இந்தியாவில் கரோனா தொற்றியோர் 4 மில்லியன்

இந்தியாவில் கரோனா தொற்றியோர் 4 மில்லியன்

இன்று சனிக்கிழமை வரை இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 4 மில்லியன் (4,023,179) ஆக அதிகரித்து உள்ளது. உலக அளவில் கரோனா தொற்றியோர் தொகையில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா கரோனா தொற்றியோர் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தை அடையலாம் சனிக்கிழமை மட்டும் இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 86,432 ஆல் அதிகரித்து உள்ளது. வெள்ளிக்கிழமை அத்தொகை 93,000 ஆல் அதிகரித்து உள்ளது. கரோனாவுக்கு பலியானோர் தொகையிலும் இந்தியாவே 3 ஆம் […]

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார். மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம். ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது […]

சீனா இன்று வெள்ளி ஏவிய இரகசிய விண்கலம்

சீனா இன்று வெள்ளி ஏவிய இரகசிய விண்கலம்

சீனா இன்று வெள்ளிக்கிழமை காலை விண்கலம் ஒன்றை இரகசியமாக ஏவி உள்ளது. இதன் நோக்கத்தை அறிய முயற்சிக்கின்றது மேற்கு. இது மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய, பயணிகளை கொண்டிராத விண்விமானமாக (space plane) இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இன்றைய ஏவலில் பங்குகொண்ட அனைவரையும் இது தொடர்பான விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்றும், படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்றும் பணிக்கப்பட்டு உள்ளது. சீன அரசும் முழுமையான விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. இந்த விண்விமானம் சிலகாலம் விண்ணில் பயணித்து […]

சூறாவளிக்குள் தொலைந்த கப்பலில் 43 பணியாளர், 5867 மாடுகள்

சூறாவளிக்குள் தொலைந்த கப்பலில் 43 பணியாளர், 5867 மாடுகள்

நியூசிலாந்தில் இருந்து சீனாவுக்கு 5,687 மாடுகளை ஏற்றி சென்ற Gulf Livestock 1 என்ற கப்பல் அப்பகுதியில் நகரும் Maysak என்ற சூறாவளிக்குள் அகப்பட்டு தொலைந்து உள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 43 பணியாளர் இருந்துள்ளனர். அவர்களில் 39 பேர் பிலிப்பீன் நாட்டினர், 2 பேர் நியூசிலாந்து நாட்டினர், ஒருவர் அஸ்ரேலியர், இன்னொருவர் சிங்கப்பூர் வாசி. தற்போது ஒருவர் மட்டும் ஜப்பானிய படைகளால் மீட்கப்பட்டு உள்ளார். அவர் பிலிப்பீன் நாட்டவர். இவர் மிதக்கும் கவசத்தை அணிந்து இருந்துள்ளார். […]

1961 அணு குண்டுவீச்சு வீடியோவை வெளியிட்டது ரஷ்யா

1961 அணு குண்டுவீச்சு வீடியோவை வெளியிட்டது ரஷ்யா

சோவியத் யூனியனின் RDS-220 அணு குண்டே மனிதத்தால் வெடிக்கவைக்கப்பட்ட மிகப்பெரிய குண்டு. இதன் வெடிப்பு 50 மெகா தொன் (50,000,000 தொன்) TNT வெடிமருந்துக்கு நிகரானது. இந்த குண்டு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் வீசப்பட்ட இரண்டு குண்டுகளின் மொத்த வலுவிலும் 1,400 மடங்கு பெரியது. ஹிரோஷிமா குண்டு 15 கிலோ தொன் (15,000 தொன்) TNT க்கும், நாகசாகி குண்டு 21 கிலோ தொன் TNT க்கும் நிகரானவை. இந்த பரிசோதனையை சோவியத் 1961 ஆம் […]

தாய்லாந்தில் சீன கால்வாய், அந்தமானில் இந்திய தளம்

தாய்லாந்தில் சீன கால்வாய், அந்தமானில் இந்திய தளம்

சிங்கப்பூர்/மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள மலாக்கா நீரினை (Malacca Strait) நீண்ட காலமாக வர்த்தகத்துக்கு முக்கிய பாதையாக இருந்து வந்துள்ளது. 1292 ஆம் ஆண்டில் இத்தாலியரான மார்கோ போலோ (Marco Polo) இவ்வழியூடே தூரக்கிழக்கு சென்று இருந்தார். தற்போது ஆண்டு ஒன்று சுமார் 80,000 வர்த்தக கப்பல்கள் இவ்வழியே செல்கின்ற. அதனால் இவ்வழி மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. அதனால் சீனா தாய்லாந்தை ஊடறுத்து ஒரு மாற்றுவழி அமைக்க முயக்கிறது. அவ்வாறு சீனாவின் கடுப்பாட்டுள் பிரதான கால்வாய் ஒன்று இந்து சமுத்திரத்தை தூரகிழக்குடன் இணைப்பதை […]

இந்திய காலாண்டு பொருளாதார வீழ்ச்சி 23.9%

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் முடிவடைந்த 2002-2021 வர்த்தக ஆண்டின் முதல் காலாண்டு (ஏப்ரல்-மே-ஜூன்) பொருளாதாரம் 23.9% ஆல் வீழ்ந்து உள்ளதாக இந்தியாவின் National Statistical Office கூறியுள்ளது. கடந்த 24 வருடங்களில் இந்தியாவில் இடம்பெறும் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி இதுவாகும். கரோனாவும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும், கரோனாவுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தது. ஆனால் இந்திய அரசு அதை மறைந்து வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் […]

TikTok விற்பனையை முடக்கும் புதிய சீன சட்டம்

TikTok விற்பனையை முடக்கும் புதிய சீன சட்டம்

கடந்த வெள்ளிக்கிழமை சீனா நடைமுறை செய்த புதிய தொழில்நுட்ப ஏற்றுமதி சட்டம் மூலம் சீனாவின் TikTok app தனது அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுவதை சீன அரசின் கட்டுப்பாட்டுள் எடுத்துள்ளது.சீனாவின் புதிய ஏற்றுமதி சட்டப்படி TikTok கின் அமெரிக்க பிரிவு அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படுவது சீன அரச அனுமதியை பெறவேண்டும். TikTok அமெரிக்காவின் பிரிவு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றால் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவில் அதன் செயல்பாடு தடை செய்யப்படும் என்று ரம்ப் கூறியிருந்தார். TikTok […]