுவனம் விளங்கி இருந்தது. தற்போது Aramco முன்னணியில் உள்ளது. . Aramco முதலில் $100 பில்லியன் திரட்ட விரும்பி இருந்தாலும், மேற்குநாட்டு முதலீட்டாளர் பின்வாங்க, அது தனது எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டது. […]

தென்னாசிய விளையாட்டில் இந்தியா முன்னணியில்

தற்போது நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஆம் ஆண்டுக்கான தென்னாசிய விளையாட்டு போட்டியில் புதன்கிழமை வரையிலான காலத்தில் இந்தியா 70 பதக்கங்களை பெற்று முன்னணியில் உள்ளது. இதில் 34 தங்க பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 13 பித்தளை பதக்கங்களும் அடங்கும். . இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 29 பதக்கங்கள் தங்க பதக்கங்கள். . இலங்கை 8 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்கள், 38 பித்தளை பதக்கங்கள் அடங்க […]

பிரான்சின் ஜனாதிபதியை இழிவு செய்தார் ரம்ப்

தற்போது இடம்பெறும் 70 ஆவது நேட்டோ (NATO) அமர்வுக்கு ஐரோப்பா சென்றுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரான்சின் சனாதிபதி மக்ரானை (Macron) இழிவு செய்துள்ளார். NATO அணி மூளை செய்த நிலையில் (brain dead) உள்ளது என்று அண்மையில் மக்ரான் கூறியதே ரம்பின் விசனத்துக்கு காரணம். . NATO தொடர்பான மக்ரானின் கூற்று “nasty”, “insulting”, “very dangerous” என்றெல்லாம் கூறியுள்ளார் ரம்ப். அத்துடன் அமெரிக்காவுக்கு அல்ல, பிரான்சுக்கே NATO அவசியம் தேவை என்றும் ரம்ப்  கூறியுள்ளார் […]

சுவிஸ் தூதரக ஊழியர் நாட்டை நீங்க நீதிமன்றம் தடை

நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் காணப்படாதோரால் கடத்தி இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக தவுகளை பறித்ததாக கூறப்படும் சம்பவத்தின் காரணியான சுவிஸ் தூதரக ஊழியர் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் இன்று செவ்வாய் தடை விதித்துள்ளது. . இந்த தடை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இக்காலத்தில் மேற்படி ஊழியர் கடத்தல் தொடர்பாக தனது முறைப்பாடுகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. . கோத்தபாய ராஜபக்ஸ […]

சீனாவில் தொலைபேசிக்கும் முகப்பதிவு அவசியம்

தற்போது உலகிலேயே அதிக அளவில் முகப்பதிவு (facial scan) பயன்படுத்தப்படும் நாடு சீனா. சீன அரசின் ஆதரவுடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் அங்கு தொலைபேசி (smart phone) மூலமான முகப்பதிவை பயன்படுத்தி வருகின்றன. . ஞாயிறு முதல் எவராவது புதிய தொலைபேசி (smart phone) கொள்வனவு செய்ய விரும்பின், அவரின் முகப்பதிவை தொலைபேசி நிறுவனத்துக்கு வழங்கவேண்டும். . முகப்பதிவு சந்தேக நபர்களை கைது செய்ய உதவினாலும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதிக்கின்றது. அண்மையில் சுமார் 60,000 கூடியிருந்த […]