ரம்பை நீதிமன்றம் இழுக்கும் Harvard, MIT, காரணம் F-1, M-1 விசா

அமெரிக்காவின் ரம்ப் அரசு ஜூலை 6 ஆம் திகதி விடுத்த F-1, M-1 மாணவ விசாக்களின் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், MIT ஆகியன நீதிமன்றம் செல்கின்றன. . முறைப்படி F-1, M-1 விசா மூலம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரடியாக சென்றே கல்வி கற்க வேண்டும். வீட்டில் இருந்து internet மூலம் கற்க முடியாது. ஆனால் அண்மையில் வந்த கரோனா மாணவர் நேரடியாக கலந்துகொள்ளும் வகுப்புகளையும் internet மூலம் தொடர […]

சில வெளிநாட்டு மாணவர்களை வெளியேற கூறுகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது F-1, M-1 வகை மாணவ விசாக்கள் மூலம் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) ஜூலை 6 ஆம் திகதி எச்சரிக்கை விடுத்துள்ளது. . F-1, M-1 விசா முறைமைப்படி மேற்படி மாணவர்கள் தமது கல்வி நிலையங்களுக்கு நேரடியா சென்று (in-person) கற்க வேண்டும். அதாவது அவர்கள் வகுப்பறை செல்லாது வீடுகளில் இருந்து online சேவைகள் மூலம் கற்க முடியாது. . […]

கவிழ்ந்த படகு மீனவர் 4 தினங்களின் பின் காப்பாற்றல்

ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் அதில் இருந்த திருகோணமலையை சார்ந்த 6 மீனவர்கள் 4 தினங்களாக கட்டுப்பாடு இன்றி இழுபட்டுள்ளனர். இவர்களை கண்ட வணிக கப்பல் ஒன்று இந்தியாவுக்கு அறிவித்து, ஆறு பேரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர். . விசாகப்பட்டினம் நோக்கி சென்ற YM Summit என்ற வர்த்தக கப்பல் ஞாயிற்றுக்கிழமை மேற்படி 6 மீனவர்கள் கவிழ்ந்த படகில் உதவி தேடி இருப்பதை கண்டுள்ளது. உடனே அக்கப்பல் இந்தியாவின் Maritime Rescue Coordination Center க்கு […]

ஜப்பான் வெள்ளத்துக்கு குறைந்தது 35 பேர் பலி

இன்று ஞாயிறு வரை ஜப்பானின் தென்பகுதியில் இடம்பெற்ற மழை வீழ்ச்சியின் பின் உருவான வெள்ளத்துக்கு குறைந்தது 35 பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் பலரை காணவில்லை. . பலியானோரில் 14 பேர் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் குடியிருந்தோரே. இந்த நிலையம் திடீர் வெள்ளத்துள் அமிழ்ந்து உள்ளது. இங்கிருந்த 50 வயோதிபரும், 30 பராமரிப்பாளரும் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டு உள்ளனர். . சிலவேளைகளில் இங்கு மணித்தியாலத்துக்கு 4 அங்குல மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய […]

இலங்கை lower-middle வருமான நாடாக வீழ்ச்சி

உலக வங்கி (World Bank) உலக நாடுகளை அவற்றின் GDP வருமானத்துக்கு ஏற்ப low income நாடு, lower-middle income நாடு, upper-middle income நாடு, high income நாடு என நாலு வகைகளுள் அடக்கும். . கடந்த வருடம் ஆளுக்கு $4,060 GDP யை கொண்டிருந்த இலங்கை தற்போது ஆளுக்கு $4,020 GDP யை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் இதுவரை upper-middle income நாடக இருந்த இலங்கை தற்போது lower-middle income நாடாக வீழ்ச்சி அடைந்துள்ளது. […]

