அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo வும், சீனாவின் உயர் அதிகாரி Yang Jiechi யும் ஹவாயில் (Hawaii) சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இரகசியமாக திட்டமிடும் இந்த சந்திப்பு தொடர்பான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. . கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதியின் பின் இருநாட்டு அதிகாரிகளும் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு இருக்கவில்லை. பெப்ரவரி 7 ஆம் திகதி, மார்ச் 27 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் […]
. சுமார் 30 இந்தியர்கள் நேபாள் உள்ளே 100 மீட்டர் தூரம் வரை நுழைந்த போது நேபாள் போலீசார் அவர்களை தடுக்க முனைந்து உள்ளனர். அப்போது மூண்ட கலவரத்தில் ஒரு இந்தியர் நேபாள் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். இந்த சம்பவம் Sarlahi என்ற நேபாளின் தெற்கு பகுதியில் இடம்பெற்று உள்ளது. . கடந்த மாதம் Jhapa பகுதியில் சிறு தொகை இந்திய கமக்காரர் நேபாளுள் நுழைய முற்பட்டு இருந்தனர். அப்போதும் நேபாள் போலீசார் துப்பாக்கியால் சுட்டு […]
கடந்த சில கிழமைகளாக சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் அரசியல் முறுகல் நிலை உக்கிரம் அடைந்து வருகிறது. அஸ்ரேலிய பிரதமர் திடீரென அமெரிக்க சனாதிபதி பக்கம் சாய, சீனா அஸ்ரேலியாவை தண்டிக்க ஆரம்பித்து உள்ளது. . இன்று வியாழன் மீண்டும் அஸ்ரேலியா செல்லும் சீன மாணவர்களுக்கும், உல்லாச பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா. அஸ்ரேலியாவில் சீனர்களுக்கும், ஏனைய ஆசியர்களுக்கும் எதிராக வன்முறைகள் அதிகரித்து உள்ளன என்றுள்ளது சீனாவின் எச்சரிக்கை. . சீனா கூறியது போல் சில சம்பவங்கள் அஸ்ரேலியாவில் […]
இந்தியாவின் முதன்மை வர்த்தக நகரான மும்பாயில் தற்போது 51,000 கரோனா தொற்றியோர் உள்ளனர். அத்தொகை கரோனா ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் உள்ள கரோனா தொற்றியோர் தொகையிலும் அதிகம். . செவ்வாய்க்கிழமை மட்டும் மும்பாய் மேலும் 1,015 பேர் கரோனா தொற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தினம் மேலும் 58 பேர் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். . மும்பாய் நகரம் உள்ள Maharastra மாநிலத்தில் மட்டும் 90,000 கரோனா தொரியோர் உள்ளனர். . முழு இந்தியாவிலும் […]
இந்தியாவும், சீனாவும் தமது படைகளை சில எல்லை பகுதிகளில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. Galwan Valley, Ladakh பகுதிகளில் இருந்தே இருதரப்பும் தமது படைகளை பின்வாங்கின. ஆனாலும் Pangong Tso, Daulat Beg Oldie பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கப்படவில்லை. . மே மாதம் 5 ஆம் திகதி முதல் இருதரப்பும் ஆயுதங்கள் இன்று இந்த பகுதிகளில் சண்டையில் ஈடுபட்டு இருந்தன. . சில தினங்களுக்கு முன் இந்தியா சிறிய அளவு படைகளை முரண்படும் எல்லைகளுக்கு […]
இந்திய எல்லைக்கு அருகாக தனது சில ஆயிரம் படையினரை ஞாயிறு அனுப்பி உள்ளது சீனா. சீனாவின் மத்திய மாநிலமான Hubei மாநிலத்தில் இருந்து இந்த படையினர் அடையாளம் குறிப்படப்படாத நிலையம் ஒன்றுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். இந்த படையில் paratroopers உட்பட கவச வாகனங்களும் அடங்கும். . தனது படையை சீனா நகர்தினாலும் இந்திய, சீன ஜெனரல்கள் மத்தியில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இந்திய-சீன எல்லையோரம், சீனாவின் பக்கத்தில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் இடம்பெறுகிறது. […]
17 ஆம் நூற்றாண்டில் அடிமைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த Edward Colston என்பவரின் உருவச்சிலை ஒன்று ஆர்பாட்டகாரர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. உடைக்கப்பட்ட சிலை பின்னர் அருகில் உள்ள துறைமுகத்துள் வீசப்பட்டு உள்ளது. . பிரித்தானியாவின் Bristol நகரில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. Bristol நகரம் சுமார் 84.0% வெள்ளை இனத்தவரையும், 6.0% கருப்பு இனத்தவரையும் கொண்ட நகரம். . முதலில் ஆடை, பழம், பழரசம், எண்ணெய் போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த இவர் பின்னர் Royal African Company […]
திங்கள் முதல் லிபியாவில் யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்யவுள்ளதாக எகிப்தின் சர்வாதிகாரி சிசி (Sissi) இன்று சனிக்கிழமை அறிவித்து உள்ளார். எகிப்த் ஆதரவு வழங்கும் Libyan National Army (LNA) என்ற லிபியாவின் கிழக்கை தளமாக கொண்ட ஆயுத குழுவு அண்மை காலங்களில் பாரிய தோல்விகளை அடைந்து வரும் நிலையிலேயே யுத்த நிறுத்தத்தை எகிப்த் நாடுகிறது. . எகிப்த், UAE, ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியுடன் லிபியாவின் பல பகுதிகளை கைப்பற்றி வந்த Khalifa Haftar […]
ஜெர்மனியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளில் 9,500 படையினர் உடனடியாக வெளியேறுகின்றனர். இந்த திடீர் வெளியேற்றத்துக்கு அமெரிக்க சனாதிபதி ஜெர்மனியின் அதிபர் Angela Merkel மீது கொண்டுள்ள காழ்ப்பே காரணம் என்று கருதப்படுகிறது. . இரண்டாம் உலக யுத்த காலத்தில் இருந்து, ரஷ்யாவுடனான cold war காலம் ஊடாக பெரும் தொகையான அமெரிக்க படைகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நிலை கொண்டுள்ளன. ஜெர்மனியில் மட்டும் தற்போது 34,500 அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. அதில் 9,500 படையினரை அங்கிருந்து […]
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மடகாஸ்கர் (Madagascar) சனாதிபதி Andry Rajoelina உள்ளூரில் தயாரித்த Covid-Organic என்ற பாணம் ஒன்றை மக்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். . விஞ்ஞான முறைப்படி ஆய்வு செய்யாத இந்த பாணம் அந்நாட்டு National Medial Academy யின் அனுமதி பெற்ற மருந்தல்ல. World Health Organization னும் இந்த உள்ளூர் பாணத்தை அனுமதிக்கவில்லை. இந்த பாணம் கடுமையான கசப்பு சுவையும் கொண்டது. . பாணத்தின் கசப்பு சுவையை அறிந்த கல்வி […]