கூகிளின் Toronto Smart City கனவு கலைந்தது

அமெரிக்காவின் கூகிள் (Google), நியூ யார்க் நகரை தளமாக கொண்ட தனது கிளை நிறுவனமான Sidewalk Labs மூலம் கனடாவின் Toronto நகரில் Smart City என்ற எதிர்கால நகரை அமைக்க முனைந்து இருந்தது. ஆனால் கரோனா காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு உள்ளதாக Sidewalk Labs நிறுவன CEO Dan Doctoroff வியாழன் கூறி உள்ளார். உண்மையில் மேற்படி கைவிடலுக்கான காரணம் வேறு என்றும் கூறப்படுகிறது. . மேற்படி Smart City திட்டம் 2017 ஆம் […]

தவறான கரோனா மருந்துக்கு பலியான இந்தியர்

கே. சிவநேசன் என்ற சென்னை வாசியும், Sujatha Bio Tech என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அவரின் முதலாளியும் இணைந்து கரோனாவுக்கு மருந்து தயாரிக்க முனைந்து உள்ளனர். தமது முறைப்படி அனுமதிக்கப்படாத மருந்தை தாமே அருந்தி உள்ளானர். அந்த மருந்துக்கு சிவநேசன் பலியாகி உள்ளார். . முதலாளி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். . சிவநேசன், வயது 47 வயதுடைய pharmacist, உடனடியாகவே மரணித்து உள்ளதாக Ashok Kumar என்ற போலீஸ் அதிகாரி கூறி உள்ளார். . இவர்களின் […]

லிபியாவில் துருக்கி கை ஓங்க, UAE கை சரிகிறது

பெரும்பாலான உள்நாட்டு யுத்தங்களில் வெளிநாடுகளின் பலத்த பங்களிப்பு இருக்கும். தற்போது லிபியாவில் இடம்பெறும் யுத்தமும் அவ்வகையினதே. . ஒபாமா தலைமையிலான அமெரிக்காவும், ஏனைய NATO நாடுகளும் கூட்டாக இணைந்து லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியை பதவியில் இருந்து விரட்டி, பின் படுகொலையும் செய்தனர். அதன் பின் லிபியா ஒரு நிதானமான அரசு இன்றி யுத்தங்களுள் மாண்டு உள்ளது. . அண்மைக்காலங்களில் UAE, ரஷ்ய அரசுகளின் ஆதரவுடன் Libyan National Army (LNA) என்ற தனியார் படையை கொண்டிருக்கும் […]

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7%

அமெரிக்காவின் Department of Labor வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பின்படி ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவின் வரலாற்று பதிவில் என்றைக்குமே இந்த அளவு வேலைவாய்ப்பு இன்மை உயர்ந்து இல்லை. . 1947 ஆண்டுக்கு பின், 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு இன்மை 10% ஆகவும், 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10.8% ஆகவும், இருந்துள்ளன. . 1929 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு […]

ரம்பின் கரோனா கருத்தை அஸ்ரேலிய தூதரகம் கசிய விட்டது?

அமெரிக்க சனாதிபதி ரம்பின் கரோனா தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்க மக்கள் வெறுப்பு கொண்டிருக்கும் நிலையில், விசயத்தை திசை திருப்பும் நோக்கில் ரம்ப் கரோனா வூஹான் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து வெளியேறியது என்ற கருத்தை பரப்பி வருகிறார். . ஆனால் மேற்படி கருத்து அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வாளர்களால் மறுக்கப்படுள்ளது. ஐ. நாவின் WHO அமைப்பும் அந்த கருத்தை மறுத்து உள்ளது. . தனது கருத்தை உலகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ரம்ப் தன கருத்தை அஸ்ரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் […]