ஹாங் காங் மக்களுக்கு பிரித்தானியாவின் வலுவற்ற குடியுரிமை

அண்மையில் சீன மத்திய அரசு ஹாங் காங் பகுதியின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை மாற்றி இருந்தது. இச்செயலை வெறுத்த பிரித்தானியா சீனாவுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் சுமார் 3 மில்லியன் ஹாங் காங் மக்களுக்கு பிரித்தானிய குடியிருமை வழங்க அறிவித்து உள்ளது. . உண்மையில் பிரித்தானியாவின் மேற்படி திட்டம் ஹாங் காங் வாசிகளுக்கு பெரிதும் நன்மை வழங்கப்போவது இல்லை என்று கருதப்படுகிறது. . முதலில் பிரித்தானியாவின் மேற்படி சலுகை சுமார் 3 மில்லியன் மக்களுக்கே பயன்படும். சுமார் […]

மயன்மார் மண்சரிவுக்கு 162 பேர் பலி

மயன்மாரில் (Myanmar) இடம்பெற்ற மண் சரிவுக்கு குறைந்தது 162 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 54 பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டும் உள்ளனர். இந்த சம்பவம் Hpakan என்ற மலைப்பகுதியான இடத்தில் இடம்பெறுள்ளது. . உள்ளூர் நேரப்படி வியாழன் பிற்பகல் 7:15 மணியளவில் இந்த சரிவு இடம்பெறுள்ளது. சரிவுக்கு முன் இப்பகுதில் கனத்த மழை பெய்துள்ளது. . Jade கற்களை அகழும் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. பலியானோர் அகழ்வை பிரதான தொழிலாக செய்யாதோர். வளர்ந்து […]

ரம்புக்கு எதிராக எழும் உள்வீட்டு உறவுகள்

அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு எதிராக அவரின் உள்வீட்டு உறவுகள் பலர் எழுந்து உள்ளனர். இவர்களுள் ரம்பின் Rebulican கட்சி உறுப்பினர்களும், ரம்பின் உறவினரும் அடங்குவர். இந்த உள்வீட்டு எதிரிகளின் எதிர்ப்பு எதிர் கட்சியான Democratic கட்சியினரின் எதிர்ப்பிலும் உக்கிரமானது. . ஜூலை மாதம் 28 ஆம் திகதி 55 வயதான Mary L. Trump (ஒரு psychologist) என்ற உறவினர் எழுதிய Too Much and Never Enough: How My Family Created the World’s […]

கரோனாவால் அழியும் விமானசேவை நிறுவனங்கள்

கரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளன துறை விமானசேவையே. விமான போக்குவரத்துக்கள் தடைப்பட, விமான சேவைகள் போதிய பயணிகள் இன்றி நட்டத்தில் இயங்க ஆரம்பித்தன. . Aeromexico என்ற மெக்ஸிக்கோ விமான சேவை இன்று முறிந்தது. முதலீட்டாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க Airmexico இன்று அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிந்து உள்ளது. 1934 ஆம் ஆண்டு Aeronaves de Mexico என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையில் தற்போது 68 விமானங்கள் உள்ளன. அத்துடன் இது மேலும் […]

எதிர்ப்புகள் மத்தியில் ஹாங் காங்கில் புதிய சட்டம்

ஹாங் காங் இளையோர் மற்றும் மேற்கு நாடுகள் முன் வைத்த பலமான எதிர்ப்புகள் மத்தியிலும் சீன மத்திய அரசு ஹாங் காங் மீதான தனது புதிய சட்டங்கள் சிலவற்றை செய்வாய்க்கிழமை இரவு 11:00 மணி முதல் நடைமுறை செய்கிறது. புதிதாக நடைமுறை செய்யப்படும் சட்டங்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனைகளை வழங்க முடியும். . புதிய சட்டப்படி 1) பிரிவினைவாதம் (secession), 2) அரசுக்கு எதிராக செயற்படல் (subversion), 3) பயங்கரவாதம் (terrorism), 4) அந்நியருடன் […]