அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX புதன்கிழமை (மே 27) இரண்டு அமெரிக்க விண்வெளிவீரரை International Space Station (ISS) க்கு எடுத்து செல்லவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளின் பின் அமெரிக்கர் ISS க்கு அமெரிக்காவின் கலத்தில் பயணிப்பது இதுவே முதல் தடவை. கடந்த 9 வருடங்களாக அமெரிக்கர் ரஷ்யாவின் ஏவுகலம் மூலமே ISS சென்று வந்தனர். . புதன்கிழமை Robert Behnken, Douglas Hurley ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களே SpaceX கலத்தில் ISS செல்லவுள்ளனர். […]
உலகத்தை தாம் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதாக கூறும் நாடுகள் தாம் தமது பயங்கரவாதத்தை லிபியாவுள் திணிப்பதை New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றில் விபரப்படுத்தி உள்ளது. . 2011 ஆம் ஆண்டில் அரபு நாடுகள் தமது சர்வாதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அந்நிய நாடுகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது அடிமை அரசுகளை நிறுவ முனைந்தன. நேட்டோ (NATO) லிபியாவில் இருந்த சர்வாதிகாரி கடாபியை விரட்டி, படுகொலை செய்தது. ஆனால் லிபியா பின்னர் கொலைக்களமாக, நேட்டோ மெல்ல […]
வேனேசுவேலாவுக்கு எண்ணெய் எடுத்துச்சென்ற முதலாவது கப்பலை அமெரிக்கா தடுக்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக 5 ஈரானிய கப்பல்கள் ஈரானின் எணெய்யை வேனேசுவேலாவுக்கு எடுத்து செல்கின்றன. அந்த 5 கப்பல்களில் முதலாவதான Fortune வேனேசுவேலாவை ஏற்கனவே அடைந்து உள்ளது. . Forest, Petunia, Faxon, Clavel ஆகிய ஏனைய 4 கப்பல்களும் வேனேசுவேலாவை நோக்கி பயணிக்கின்றன. இவை காவும் எண்ணெய் வேனேசுவேலாவின் 5 மாத பாவனைக்கு போதுமானது. . அமெரிக்கா தனது யுத்த கப்பல்களான USS Detroit, USCG […]
அமெரிக்கா முழுமையாக பகைத்துக்கொண்ட நாடுகளில் மத்திய கிழக்கில் உள்ள ஈரானும், தென் அமெரிக்காவில் உள்ள வேனேசுவேலாவும் (Venezuela) அடங்கும். வெவ்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா இரண்டு நாடுகளுடனும் பகைத்து கொண்டாலும், அவை இரண்டும் தற்போது நண்பர்களாகி அமெரிக்காவை குழப்பத்துள் தள்ளி உள்ளன. . வேனேசுவேலா உலகத்திலேயே அதிகம் எண்ணெய்யை தனது நிலத்தடியில் கொண்டிருந்தாலும் அமெரிக்கா அதன் மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியாது உள்ளது. அதனால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் முரண்பாடுகள் படிப்படியாக உக்கிரம் அடைந்து வந்தாலும் அஸ்ரேலியாவின் ஒரு மாநிலமான விக்ரோரியாவுக்கும் (Victoria), சீனாவுக்கும் இடையே வர்த்தக தொடர்புகள் தொடர்ந்தும் வலுவடைந்து வருகின்றன. மாநில அரசின் இந்த அணுகுமுறையால் விசனம் கொண்டுள்ளது மத்திய அரசு. . சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் விக்ரோரியா விரைவில் கையொப்பம் இடவுள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறது Canberra வில் உள்ள மத்திய அரசு. மத்திய அரசின் […]
பாகிஸ்தானின் வடகிழக்கு நகரான லாகூரில் (Lahore) இருந்து கராச்சியில் (Karachi) உள்ள Jinnah International Airport சென்ற Pakistan International Airlines (PIA) விமானம் ஒன்று (Flight 8303) மொத்தம் 91 பயணிகளுடனும், 8 பணியாளர்களுடனும் வீழ்ந்து மோதி உள்ளது. அதில் பயணித்த பெரும்பாலானோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . Jinnah விமான நிலையத்தில் இருந்து சுமார் 3.2 km தொலைவில் உள்ள Model Colony என்ற குடியிருப்பு பகுதியிலேயே இந்த விமானம் தரை இறங்கு முன், உள்ளூர் […]
கரோனா காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர் தமது வேலைகளை இழக்கும் வேகம் குறைந்து வந்தாலும், கடந்த 7 நாட்களிலில் மேலும் 2.4 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் மார்ச் மாதம் முதல் மொத்தம் 38.6 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். . முடக்கம் காரணமாக கடந்த பெப்ருவரி மாதம் தொழில் புரிந்தோரில் 1/4 பங்கினர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது. […]
ஜெர்மனி மக்களுக்கு அமெரிக்கா மீது இருந்த நல்லெண்ணம் குறைந்து, அதேவேளை சீனா மீதான நல்லெண்ணம் அதிகரித்து உள்ளதாக கருத்து கணிப்பு ஆய்வு ஒன்று அறிந்துள்ளது. குறிப்பாக கரோனா வரைஸ் தொடர்பான அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசின் செயல்பாடுகளே ஜெர்மன் நாட்டவருக்கு விசனத்தை உருவாகியுள்ளது. ஜெர்மனியின் Koerber Institute என்ற அமைப்பும், அமெரிக்காவின் Pew Institute என்ற அமைப்பும் இந்த கருது கணிப்பு ஆய்வை செய்துள்ளன. . மேற்படி கணிப்பின்படி 73% ஜெர்மனியினர் அமெரிக்கா மீதான தமது நல்லெண்ணம் […]
தனது தவறுகளை மற்றவர்கள் மீது திணித்து தப்பிக்கொள்ளும் இயல்பு கொண்ட ரம்ப் மீண்டும் ஒருமுறை அவ்வகை செயலை செய்து அகப்படுக்கொண்டார். ஆரம்ப காலங்களில் கரோனா விசயத்தில் புத்திசாலிதமாக செயல்பட்டு முற்காப்பு நடவடிக்கைகளை செய்ய தவறிய ரம்ப், அமெரிக்காவில் 1.5 மில்லியன் மக்கள் கரோனா தொற்றியும், 90,000 மக்கள் பலியாகியும் உள்ள நிலையில், WHO மீது பாய்கிறார் ரம்ப். . சில நாட்களுக்கு முன் ரம்ப் WHO வுக்கு எழுதிய மிரட்டல் கடிதம் ஒன்றில், தனது வாதத்தை உறுதிப்படுத்த, […]
பர்மாவின் வடகிழக்கே இயங்கிவந்த போதை தயாரிப்பு நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட அந்நாட்டு போலீசார் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான போதையை கைப்பற்றி உள்ளனர். இந்த செய்தியை திங்கள் வெளியிட்ட United Nations Office on Drugs and Crime (UNODC) அமைப்பு மேற்படி போதை தயாரிப்புக்கு உலக அளவிலான சமூகவிரோத கும்பல்களின் ஆதரவு இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளது. . இந்த முற்றுகையில் 3,748 லீட்டர் methyl fentanyl, 193 மில்லியன் methamphetamine குளிசைகள், 500 kg crystal methamphetamine, […]