வேனேசுவேலா அரசை கவிழ்க்க சென்ற அமெரிக்கர் கைது

அமெரிக்காவுக்கு உடன்படாத வேனேசுவேலா அரசை கவிழ்த்து, தனக்கு சாதகமான அரசை அங்கு நிறுவ அமெரிக்கா நீண்ட காலமாக முனைந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் வேனேசுவேலாவுள் அண்மையில் நுழைந்த அமெரிக்கர் உடன்பட 13 பேரை கைது செய்துள்ளது வேனேசுவேலா பாதுகாப்பு படைகள். . அமெரிக்கர்களான 34 வயதுடைய Luke Denman, 41 வயதுடைய Airan Berry ஆகியோர் உட்பட 13 பேர் Colombia விலிருந்து வேனேசுவேலா நுழைய முனைந்த பொழுது கைது செய்யப்பட்டு உள்ளனர் என்கிறது வேனேசுவேலா அரசு. […]

சீன கடனை அடைக்க மறுக்குமா ரம்ப் அரசு?

சீனாவிடம் இருந்து பெற்ற $1.1 ட்ரில்லியன் கடனை திருப்பி அடைக்க மறுக்க கரோனாவை காரணம் காட்டலாமா என்று ரம்பும், அவரது ஆலோசகர்களும் ஆராய்ந்ததாக செய்திகள் கூறுகின்றன. . AIDS, SARS, Ebola என்றெல்லாம் தொற்று நோய்கள் பல்வேறு நாடுகளில் ஆரம்பித்து இருந்தாலும் அந்த நாடுகளை நட்டஈடு செய்ய பணிக்கப்படவில்லை. அந்நிலையில் சீனா கரோனாவுக்கு நட்டஈடு செலுத்த வேண்டும் என்றில்லை. . அது மட்டுமன்றி அமெரிக்கா தனது மக்களுக்கு வழங்கிய, மீண்டும் வழங்கவுள்ள பெரும் தொகை உதவி பணங்களுக்கு […]

இந்தியர்களை அழைத்துவர 60 விமானங்கள் பயணம்

கரோனா காரணமாக 12 நாடுகளில் முடங்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்தியா 60 விமானங்களை அனுப்பவுள்ளது. இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலத்தில் மேற்படி முடங்கி உள்ள இந்தியர் இந்தியாவுக்கு எடுத்துவரப்பட உள்ளனர். . மேற்படி 60 விமானங்களும் சுமார் 15,000 இந்தியர்களை 12 நாடுகளில் இருந்து அழைத்துவரும். அவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), குவைத், ஓமான், கட்டார், சவுதி, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் முடங்கி […]

தொலைபேசி மூலம் இயங்கும் அமெரிக்க உயர் நீதிமன்றம்

கரோனா காரணமாக இன்று திங்கள் அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் (Supreme Court) முதல் தடவையாக தொலைபேசி மூலம் (teleconference) இயங்குகிறது. வழமையாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் எல்லோரும் நீதிமன்றம் சென்று, அங்கேயே வழக்கை விவாதிப்பார். ஆனால் கரோனா காரணமாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் அனைவரும் தொலைபேசி மூலம் இணைந்து வழக்கை இன்று விவாதிக்கின்றனர். . தொலைபேசி மூலம் வழக்கு ஒன்றை விசாரணை செய்வது அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் 231 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் தடவை. . அனைவரும் நீதிமன்றத்தில் […]

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண் சனாதிபதி?

2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதல் தடவையாக பெண் ஒருவர் சனாதிபதி ஆகும் வாய்ப்பு சந்தர்ப்ப வசமாக அதிகரித்து உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வேறுபட்ட காரணங்கள் ஒன்றாக சந்திக்க உள்ளதால், அங்கு முதல் தடவையாக ஒரு பெண் சனாதிபதி ஆகலாம். . கரோனா வைரஸ் விசயத்தை திறமையாக கையாளாத காரணத்தால் தற்போதைய சனாதிபதி ரம்புக்கு ஆதரவு குறைந்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங்கள் எம்போதுமே Democratic கட்சிக்கு ஆதரவை வழங்குவன. சில ரம்பின் Republican கட்சிக்கு ஆதரவை […]