வங்காள விரிகுடாவில் தற்போது நிலைகொண்டுள்ள பாரிய சூறாவளி அம்பன் இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் கரையோரங்களை வன்மையாக தாக்கலாம் என்ற காரணத்தால் இந்தியா சுமார் 1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துகிறது. அம்பன் புதன்கிழமை கங்கை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியை தாக்கும் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர். . அம்பன் நிலத்தை தாக்கும்பொழுது சுமார் 115 km/h காற்று வீச்சை கொண்டிருக்கும் என்றும் கணிக்கப்படுள்ளது. நடுக்கடலில் தற்போது நகரும் அம்பன் சுமார் […]
கடந்த 500 நாட்களாக (சுமார் 18 மாதங்கள்) முறைப்படியான ஆட்சி இன்றி இருந்த இஸ்ரேலில் இன்று ஞாயிறு கூட்டு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. . கடந்த 500 நாட்களில் அங்கு 3 தேர்தல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த மூன்று தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் ஆட்சியை அமைக்க தேவையான ஆசனங்களை வென்று இருக்கவில்லை. மூன்று தேர்தல்களும் ஏறக்குறைய ஒரே முடிவையே வழங்கி இருந்தன. . மேலுமொரு தேர்தலை (4 ஆவது தேர்தலை) நடாத்தினாலும் முடிவு மாறாது என்ற […]
அஸ்ரேலியாவின் நான்கு இறைச்சி தயாரிப்பு நிறுவனங்கள் மீது அண்மையில் சீனா தடை விதித்து உள்ளது. அத்துடன் மற்றைய அஸ்ரேலிய இறைச்சி இறக்குமதிகளுக்கும் சீனா புதிதாக 80% இறக்குமதி வரியையும் நடைமுறை செய்துள்ளது. சீனாவின் அஸ்ரேலியா மீதான அண்மைக்கால கடும்போக்கு அஸ்ரேலியா அமெரிக்க சனாதிபதி ரம்ப் வழி செல்வதற்கு வழங்கும் தண்டனைகள் என்று கருதப்படுகிறது. . அஸ்ரேலியாவின் இறைச்சிக்கு மட்டுமன்றி, அவர்களின் barley க்கும் சீனா புதிதாக 80% வரி நடைமுறை செய்துள்ளது. . நீண்ட காலமாக அஸ்ரேலியாசுதந்திரமான […]
1994 ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடான றவன்டாவில் (Rwanda) இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த Hutu இன Felicien Kabuga என்பவர் இன்று சனிக்கிழமை Paris நகருக்கு அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது 84 வயதுடைய Kabuga வேறு பெயர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். . சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இவரின் நிறுவனம் ஒன்றே பெரும் தொகை வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களை இறக்குமதி செய்து, Interahamwe என்ற வன்முறை குழு மூலம் […]
Qing Wang என்ற Cleveland Clinic Foundation (Cleveland, Ohio) அமைப்பின் மருத்துவ ஆய்வாளர் புதன்கிழமை அமெரிக்காவின் FBI போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று வியாழன் நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்தார். இவர் அமெரிக்காவின் நிதி உதவியுடன் செய்யும் ஆய்வுகளுக்கு சீனாவிடம் இருந்தும் நிதி பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. . சீனாவில் பிறந்த Wang தற்போது ஒரு அமெரிக்க குடிமகன். இவர் தான் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்கு அமெரிக்காவின் National Institutes of Health […]
கரோனா பரவல் காரணமாக சந்தையில் இறைச்சி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரம், பன்றியை வளர்க்கும் பண்ணைகள் தமது பன்றிகளை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எமது வாழ்க்கை முறை மாறியதே இந்த முரண்பாடுக்கு பிரதான காரணம். . பெருநகரங்ககளை நோக்கி மக்கள் படையெடுத்துள்ள இக்காலத்தில் அவர்களுக்கு தேவையான இறைச்சியை வெட்டும் நிலையங்கள் (slaughterhouse) மிருகங்களை வெட்டி, பதனிட்டு, பொதிகளில் அடைத்து வழங்கி வந்துள்ளன. அவ்வகை சாலைகள் தற்போது கரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் உள்ள Smithfield […]
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவின் Calgary மிருக காட்சி சாலையில் உள்ள பன்டாகள் (panda) விரும்பி உண்ணும் மூங்கிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால் வேறு வழியின்றி Calgary காட்சி சாலையில் உள்ள இரண்டு பன்டாக்களும் மீண்டும் சீன செல்லவுள்ள. . போக்குவரத்துகள் தடைபட்ட காரணத்தால் கனடா வேறு இடங்களில் இருந்து மூங்கிலை பெற்று இருந்தாலும் Er Shun, Da Mao ஆகிய இரண்டு பன்டாக்களும் அவற்றை உண்ண மறுத்துவிட்டன. வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட […]
இந்தியா வெளியிடும் CO2 அளவு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15% ஆல் குறைந்து உள்ளது. அத்துடன் இது மே மாதம் 30% ஆல் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. . Carbon Brief என்ற அமைப்பு வெளியிட்ட இந்த கணிப்புக்கு குறைந்து வரும் எரிபொருள் பாவனை, அதிகரித்துவரும் சூரிய சக்தி, காற்றாடிகள் மூலம் உருவாக்கப்படும் மின் என்பனவும் சில காரணங்கள் என்றாலும் கரோனா காரணமாக மக்கள் முடங்கியதே மிகப்பெரிய […]
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பிரசவ வைத்தியசாலையில் செவ்வாய் இடம்பெற்ற துப்பாக்கிதாரர்களின் தாக்குதலுக்கு குறைந்தது 16 பேர் பலியாகி உள்ளனர். அதில் உடன் பிறந்த குழந்தைகளும், அவர்களின் தாய்மாரும் அடங்குவர். . மேற்படி தாக்குதலின் பின்னர் Nangarhar மாநிலத்தில் இடம்பெற்ற இன்னோர் தாக்குதலுக்கு மேலும் 24 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர். . மேற்படி வைத்தியசாலை Doctors Without Borders அமைப்பால் நடாத்தப்படுவது. . மேற்படி இரண்டு தாக்குதல்களுக்கும் […]
இந்தியாவின் ஆத்திர பிரதேச மாநிலத்தின் கரையோர நகரான விசாகப்பட்டினத்தில் அனுமதி இன்றி இயங்கிய வாயு தொழில் நிலையம் ஒன்றில் வியாழக்கிமை ஏற்பட்ட கசிவுக்கு 2 சிறுவர் உட்பட 12 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். தென் கொரியாவை தளமாக கொண்ட LG Polymers என்ற நிறுவனத்துக்கு உரியது இந்த தொழிலகம். . மேற்படி தொழிலகத்தை விரிவாக்க விண்ணப்பித்து இருந்தாலும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கவில்லை. தாம் உரிமை பெறாமலேயே இயங்கியதாக LG Polymers கூறியுள்ளது. . […]