தென் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் Nicolas Maduro தலைமையிலான இடதுசாரி ஆட்சியை கவிழ்த்து, பின் தனது பொம்மை அரச அரசை நிறுவ அமெரிக்காவின் ரம்ப் அரசு மீண்டும் முயற்சி செய்கிறது. . அதற்கு அமைய அமெரிக்கா தனது யுத்த கப்பல்களை தெற்கே நகர்த்தி உள்ளது. இந்த செய்தியை அமெரிக்க சனாதிபதி நேற்று புதன் அறிவித்து இருந்தார். . அதற்கு முன் வெனிசுவெலா அரசு அமெரிக்காவுக்கு போதை கடத்தும் குழுக்களுக்கு உதவுகிறது என்று அமெரிக்கா […]
அமெரிக்காவில் கடந்த கிழமை கொரோனா காரணமாக தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு (unemployment) விண்ணப்பித்தோர் தொகை 6.648 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அதற்கு முந்திய கிழமை 3.307 மில்லியன் தொழிலாளர் தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்து இருந்தனர். வரலாற்றில் இதற்கு முன், 1982 ஆம் ஆண்டே ஒரு கிழமையில் 695,000 பேர் தமது தொழிலை இழந்து இருந்தனர். . மேலும் பலர் அரச அலுவலகங்களை இலகுவில் அடைய முடியாத நிலை தொடர்வதால், வேலைவாய்ப்பை இழந்தோர் […]
தற்போது அமெரிக்காவின் Guam தீவுக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் USS Theodore Roosevelt என்ற விமானம் தாங்கி யுத்த கப்பலில் இருந்து கடல்படையினரை Guam தீவுக்கு எடுக்க அமெரிக்க படைகளின் தலைமை தீர்மானம் செய்துள்ளது. . இந்த விமானம் தாங்கியில் இருந்த 1,273 படையினரை கொரோனா தொற்றுக்கான சோதனை செய்தபோது 93 பேர் கொரோனா தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தங்கியின் அதிகாரி அணைத்து படையினரையும் தரைக்கு எடுக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பென்ரகான் அதற்கு […]
அமெரிக்காவில் சுமார் 75% மக்கள் வீட்டுள் இருக்குமாறு பணிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் தற்போது அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் தொகை சீனாவில் பலியானோர் தொகையிலும் அதிகமா உள்ளது. . அமெரிக்காவில் 181,099 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் 3,606 பேர் கொரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். குணமடைந்தோர் தொகை 6,038 மட்டுமே. . தற்போது Guam தீவில் தரித்து உள்ள அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான USS Theodore Roosevelt யிலும் கொரோனா பரவி உள்ளது. அக்கப்பலில் உள்ள வைரஸ் […]
சவுதி அரேபியா மே மாதம் முதல் தமது நாள் ஒன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை மேலும் 600,000 பரல்களால் அதிகரிக்க உள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளது. அவ்வாறு சவுதி தனது உற்பத்தியை அதிகரிப்பின், மே மாதம் முதல் சவுதி 10.6 மில்லியன் பரல்களை நாள் ஒன்றில் உற்பத்தி செய்யும். . ஏற்கனவே மிகையான எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ள சந்தை சவுதியின் மேலதிக உற்பத்தியால் விலையை மேலும் கீழே தள்ளும். கொரோனா வைரசால் உலகம் முடங்கி உள்ளதாலும் எண்ணெய் பாவனை […]
நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காதுவிடின் அமெரிக்கா சுமார் 200,000 பேரை கொரோனா வைரசுக்கு பலியாக்கலாம் என்று வைத்தியர் Anthony Fauci கூறியுள்ளார். இந்த வைத்தியரே ரம்ப் அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிககைகளுக்கான தலைமை வைத்தியர். . இதுவரை ஏப்ரல் 12 ஆம் திகதி வரவுள்ள Easter தினத்தன்று அல்லது அதற்கு முன் அமெரிக்க வர்த்தகங்கள் மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிய ரம்ப் தற்போது ஏப்ரல் 30 ஆம் திகதிவரை வர்த்தக செயல்பாடுகளை முடக்க […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் கவனத்தை வைத்திருந்தாலும், வடகொரியா இன்று மீண்டும் குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது. வடகொரிய நேரப்படி ஞாயிறு காலை இந்த ஏவலை வடகொரியா செய்துள்ளது. . கடந்த ஒரு மாத காலத்துள் வடகொரியா செய்து கொண்ட 6 வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த மாதம் 9 ஆம் திகதி மட்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது. பின் 27 ஆம் திகதி மேலும் 2 ஏவுகணைகளை […]
உலக நாடுகள் எங்கும் ஆண்கள் வாழும் காலத்திலும் அதிக காலத்துக்கு பெண்கள் வாழ்வது நாம் அறிவோம். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி ஆண் மிருகங்களில் அதிக காலத்துக்கு பெண் மிருக்கங்கள் வாழ்கின்றனவாம். . மொத்தம் 101 மிருகங்களின் வாழ்க்கை காலங்களை ஆராய்ந்த பிரித்தானியாவின் University of Bath ஆய்வாளர்களே இந்த ஆய்வை Proceedings of the National Academy of Sciences என்ற வெளியீட்டில் விபரித்து உள்ளனர். . சராசரியாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 8% […]
பிரித்தானிய பிரதமர் Boris Johnson (வயது 55) ஐயும் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனாலும் தான் தொடர்ந்தும் பிரதமர் பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். . பிரதமர் தனக்கு நேற்று வியாழக்கிழமை நோய்க்கான அறிகுறி தென்பட்டதாகவும், பரிசோதனைகள் அவருக்கு கொரோனா தொற்றியதை உறுதி செத்ததாகவும் கூறி உள்ளார். அதனால் தான் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளதாக அவர் கூறியுள்ளார். . இதுவரை 578 பேர் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியாகி […]
இன்றைய தவுகளின்படி உலகத்தில் அமெரிக்காவிலேயே அதிகம் பேர் கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்று அமெரிக்காவில் 82,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 1,178 பேர் அமெரிக்காவில் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் குணமடடைந்தோர் தொகை 619 மட்டுமே. . சுமார் 330 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்கா ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கவில்லை. இந்த வைரஸ் மீது ரம்ப் அரசு கொண்டிருந்த உதாசீனமே அதற்கு […]