அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது சீனாவுடனான பொருளாதார மோதலின் ஒரு அங்கமாக TikTok, WeChat ஆகிய smart phone app களை இன்று ஞாயிரு முதல் தடை செய்ய முனைந்தார். அதை எதிர்த்து அமெரிக்காவில் WeChat ஐ பயன்படுத்தும் மக்கள், பெருபாலும் அமெரிக்க சீனர், WeChat Users Alliance என்ற அமைப்பின் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். WeChat வழக்கை செவிமடுத்த San Francisco நகரில் உள்ள United States District Court நீதிபதி Laurel Beeler […]
கடந்த மாதம் இந்தியாவின் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் பாரிய மழை வீழ்ச்சியை கொண்டிருந்தன. அதனால் அங்கு வெங்காய உற்பத்தி அழிந்து, இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்து இருந்தது. அதிகரிக்கும் வெங்காய விலையை கட்டுப்படுத்த இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை கடந்த திங்கள்கிழமை தடை செய்திருந்தது. முன்னறிவிப்பு இன்றி இந்தியா செய்த ஏற்றுமதி தடையால் பங்களாதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளில் வெங்காய விலை திடீரென பல மடங்கால் அதிகரித்தது. பங்களாதேசத்தில் Tk 40.00 (Taka, பங்களாதேச […]
தமிழ்நாட்டின் ஆனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி ஆலயத்தில் இருந்து 1978 ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதை, அனுமார் சிலைகள் பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு திரும்புகின்றன. இந்த பித்தளை சிலைகள் 15 ஆம் நூற்றாண்டு விஜயநாகரா (Vijayanagara) ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சிலைகளின் புகைப்படம் ஒன்று British Antique Dealers’ Association என்ற நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் இணையத்தில் இருப்பதை இந்தியாவின் India Pride Project என்ற அமைப்பு கண்டுள்ளது. […]
தற்போது உலக அளவில் 30,065,728 பேர் கரோனா தொற்றி உள்ளனர். உலக அளவில் கரோனாவுக்கு மரணித்தோர் தொகை 944,604 ஆக உள்ளது. தற்போது அமெரிக்காவே அதிக கரோனா தொற்றியோரை கொண்டுள்ளது. அங்கு 6.674 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் அங்கு 197,615 பேர் பலியாகியும் உள்ளனர். ஆனால் இந்தியாவின் கரோனா தொற்றியோர் தொகை விரைவில் அமெரிக்காவின் கரோனா தொற்றியோர் தொகையை மீறலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தற்போது 5,118,253 பேர் கரோனா தொற்றி உள்ளனர். […]
இந்தியாவின் தாஜ் மகாலுக்கு அருகில் கட்டப்படும் Mughal Museum தின் பெயரை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி (Yogi Adityanath) Shivaji Museum என்று மாற்றியுள்ளார். இந்தியாவை ஆக்கிரமித்தோர் hero கள் ஆக முடியாது என்கிறார் யோகி. மேற்படி நூதனசாலைக்கான கட்டுமான வேலைகள் 2016 ஆம் ஆண்டு அப்பொழுது உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் Akhilesh Yadav காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. இந்த நூதனசாலை 6 ஏக்கர் நிலத்தில், $22 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது. இதில் மோகல் காலத்து […]
இலங்கையின் தென்கிழக்கு கடலில் இந்த மாதம் 3 ஆம் திகதி தீ பற்றிக்கொண்ட New Diamond என்ற VLCC (very large crude carrier) கப்பல் அதிகாரி (captain) மீது இலங்கை அரசு வழக்கு தொடரவுள்ளது. பனாமாவில் Porto Emporios Shipping Inc என்று பதியப்பட்ட, கிரேக்கத்தில் New Shipping Limited என்ற உரிமை நிறுவனத்தை கொண்ட இந்த கப்பல் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் மசகு எண்ணெய்யை எடுத்து செல்கையில் தீ பற்றி இருந்தது. […]
மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் (Panama) Guna Yala என்ற வடகிழக்கு மாநில ஆளுநர் Erick Martelo பயணித்த காரில் 79 போதை பொதிகள் இருந்தமை அந்நாட்டு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படியில் அவர்கள் கார் ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறுத்தி உள்ளனர். அந்த காரிலேயே 79 பொதிகள் போதை இருந்துள்ளன. அந்த காரில் பயணித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இருவருள் ஒருவர் Erick Martelo என்ற ஆளுநர். […]
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது (Brexit) தொடர்பான சட்டத்தை தற்போதைய பிரித்தானிய பிரதமர் தன்னிச்சையாக மாற்றி அமைக்க முயல்வதை 5 முன்னாள் பிரித்தானிய பிரதமர்கள் நிராகரித்து உள்ளனர். Tory கட்சி பிரதமர்களான David Cameron, Teresa May, John Major, Labour கட்சி பிரதமர்களான Tony Blair, Gordon Brown ஆகியோரே தற்போதைய பிரதமர் Boris Johnson க்கு எதிராக கிளர்ந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற […]
சீனாவின் TikTok செயல்பாடுகளை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியதன் பின் சில அமெரிக்க நிறுவனங்கள் அதன் அமெரிக்க செயற்பாட்டை கொள்வனவு செய்ய முன்வந்திருந்தன. Microsoft நிறுவனமும், Oracle நிறுவனமும் அவற்றுள் இரண்டு. ஆனால் TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவின் ByteDance நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஆனாலும் இந்த விற்பனை ஒரு முழுமையான விற்பனை அல்ல. TikTok உள்ளே இருக்கும் software, அதில் இருக்கும் தொழில்நுட்ப algorithm என்பன அமெரிக்காவுக்கு விற்பனை […]
சீனா சென்று வைத்தியர்களாக கல்வி கற்ற இந்தியர் தாம் இந்தியா திரும்பும்போது கடுமையான தேர்வு முறைகள் மூலம் புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றனர். அரசியல் நோக்கம் கொண்ட இந்த புறக்கணிப்பை எதிர்த்து சீனாவில் கற்ற இந்திய வைத்தியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். 2003 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டவர் சீனா சென்று 6 ஆண்டுகள் மருத்துவம் கற்கும் வசதியை சீனா ஏற்படுத்தி இருந்தது. 2004 ஆம் ஆண்டு 150 இந்தியர் சீனா சென்று வைத்தியர்களாக கல்வி கற்றனர். விரைவில் இந்த […]