Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

iPhone, iPad போன்ற இலத்திரனியல் பொருட்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (stock market capital) இன்று புதன் $2 டிரில்லியனை ($2,000,000,000,000) அடைந்துள்ளது. அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று இந்த பெறுமதியை அடைவது இதுவே முதல் தடவை. இன்று Apple நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை $467.77 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது சுமார் 4.355 பில்லியன் Apple பங்குகள் சந்தையில்  உள்ளன. 2018 ஆம் ஆண்டில் Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 […]

பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) சட்டத்துக்கு முரணான முறையில் facebook ஆதவு செய்கிறது என்று அமெரிக்காவின் Wall Street Journal (WSJ) ஆய்வு கட்டுரை ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு கட்டுரைக்கு WSJ தற்போதைய, மற்றும் முன்னாள் facebook ஊழியர்களுடன் WSJ உரையாடி தகவல்களை பெற்று உள்ளது. facebook இணையத்தில் பொய்யான செய்திகள் பதிவுசெய்தல், வன்முறையை தூண்டும் செய்திகளை பதிவு செய்தல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறான பதிவுகள் facebook ஊழியரால் நீக்கப்படும். […]

மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் (Mali) இன்று கீழ்மட்ட இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கீழ்மட்ட இராணுவத்தினர் அந்நாட்டின் சனாதிபதி Ibrahim Boubakar Keita என்பவரையும், பிரதமர் Boubou Cisse என்பவரையும் இன்று செவ்வாய் காலை கைது செய்தும் உள்ளனர். கூடவே இராணுவ உயர் அதிகாரிகளும் தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் Bamako வில் சில அரச கட்டிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. Colonel Sadio Camara என்பவரே இந்த கிளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் Mahmoud […]

முன்னாள் ஸ்பெயின் அரசர் UAE யில் தஞ்சம்

முன்னாள் ஸ்பெயின் அரசர் UAE யில் தஞ்சம்

முன்னாள் ஸ்பெயின் (Spain) அரசர் Juan Carlos I ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பும் நோக்கில் UAE யில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ஸ்பெயின் அரச குடும்பம் இன்று திங்கள் கூறியுள்ளது. இவர் கடந்த 3 ஆம் திகதி UAE சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அரசர் மீது ஸ்பெயின், சுவிற்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் விசாரணை செய்கின்றன. முன்னாள் அரசர் Corinna zu Sayn-Wittgenstein-Sayn என்ற டென்மார்க் பெண் ஒருவருக்கு பெரும் தொகை பணம் […]

சீனாவுக்கு போட்டியாக இந்தியா மாலைதீவில் பாலம்

முன்னர் Abdulla Yameen னின் சீன ஆதரவு கட்சி மாலைதீவில் ஆட்சியில் இருந்தவேளை சீனா Male என்ற மாலத்தீவின் தலைநகருக்கும், மாலைதீவின் பிரதான விமான நிலையத்துக்கும் இடையில் பாலம் ஒன்றை சீனா அமைத்து வழங்கியது. தற்போது அங்கு ஆட்சியில் இருப்பது Ibrahim Solih தலைமையிலான இந்திய ஆதரவு கட்சி. அதனால் இந்தியா Male நகரை மேற்கே உள்ள மேலும் 3 தீவுகளுடன் இணைக்கும் பாலம் ஒன்றை அமைக்கவுள்ளது. Villingili, Gulhifahu, Thilafushi ஆகிய தீவுகளையே மேற்படி 6.7 […]

ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஈரான் மீதான Resolution 2231 ஆயுத தடையை நீடிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை மறுத்துவிட்டது. இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இன்று வெள்ளி மாலை தெரிவித்து உள்ளார். மொத்தம் 15 நாடுகளை கொண்ட சபையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட மொத்தம் 11 அங்கத்துவ நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால் வெற்றிக்கு தேவையான 9 வாக்குகள் பெறப்படவில்லை. அமெரிக்காவும், Dominican Republican னும் மட்டுமே அமெரிக்காவுக்கு ஆதரவாக […]

ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

Bella, Bering, Pandi, Luna ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்கள் ஈரானின் எண்ணெய்யை வேனேசுஏலாவுக்கு (Venezuela) எடுத்து செல்கையில் அமெரிக்கா அவற்றை கைப்பற்றி உள்ளது. இந்த கப்பல்கள் சுமார் 1.1 மில்லியன் பரல்கள் எண்ணெய்யை காவி சென்றுள்ளன. இந்த செய்தியை அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்து உள்ளது. இந்த கப்பல்கள் ஈரானின் இராணுவ பாதுகாப்பு இன்றியே பயணித்தன. இந்த 4 கப்பல்களும் தற்போது Texas மாநிலத்து Houston நகரின் கரை நோக்கி நகர்கின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த […]