ஜப்பானில் கைவிடப்பட்டு உள்ள 3.5 மில்லியன் வீடுகள்

உலகின் சில இடங்களில் கேள்வி காரணமாக வீடுகளின் விலை அளவுக்கு மீறி ஏறி செல்ல, வேறு சில இடங்களில் வீடுகள் குடியிருக்க எவரும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. ஜப்பானில் மட்டும் சுமார் 3.5 மில்லியன் வீடுகள் குடியிருப்பாளர் இல்லாது கைவிடப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி அங்கு சுமார் 4.1 மில்லியன் hectares நிலங்களும் உரிமையாளரை அடையாளம் காணமுடியாத நிலையிலும் உள்ளன. . குறைந்து வரும் சனப்பெருக்கமே இவ்வாறு வீடுகள் கைவிடப்பட முக்கிய காரணமாக விளங்குகிறது. சனப்பெருக்க […]

கொரோனா வைரஸ் வூஹான் பரிசோதனை கூடத்தில் உருவானதா?

கொரோனா வைரஸ் வூஹானில் உள்ள உயிரியல் பரிசோதனை கூடம் ஒன்றில் சீனர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியினர் இந்த கருத்தை மறைமுகமாக பரவி வரும் கொரோனாவுடன் இணைக்க அண்மைக்காலங்களில் முயல்கின்றனர். . ரம்ப்  குறிப்பிடும் Wuhan Institute of Virology (WIV) என்ற ஆய்வு நிலையம் ஒரு இராணுவ உயிரியல் ஆய்வு நிலையம் அல்ல. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் கிருமிகளை ஆராய்ந்து நோய் தடுப்பு மருந்துகளை […]

நாலு கிழமைகளில் அமெரிக்கா 22 மில்லியன் வேலைகளை இழந்தது

கடந்த 4 கிழமைகளில் சுமார் 22 மில்லியன் (22,034,000) வேலைகளை அமெரிக்கா இழந்து உள்ளது.  கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா சுமார் 5.2 மில்லியன் வேலைகளை கொரோனா காரணமாக இழந்து உள்ளது. வேலை இழப்புகளை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா சுமார் 2.2 டிரில்லியன் பணத்தை செலவழித்து இருந்தும் வேலை இழப்புகள் தொடர்கின்றன. . மந்தமான பொருளாதாரம் வரும் நவம்பர் தோர்தலில் தனக்கு பாதகமாக அமையலாம் என்ற பயத்தில் சனாதிபதி ரம்ப் வர்த்தகங்களை மே மாதம் முதல் ஆரம்பிக்க […]

தன் தவறுகளை மற்றவரில் திணிக்கும் ரம்ப், WHO உட்பட

தனது பொதுவாழ்வு முழுவதும் தனது தவறுகளை மற்றவர்களின் தலையில் சுமத்தி தப்பித்துக்கொள்ளும் இயல்பு கொண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான தனது தவறுகளை ஐ.நா.வின் சுகாதார அமைப்பான WHO மீது திணிக்க முயல்கிறார். . சீனா கொரோனா வைரஸ் தொடர்பான ஆபத்துகளை முதலில் முழுமையாக வெளியிடவில்லை என்றும், WHO அதற்கு ஆதரவாக இருந்துள்ளது என்றும் ரம்ப் கூறி உள்ளார். அதனால் WHO அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியையும் நிறுத்த பணித்துள்ளார். . […]

இவ்வாண்டு பொருளாதார வீழ்ச்சி 1930 வீழ்ச்சியை மீறும்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பொருளாதார வீழ்ச்சி 1930 ஆம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியிலும் அதிகமாக இருக்கும் என்று இன்று செவ்வாய் IMF (International Monitory Fund) கூறியுள்ளது. . உலக அளவில் இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 3% ஆல் வீழ்ச்சி அடையும் என்றும், அடுத்த வருடம் ஓரளவுக்கு மீண்டும் உலக பொருளாதாரம் வளரும் என்று IMF கூறி உள்ளது. . கடந்த ஜனவரி மாதம் 2020, கொரோனா பாதிப்புக்கு […]

கடவுள் உண்டா?

(இளவழகன், ஏப்ரல் 13, 2020)   கடவுள் உண்டா என்ற கேள்வி கேட்பதற்கு இலகுவானது, ஆனால் பதிலளிப்பதற்கு கடினமானது. . இந்த கேள்விக்கு பதிலளிக்க இலகுவான வழி, நேரடியாக பதிலளிப்பதற்கு பதியிலாக, சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகளை திருப்பி கேட்பதே. சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகள் கடவுள் உண்டா என்ற முதல் கேள்வியை கேட்டவரின் சிந்தனையை மேலும் ஆழமாக சிந்திக்க தூண்டும். மேலதிக பதில் கேள்விகள் இந்த விசயத்தில் பிரகாசமான தெளிவையும் வழங்கலாம். . […]

தென்னாசிய பொருளாதாரம் 40 வருட வீழ்ச்சியில்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் உட்பட 8 நாடுகளை கொண்ட தென் ஆசிய நாடுகள் கடந்த 40 வருடங்களில் நிகழும் அதிகூடிய பொருளாதார மந்த நிலையை இந்த வர்த்தக ஆண்டில் அடையும் என்று உலக வங்கி (World Bank) இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது. . சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தென் ஆசிய நாடுகள் 6.3% பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி கூறி இருந்தாலும், கொரோனா வரைஸ் காரணமாக மேற்படி […]

கொரோனாவின் அடிமுடி தேடும் மருத்துவம்

பொதுவாக ஒரு புதிய நோய் பரவும்போது அதன் காரணி, குணம், காவி போன்றவற்றை விஞ்ஞானம் தேடும். அவ்வாறு தேடிய அறிவை பயன்படுத்தியே அந்த நோயை குணப்படுத்தும் மருந்து, அந்த நோயை தொற்றாது தடுக்கும் மருந்து போன்றவற்றை தயாரிக்க முடியும். . ஆனால் கொரோனாவின் காரணி, குணம், காவி எல்லாவற்றையும் விஞ்ஞானம் திடமாக அறிய முடியாது உள்ளது. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் கூறிய விஞ்ஞான கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன. . பிரித்தானிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் […]

கொரோனா தொற்று 1.68 மில்லியன், மரணம் 102,000

உலக அளவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை 102,000 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளை கொரோனா தொற்றியோர் தொகை 1.68 மில்லியன் ஆக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொற்றுக்கு உள்ளாகி பின் குணமடைந்தோர் தொகை 374,509 ஆகவும் உள்ளது. . அமெரிக்காவில் மட்டும் தற்போது 491,358 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 157,053 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இத்தாலியில் 147,577 பேரும், […]

மூன்றாவது கிழமை அமெரிக்காவில் 6.6 மில்லியன் தொழில் இழப்பு

மே 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையான கிழமையில் அமெரிக்கா மொத்தம் 6.6 மில்லியன் தொழில்களை இழந்துள்ளது. விமான சேவைகள், உணவகங்கள், விடுதிகள், தொழிச்சாலைகள், அலுவலகங்கள் என்பன தமது பணியாளர்களை நீக்கியமை இந்த பாரிய அளவிலான தொழில் இழப்புக்கு காரணம். . கடந்த கிழமைக்கு முன்னைய கிழமை அமெரிக்கா 6.7 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது. அதற்கு முன்னைய கிழமை 3.3 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது.அதனால் கடந்த 3 கிழமைகளில் […]